search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெண்காடு ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில்
    X
    திருவெண்காடு ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில்

    புதன் பரிகாரத் தலம்... குழந்தை பாக்கியம் தரும் திருவெண்காடு

    திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    திருவெண்காடு திருத்தலத்தில் புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம். பேச்சு வன்மை பலப்படும். ஜோதிடத்தில் வல்லுநராகலாம். நடனம், நாட்டியம், இசை வாத்தியக்கருவிகள், பாடுதல் முதலான கலைகளில் சிறந்து விளங்கலாம். எந்த வித்தையைக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ந்தவர் எனப் பேரெடுக்கலாம் என்கிறார்கள் ஆச்சாரயப் பெருமக்கள்.

    புதன் பகவான், வித்யாகாரகன். புத்தியைத் தெளிவுபடுத்தி அருளுபவன். அதேபோல், வித்தைக்கு அதிபதி பிரம்மா. திருவெண்காடு திருத்தலத்தில் பிரம்மாவின் திருச்சமாதியும் உள்ளது எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

    வித்தைக்கு அதிபதியான பிரம்மா, புத்தியைத் தந்தருளும் புதன் பகவான், மனோகாரகன் என்று சொல்லப்படும் சந்திரபகவான் முதலானோரையும் அவர்களுக்கு வரமருளிய பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரரையும் தரிசித்து அவர்களையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இந்தத் தலத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    சீர்காழிக்கு அருகில் 19 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    Next Story
    ×