என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.
    ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்கள் உள்ளன. இந்த வேதங்களின் துணைகொண்டு, பிரம்மதேவன் படைப்புத் தொழிலை செய்து வந்தார். இந்த நிலையில் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மாவிடம் இருந்து அந்த 4 வேதங்களையும் திருடிச் சென்று ஒளித்து வைத்தனர். இதன் காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு, குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய -சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கச் சென்றார்.

    அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை வென்று, வேதங்களை மீட்டார். இதையடுத்து உலகம் இருள் நீங்கி ஒளிபெற்றது. அசுரர்கள் கை பட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்று பட்டு வேதங்கள் புனிதமடைந்தன.

    அசுரர்களுடன் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரம் குறையாமலே இருந்தார். அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார்கள். இதனால் அவர் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்விக்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியின் அருளோடு செல்வமும் சேரும் என்பதாலேயே, லட்சுமியை தனது இடபாகத்தில் வைத்திருக்கிறார், ஹயக்ரீவர். இவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

    எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.

    மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.
    தீராத நோய் உள்ளவர்கள், கஷ்டம், திருமண தடை, வீடு கட்ட முடியாதவர்கள் சிவபெருமானை நினைத்து வழிபட்டால் நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறையும்.
    மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை மட்டும் உணவு அருந்தி சிவபெருமானை நினைத்து வழிபட்டால் நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும் நோய் நீங்கும். தொடர்ந்து மாதம் தோறும் இந்த விரதத்தை இருந்து பாருங்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத வியாதியாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கட்டாயமாக உங்கள் கண்களுக்குப் புலப்படும் என்பது உண்மை. உடல்நிலை சரியில்லாதவர்கள் சாப்பிடாமல் இருப்பது கஷ்டம் தான். முடிந்தவரை பழம் பால் குடித்து மட்டுமாவது விரதத்தை மேற் கொள்ளுங்கள். 

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றதா? சூரிய உதயத்திற்கு முன்பாக தீபமேற்றி 48 நாட்கள் தொடர்ந்து உங்கள் வேண்டுதல்களை வையுங்கள். நிச்சயம் வெற்றிதான். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் வெற்றியை அடைந்து விடுவீர்கள். 

    உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதையுமே சந்தித்ததில்லையா? எதிர்பாராத திருப்பத்தை பெறவேண்டுமா? ‘அம்மாவாசை அன்று திங்கட்கிழமை’ அல்லது திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம். இரண்டுமே ஒன்றுதான். அந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டால் நிச்சயமாக உங்களது வாழ்க்கையில் திருப்பம் அமையும். 

    இறைவனுக்கு அடுக்கு அரளி பூ, அடுக்கு செம்பருத்தி பூ இவைகளை வைத்து பூஜை செய்து வந்தால் உங்களது தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது விலகிவிடும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான வளர்ச்சியையும் உங்களுக்கு இந்த வழிபாடு நிச்சயமாக காட்டும். நீங்களே அறிவாற்றல் மிக்கவர்களாக மாறிவிடுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதன்கிழமை அன்று பச்சைப்பயறு, மரிக்கொழுந்து இவைகளை புதன் பகவானுக்கு தொடர்ந்து படைத்து வந்தால் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் புதன் கிரக கோளாறுகள் விலகும். சந்திரனின் அருளை முழுமையாகப் பெற வேண்டுமென்றால் பாரிஜாதம், மல்லி, அல்லி போன்ற வெள்ளை நிற பூக்களை சந்திரனுக்கு சூட்டி வழிபட வேண்டும். இதன்மூலம் அதிர்ஷ்டமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும். அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று உங்களை யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். 

    கையில் பணம் இருந்தும் வீடு கட்ட முடியாதவர்கள், 6 வாரம் முருகன் கோவிலுக்கு சென்று, அரளி பூ அர்ச்சனை செய்து, 6 ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கித் தந்தால் நிச்சயமாக கைமேல் பலன் உண்டு. உங்களது கஷ்டம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் திங்கட்கிழமை தோறும் தேங்காய் எண்ணெய் கொண்டு விநாயகருக்கு தீபம் ஏற்றி வாருங்கள். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இருக்கும் எந்த ஒரு தடையையும் இந்த தீபம் நீக்கிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களாக நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் 21ஆவது வாரம் உங்கள் கையில் நல்ல வேலை நிச்சயம். ஐந்து மாதங்கள் ஆகும் என்று யோசிக்காதீர்கள். வருடக்கணக்கில் கூட பல பேர் வேலை தேடி கிடைக்காமல் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நீல சங்கு பூவை இறைவனுக்கு சமர்ப்பித்தால் எப்படிப்பட்ட தரித்திரமாக இருந்தாலும் அது நீங்கிவிடும். சனி பகவானின் அருளாசி பெற அவருக்கு நீல சங்குப்பூ சூட்டுவது நல்ல பலனைத் தரும். நம் வீட்டு பூஜை அறையில் மனோரஞ்சித பூவை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபட்டால், கணவன் மனைவிக்கு இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்துவிடும். எப்படிப்பட்ட பூவாக இருந்தாலும் மொட்டுக்களாகவே இருந்தால், அதை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய கூடாது. மலரும் பூக்கள் தான் இறைவனுக்கு சிறந்தது. 

    கடைசியாக ஒரு குறிப்பு. நம் முன்னோர்கள் இதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மாதத்தின் கடைசி மூன்று நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவது அவ்வளவு சிறந்ததல்ல. (அதாவது சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரண்டு மாதங்களிலும் கடைசியில் வரும் மூன்று நாட்கள்) தமிழ் வருடத்தின் கடைசி 15 நாட்கள்(பங்குனி கடைசியில்) எந்த ஒரு சுப காரியத்தையும் செய்யக்கூடாது. முடிந்தவரை வீட்டின் விசேஷங்களை கூட வைக்காமல் தடுப்பது நன்மை தரும். புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.

    ஒரு குழந்தை ஜனனமானவுடனேயே நேரத்தைக் குறித்து என்ன நட்சத்திரத்தில் பிறந்துள்ளது என்று பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குழந்தையின்  ஜாதகத்தில் பாலாரிஷ்டம் இருந்தால் அதனை ஜோதிடம் தெளிவாகக் கூறி, அதற்குரிய பரிகாரத்தையும், முன் வைக்க வேண்டும். அடிக்கடி கரு தங்காமல்,  கருச்சிதைவு ஏற்படுபவர்களும், குழந்தை பிறந்த சில நாளிலேயே இறந்து, மீண்டும் பிறக்கும் குழந்தை நீண்டகாலம் வாழ `மிருத்யுஞ் ஹோமம்'' செய்யலாம்.  பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யலாம்.

    சக்கரத்தாழ்வாரை வழிபடுவதும் நல்லது. விஷ்ணு சகஸ்வரநாமம், லலிதா நாமம் பாராயணம் செய்யலாம். பாலாரிஷ்ட தோஷத்தைப் போக்கும் அன்னையாக  இருப்பவள் ஸ்ரீ பால சௌந்தரி என்றும் அம்பிகை. இவள் திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருவாசி என்றும் திருத்தலத்தில் வீற்றிருந்து  அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் பாலை குழந்தைகளுக்கு மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் கொடுத்துவர பாலாரிஷ்ட  தோஷம் நிவர்த்தியாகும்.

    ராமேஸ்வரத்தில் காலையில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொண்டு கடலில் தீர்த்தமாடி விட்டு. பின்னர் கோயிலில் இருக்கும் தீர்த்தங்களிலும்  நீராடிவிட்டு சுவாமியையும், அம்மனையும் தரிசியுங்கள், தோஷம் விலகும். பாலாரிஷ்ட தோஷம் நீங்க குழந்தையை முருகன் கோவிலில் சுவாமிக்கு தத்துக்  கொடுத்து வழிபடலாம். குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் சொல்லி. அர்ச்சனை செய்து சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடி மரத்தின் முன்போ  அல்லது சந்நிதியின் முன்போ, குழந்தையைக் கிடத்தி, முருகப்பெருமானிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபட வேண்டும்.

    பின் அர்ச்சகரை அழைத்து குழந்தையை எடுத்துத் தரச் சொல்லிப் பெற வேண்டும். தட்சனையாக, ஒருபடி தவிட்டை கொடுப்பது, முன்பு வழக்கமாக இருந்தது.  இப்போது உங்களால் எது முடியுமோ அதனை தட்சனையாகக் கொடுக்கலாம். இந்தப் பரிகாரத்தைச் செய்வதின் மூலம், பாலாரிஷ்ட தோஷம் நீங்கி விடுவதோடு  மட்டுமில்லாமல், முருகப் பெருமாள் குழந்தையைக் காத்து அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

    நமது குறை தீர்த்து, ஆயுள் பலமுள்ள குழந்தைகள் பிறக்க, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று முறைப்படி  வழிபடுவது நல்லது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உள்ளவர்கள். இத்திருத்தலத்தில் உள்ள சிவன், அம்மன், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து,  புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால் தோஷம் நீங்கிப் பிறக்கும் குழந்தைகள் இறக்காது என்று இதனால் பலனடைந்தவர்கள் சிலாகித்துக் கூறுகின்றனர்.

    பால கிருஷ்ண விக்ரகம் செய்து தானமாகக் கொடுப்பதன் மூலமும், பாலாரிஷ்ட தோஷம் நீங்கும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதற்கேற்ப, பசித்த  ஏழைகளுக்கு, பசியாற உணவிடுவது சிறப்பு. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, ஆண்டவன் தடுப்பதை யாரும் கொடுத்து விட முடியாது  என்பதற்கேற்ப அறிவுள்ள, ஆயுள் பலமுள்ள குழந்தை பிறக்க ஆண்டவனை வழிபடுங்கள், மகிழ்வுடன் வாழுங்கள்.
    நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
    நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலனளிக்கும்.

    மூன்று வகையான கர்மாக்கள் உள்ளது. அவை ’த்ருத கர்மா’ தெரிந்தே செய்த பாவம், ’த்ருத அத்ருத கர்மா’ தெரிந்தே செய்த தப்பினை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பது, ’அத்ருத கர்மா’ தெரியாமல் செய்த தவறு.

    பரிகாரங்கள்

    த்ருத கர்மா

    தெரிந்தே முன் ஜென்மத்தில் பிறருக்கு துன்பம் தரக்கூடிய குற்றங்களை செய்த பாவமாகும். பிறரின் சொத்தினை அபகரித்து கஷ்டப்படுத்தியது, பணத்திற்காக கொலை செய்தது, தாய் தந்தையரை கஷ்டப்படுத்தியது இவற்றிற்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன், குரு ஆகியோர்க்கு தொடர்போ அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அனுபவித்துதான் தீர வேண்டும். பாவங்கள் அடுத்த தலைமுறையினரை பாதிக்காமல் இருக்க அன்னதானம் அடிக்கடி செய்யவேண்டும்.

    த்ருத அத்ருத கர்மா

    முற்பிறவியில் நல்லது நடக்கும் என நினைத்து செய்திருப்போம். ஆனால் அது தீங்கினை விளைவித்திருக்கும். தீயவர்களின் குணம் அறியாமல் நாம் செய்த உதவி மற்றவர்களை பாதித்ததை அறிந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருப்போம். இந்த ஜென்மத்தில் ஜாதகரீதியாக தெய்வபரிகாரங்கள் செய்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோர்க்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும்.

    அத்ருத கர்மா

    மன்னிக்ககூடிய சிறிய குற்றங்களை தெரியாமல் மறுபிறவியில் செய்வதாகும். இதற்கு பரிகாரங்கள் தேவை இல்லை. மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டாலே போதுமானதாகும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.
    ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டிற்கு உகந்த நாள் என சொல்லப்படுகிறது.
    நவக்கிரகங்களில் ஒன்றான ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை ஆகும். அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டிற்கு உகந்த நாள் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம்.. ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.

    அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் நாம் அவள்முன் வைத்தை பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.பொதுவாக திருமணம், குழந்தை வரம் வேண்டி பெண்கள் துர்க்கை அம்மனுக்கு ஞாயிற்று கிழமைகளில் எலுமிச்சை விளக்கேற்றி பிரார்த்தனை செய்து, வழிபட்டால் விரைவில் பலன் பெறாலாம் . அம்மன் வழிபாட்டுக்கு உகந்த செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    துர்க்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணு எடுத்த அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளின் வழிபாட்டுக்கு உகந்தவையாகும். துர்க்கைக்கு உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.

    நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கல் துன்பம் தீர ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், துர்க்கை சன்னிதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் ஆக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நெய் ஊற்றி, 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும்.

    அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.இந்த பூஜையின்போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து வணங்க வேண்டும். பூஜைகள் முடித்தபின் ஆலயத்திலேயே 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

    அப்பொழுது, துர்க்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிச்சையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.
    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும்.
    திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார். இந்த ஆலயம் குரு தலமாக விளங்குவது எப்படி புராண கதையை தெரிந்து கொள்வோம்.

    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம். இது வியாழ தலம். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும். மீனவர் குலத்தில் பிறந்த இந்திரனின் மகள் தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், இன்றைக்கும் மீனவர்கள் முருகனை, மச்சான் சாமி என்று அழைக்கின்றனர். சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.

    தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். இதன் விளைவாக தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. சூரபத்மனுக்கு பயந்து தேவர்கள் ஓடி மறைந்தனர். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை.

    தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன். இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே கலக்கத்துடன் சென்று கொண்டிருந்தார் குருபகவான். சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்த காட்டுக்குள் வந்தார் குருபகவான். அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவனை மனத்தில் இருத்தி தவத்தில் மூழ்கினார்.

    சூரனை அழிப்பதற்காகவே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னியாக உதித்த குமாரனைக் கண்டார் குரு. முருகனுக்கு உதவி செய்யஅன்னையின் சிலம்பில் இருந்து வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், வீரதீரன் ஆகிய நவ வீரர்கள் தோன்றினர்.

    யுத்தம் செய்வதற்கான நேரம் வந்தது. முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, குருபகவான் தவமிருக்கும் கானகத்துக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள். எதிரியைத் தாக்குவதற்கு முன்பு, அவனது பலம் பலவீனம் என்ன என்பதை அறிந்துகொண்டு போருக்குச் செல்வதே விவேகமான செயல். நாமும் சூரபத்மனைப் பற்றியும் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பலம் பலவீனத்தை அறியவேண்டும். அதன்பின் போரைத் தொடங்கலாம் என்றார் குமரன்.

    தேவ சேனாதிபதியாக முருகவேள் நியமிக்கப்பட்டுவிட்டார். அவருக்குத் துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்கத் தயாராக இருந்தார்கள். தேவாசுர யுத்தம் மூளப்போகிறது. மந்திர ஆலோசனை நடந்தது. தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.

    குரு பகவான் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், அங்கிருந்து விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள். கருணை தவழும் முகமும், சத்துவமான சாந்த குணமும் கொண்டவர்கள். காவி உடை அணிந்த நாம் அடியவர்களின் துன்பத்தைப் போக்குபவர்கள். அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் நாம் தூய திருநீறு அணிந்திருப்பவர்கள்.யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்று வரம் அளித்துச் சென்றார்.

    அதுமுதல் திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார். எனவேதான் குரு பரிகார தலமாக திருச்செந்தூரை பரிந்துரை செய்கின்றனர் ஜோதிடர்கள்.

    திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளையை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும். சூரனை சம்ஹாரம் செய்து தெய்வானையை மணந்த முருகனை மச்சான் சாமி என்று மீனவர்கள் அழைக்கின்றனர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
    ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.
    ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும். எப்பொழுதும் சண்டையும், நிம்மதி இல்லாமலும் இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இதனை சரிசெய்வதற்கு கல் உப்பு மட்டுமே போதுமானது.

    கடலில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பிற்கு தெய்வீக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய கல்லுப்பைக் எட்டு திசைகளிலும் வைப்பதால், வீட்டில் இருக்கும் எட்டு திக்கிலும் இருந்து எதிர்மறை ஆற்றல் கிரகிக்கப்பட்டு பஸ்பமாகிவிடும். உங்கள் வீட்டில் இருக்கும் எட்டு திசைகளிலும் ஒரு சிறிய பௌலில் கல் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள். ஒவ்வொரு கல் உப்பு வைத்திருக்கும் இடத்திலும் ஒரு அகல் விளக்கில் வேப்பெண்ணை ஊற்றி தீபமேற்ற வேண்டும். வேப்ப எண்ணெயை தவிர வேறு எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. வேப்ப எண்ணெயில் இருக்கும் கசப்புத்தன்மை வீடு முழுவதும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொள்ளும்.

    இதை தீய சக்திகளின் ஆற்றல் அதிகமாக இருக்கும் அமாவாசை நாட்களில் செய்வது மிகவும் உத்தமம். ஏதாவது ஒரு அமாவாசை நாளில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தீபத்தை எரியவிட்டு மறுநாள் காலையில் பிரதமை திதியில் அந்த எட்டு பவுலில் இருக்கும் கல் உப்பையும் ஒன்றாக சேர்த்து நெருப்பிலிட்டு பஸ்பமாகி விடுங்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி விடும். எதிர்மறை ஆற்றல்கள் என்பது நம்மிடம் இருக்கும் நல்ல சிந்தனையை சீர்குலைத்து விடும்.

    புத்தி சரியான வழியை காட்டினாலும், மனம் அதை ஏற்க மறுக்கும். புத்தியும், மனமும் ஒன்றாக செயல்பட்டால் தான் நம்மால் நல்ல விஷயங்களை செய்ய முடியும். அதன் மூலம் நமக்கு நல்லதும் நடக்கும். அதனை செயல்பட விடாமல் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை நம்மிடம் இருந்து நீக்கவே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

    அதன் பின்னர் வீடு முழுவதும் தண்ணீரால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரிலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இவ்வாறு வீட்டை சுத்தம் செய்த பின் விளக்கேற்றி, தீப தூபங்கள் காண்பித்து வழிபாடுகள் செய்யுங்கள். இறை சிந்தனையில் மூழ்கி, முழு சிரத்தையுடன், பக்தியுடன் உங்களுடைய மன கவலைகளை இறக்கி வைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கும். எவ்வளவு துன்பங்களை நீங்கள் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவைகளில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.
    கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.
    உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

    நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.

    அதன் பின்பாக 48 நாட்கள் தொடர்ந்து கட்டி சாம்பிராணியோடு மற்ற மூன்று பொருட்களை தூபம் போட்டு வர வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒருசேர ஒரே அளவில் ஒரு பாட்டிலில் கலந்து வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளில் இந்த பொருட்கள் எல்லாம் பொடியுகவே கிடைக்கின்றது. இந்தப் பொடியை நீங்கள் போடத் தொடங்கிய நாளிலிருந்து 48 நாட்களுக்குள் நீங்கள் நிச்சயம் நம்பமுடியாத அளவிற்கு அதிசயம் உங்கள் வீட்டில் நடக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு வயிற்றுக்கு யாராவது மருந்து கொடுத்து இருந்தால் கூட, இந்த புகையை சுவாசிக்கும் போது அந்த மருந்து செயலிழக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

    மிகவும் அற்புதமான பல விஷயங்களின் பொக்கிஷம் தான் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் மூலிகைகள். கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஆற்றல் வாய்ந்த பொடிகள் தான் இந்த 3 பொடிகளும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த முறையை பின்பற்றி பயன் அடையலாம்.
    திருமண தடை, தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரிகள் தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் என பலரும், ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள்.
    சேலம் மாவட்டம் எருமாபாளையம் எம்.எஸ்.நகர் அருகே, பிரசித்திபெற்ற ஞான செல்வ சக்தி முனியப்பன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஞான செல்வ சக்தி முனியப்பன் மற்றும் கன்னிமார் தெய்வங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி, முன்பு விவசாய பூமியாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செழிக்கவும், கால்நடைகளுக்கு நோய் நொடிகள் பரவாமல் இருக்கவும் ஞான செல்வ சக்தி முனியப்பனை வழிபட்டு வந்துள்ளனர்.

    காலப்போக்கில் இந்தக் கோவிலில் பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது அந்தப் பகுதி மக்களின் முயற்சியால் ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஞான செல்வ சக்தி முனியப்பனை மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு, குறைவற்ற செல்வமும், ஞானமும் கிடைக்கும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மேலும் திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், ஞான செல்வ சக்தி முனியப்பனை 7 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு எலுமிச்சைப் பழத்தில் விளக்கு ஏற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் வழிபாடு செய்தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதன்படி திருமணம் முடிந்தவர்கள், தம்பதியர்களாக வருகை தந்து, முனியப்பனை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எதிரிகள் தொல்லை நீங்க, தொழில்வளம் பெருக, குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் என பலரும், ஞான செல்வ சக்தி முனியப்பனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் சாமிக்கு அரிவாள், கத்தி, சூலம், கண்மலர் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 3-வது புதன்கிழமை அன்று திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மூலவருக்கு பால், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நீண்ட நெடுநாள் கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள், முனியப்பனுக்கு தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக பொங்கல் வைப்பார்கள். இந்த விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்துச் செல்வார்கள்.
    சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
    சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.

    ஸ்ரீவாஞ்சியம்:

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது.

    இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது. இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.

    திருப்பைஞ்சீலி:

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம். பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.

    தருமபுரம்:

    காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் பாதையில் உள்ளது. மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்டத் திருத்தலம் இது. தருமன் (எமன்) வழிபட்டதால் இவ்வூர் தருமபுரம் ஆயிற்று.

    எனவே திருநள்ளாறு வந்து சனி பரிகாரம் செய்து போகின்றவர்கள், இத்திருத்தலம் வந்து வழிபட்டு போவதும் சிறந்த பலனையும், பரிகார நிவர்த்தியை அளிக்கும்.
    திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    திருவெண்காடு திருத்தலத்தில் புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம். பேச்சு வன்மை பலப்படும். ஜோதிடத்தில் வல்லுநராகலாம். நடனம், நாட்டியம், இசை வாத்தியக்கருவிகள், பாடுதல் முதலான கலைகளில் சிறந்து விளங்கலாம். எந்த வித்தையைக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ந்தவர் எனப் பேரெடுக்கலாம் என்கிறார்கள் ஆச்சாரயப் பெருமக்கள்.

    புதன் பகவான், வித்யாகாரகன். புத்தியைத் தெளிவுபடுத்தி அருளுபவன். அதேபோல், வித்தைக்கு அதிபதி பிரம்மா. திருவெண்காடு திருத்தலத்தில் பிரம்மாவின் திருச்சமாதியும் உள்ளது எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

    வித்தைக்கு அதிபதியான பிரம்மா, புத்தியைத் தந்தருளும் புதன் பகவான், மனோகாரகன் என்று சொல்லப்படும் சந்திரபகவான் முதலானோரையும் அவர்களுக்கு வரமருளிய பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரரையும் தரிசித்து அவர்களையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இந்தத் தலத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    சீர்காழிக்கு அருகில் 19 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    எந்த ஹோமம் செய்கிறோமோ இல்லையோ... ஆனால் வருடந்தோறும் ஒருமுறையாவது இந்த ஹோமத்தை கண்டிப்பாக செய்யவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
    புது வீட்டில் பால் காய்ச்சுவது அதாவது புதுமனைப் புகுவிழா நடத்துவது மாதிரியான விஷயங்களில் மட்டும்தான் கணபதி ஹோமம் நடத்தவேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எப்படி சாம்பிராணி புகையிட்டு, தீப ஆராதனைகள் செய்கிறோம். வாரந்தோறும் வீட்டில் இருப்பவர்களை நடு ஹாலில் அமரச் செய்து, திருஷ்டி சுற்றிப் போடுகிறோம் அல்லவா. மாதந்தோறும் வீட்டுப் பூஜையறையில் உள்ள பித்தளைத் தட்டு, விளக்கு, ஊதுபத்தி ஸ்டாண்ட் முதலானவற்றை கழுவி சுத்தம் செய்கிறோம்தானே. இதேபோல், வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு சாந்நித்தியம் திகழவும் இல்லத்தில் உள்ள தீயசக்திகள் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் வருடத்துக்கு ஒருமுறையேனும் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    குடும்பத்தில் யாருக்கேனும் ஏதேனும் உடலில் கோளாறு ஏற்பட்டு, மருந்து, சிகிச்சை என மருத்துவமனைக்குப் போய்க்கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தொழிலில் நஷ்டம், நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் என்று படுத்தி எடுத்துக்கொண்டே இருக்கும். ஏதோவொரு மனக்குழப்பம், மனதில் பயம் என்று நிம்மதி இல்லாத நிலையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு குடும்பத்துக்குத் தேவையான பொருளாதாரம் சிறப்பாகவே வந்துகொண்டிருக்கும். வீட்டில் எப்போது பார்த்தாலும் சந்தைக்கடை மாதிரி சண்டைக் கூச்சல் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

    இப்படியான விஷயங்கள் அனைத்தையும் சரி செய்யும் சக்தியும் வலிமையும் கணபதி ஹோமத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    வீட்டில், கணபதி ஹோமம் செய்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். நோய்த்தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள். மருந்து மாத்திரை செலவுகள் குறையத் தொடங்கும். வேலையில் உயர்வு, பதவியில் உயர்வு, சம்பளத்தில் உயர்வு என்ற நிலை தடதடவென நடந்தேறும். அதேபோல் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உறவுகளால் ஏற்படக் கூடிய பூசல்கள் குறையும். பரஸ்பரம் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.

    மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவார் கணபதி பெருமான். கேது திசை நடப்பவர்களுக்கு பாதிப்பு குறையும். திருமணம் முதலான சுப விசேஷத் தடைகள் அனைத்தும் விலகும். மங்கல காரியங்கள் நடக்கத் தொடங்கும்.

    கணபதி ஹோமத்தில், அக்னியில் இருந்து வெளியேறும் புகையானது இல்லத்தில் இருக்கிற தீயசக்திகளைத் துரத்தியடிக்கும். அக்கம்பக்கத்தாரின் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கப்படலாம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தனம், தானியச் சேர்க்கை நிகழும்.

    சொந்த வீட்டில் தான் கணபதி ஹோமம் செய்யவேண்டும் என்பதோ புதுமனைப் புகுவிழாவின் போதுதான் செய்யவேண்டும் என்பதோ இல்லை. வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட கணபதி ஹோமம் செய்யலாம். சொல்லப்போனால், வாடகை வீட்டில் கணபதி ஹோமம் செய்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    ×