என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பணம், ஸ்ரார்தம் செய்து
"தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம:
ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:"
என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: |
தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:
எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும். புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.
மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்திரை:- இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர்மோரையும், தயிர் சாதத்தையும் விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மூலம், பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.
வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும்.
ஆனி:- தேனும் திணைமாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மலட்டுத் தன்மை நீங்கும்.
ஆடி:- வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து அதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து பின்தானம் செய்ய வேண்டும்.
பலன்:- கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஆவணி:- தயிரன்னம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- காரியத்தடைகள் நீங்கும். நோய் வாய்ப்பட்டவர் அந்நோயினின்றும் மீண்டும் சுகம் பெறுவர்.
புரட்டாசி:- சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் நிவேதிக்கப்பட்டு தானம் புரிதல் வேண்டும்.
பலன்:- அரிப்பு, தடிப்பு, ஊரல், விஷக்கடி போன்ற தொல்லைகள் நீங்கும்.
ஐப்பசி:- உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்தல் வேண்டும்.
பலன்:- சீதள நோய் விலகும்.
கார்த்திகை:- எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்திடல் வேண்டும்.
பலன்:- பெண்களுக்குரிய கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்கள் நீங்கும்.
மார்கழி:- வெண் பொங்கலும், கடலை சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
தை:- தயிர் ஏட்டில் தேன் சொரிந்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் அளிக்கப்பட வேண்டும்.
பலன்:- கபத்தால் வரும் வியாதிகள் நீங்கும்.
மாசி:- நெய்யுடன் கலந்து ஈசனார்க்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.
பங்குனி:- தேங்காய்ச் சாதமும், தக்காளிச் சாதமும் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- பித்தம், பைத்தியம் முதலிய நோய்கள் நீங்கும்.

எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.
நாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது, ‘காரிய சித்திமாலை.’ கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால், மன விருப்பம் எளிதில் நிறைவேறும்.
இந்த துதியை எட்டு நாட்கள் பாடி வந்தால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால், அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும்.

இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.
அம்மன் வழிபாடுகள் அநேகம் இருந்தாலும், துர்க்கை அம்மனை ராகு காலத்தில் போற்றிப் பாடி அபிஷேகம் ஆரத்தியுடன், எலுமிச்சைப்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷமானதாக இருக்கிறது. கொடிய அசுரனை வதம் செய்த சக்தியின் அம்சமான துர்க்கையம்மன், தங்கள் பாவங்களையும் வதம் செய்து வாழ்வில் நிம்மதி தருவாள் எனும் நம்பிக்கையே, இதற்கு காரணம்.
ராகு கிரகத்தால் பூஜிக்கப்பட்டு அந்த கிரகத்திற்கு அருள்புரிந்த காரணத்தினால், சண்டி பாடத்தின் தலையாய சக்தியாக இருக்கும் துர்க்கை அம்மன், ‘மங்கள சண்டி’ என்றும், ‘ராகுகால துர்க்கை’ என்றும் போற்றப்படுகிறாள். இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.
துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (தடைகளை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயத்தை அழிப்பவள் என்பது பொருளாகும்.
துர்க்கையை, ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டு அழைக்கிறது, மந்திர சாஸ்திரம். அவை: குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா ஆகும் .
மகத்தான சுவாஸினி பூஜையிலும் 1.சைலபுத்ரி, 2.ப்ரம்ஹசாரிணி, 3.சந்த்ரகண்டா, 4.கூஷ்மாண்டா, 5.மகாகவுரி, 6.காத்யாயனி, 7.காளராத்ரி, 8. மகாகவுரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்து, சிவப்பு வஸ்திரத்தை அம்மனுக்கு அணிவித்தால் சிறப்பு. துர்க்கை அம்மனை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு மனத்தளர்ச்சியோ, வேதனைகளோ, பயமோ தோன்றுவதில்லை. மாறாக எதையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகிறாள் அன்னை துர்க்கா தேவி.
சிம்ம வாகனத்தில் அமர்ந்து, கொடியில் அசையும் மயில் தோகையுடன் சிவப்பு நிறப் புடவையில் சர்வ அலங்கார ரூபிணியாக, கையில் சூலத்துடன் வீற்றிருக்கும் அன்னை துர்க்காதேவியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் பக்தியுடன் விளக்கேற்றி வேண்டினால் நினைத்த காரியம் வெற்றியாவது உறுதி.
சேலம் சுபா.

ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்யக்கூடிய ஒன்றுதான். அதுவே நமக்கு பல புண்ணியங்களைத் தரக்கூடியது.
கங்கை நதிக்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தர். அதே ஊரில் ஒரு பெரும் தவசியும் வாழ்ந்துவந்தார். புண்ணியதாமா தினமும் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு, மாலை வேளையில் தவசி சொல்லும் ஹரியின் கதைகளைக் கேட்பதற்காக சென்று விடுவார். இது அவர் நினைவு தெரிந்தது முதல் கடைப்பிடித்து வரும் ஒரு வழக்கமாகும். சுமார் 70 ஆண்டுகளாக இப்படித்தான் புண்ணியதாமா தன்னுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் ஹரி கதையை கேட்க தவறியதில்லை.
ஒரு முறை வெகு தொலைவில் இருந்து இரண்டு யாத்திரிகர்கள், கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணியதாமாவின் வீட்டிற்கு சென்று, ‘வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா?’ என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா, வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர்.
அப்போது அவர்கள், புண்ணியதாமாவிடம், ‘ஐயா! நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா?’ என்று கேட்டனர்.
அதற்கு புண்ணியதாமா, ‘நான் எழுபது ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக, பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். உண்மையைக் கூறவேண்டும் என்றால், இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது’ என்றார்.
ஒரு கணம் திகைத்த அந்த அதிதிகள், மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா! என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் என்னடா என்றால், அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு அருகில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம்’ என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.
அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணியதாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. ஆனால் அந்த இரு யாத்திரிகர்களும், ‘கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர். கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. ‘எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே!’ என்று இருவரும் புலம்பத் தொடங்கி விட்டனர்.
பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து, ‘தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும்’ என்று மனமுருக வேண்டினர்.
அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும், புண்ணியவானுமான, புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். ஹரி கதை எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் ஹரி கதையை தொடர்ந்து கேட்பவர்கள், புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களோ அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது’ என்றது அந்தக் குரல்.
தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக, புண்ணியதாமாவிடம் சென்று அவரது காலில் விழுந்து தங்கள் தவறை பொறுத்துக் கொள்ளும் படி கேட்டனர்.
அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா, இருவரையும் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர். கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாதது. ஆனால் ஹரி கதை கேட்பது, படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்யக்கூடிய ஒன்றுதான். அதுவே நமக்கு பல புண்ணியங்களைத் தரக்கூடியது.

நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு காண்போம்.
நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் எதுவென்றாலும் அதுபோய்ச் சேருகின்றன இடம் ஒன்றுதான். அது நவகிரங்களில் ஒன்றுதான். பரிகாரம் செய்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும்.
சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க்கலாம். அதோடு செவ்வாயால் ஏற்படக்கூடிய திருமணத்தடை நீங்குவதோடு, சொத்துக்கள் சேரும்.
கல்விக்கடவுளாக பார்க்கப்படுகிறார் புதன் பகவான். புதனுக்கு உரியது பச்சை பயிறு தானியத்தை வைத்து அல்லது தானியத்தால் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபடுவதால் கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் சிறக்கும். தொழிலில் நல்ல வெற்றியையும், ஜோதிட கலையில் ஞானமும், புகழும் பெறலாம்.
குரு பகவனானுக்கு உரிய தானியம் கடலை. மங்களத்தை அருளக் கூடிய குருவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்க கடலையைப் படைத்து வணங்கி வர சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மங்கள பாக்கியங்கள் உண்டாகும்.
நவகிரகங்களில் சுக போகங்களைத் தரக் கூடியவர் சுக்கிர பகவான். மொச்சை பயிறு சுக்கிரனுக்கு உரியதாகும். மொச்சை பயிறு படைத்து வழிபட்டு வருவதால் கலைகளில் வித்தகராகத் திகழலாம்.
சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், எள் சேர்த்த உணவை படைத்து சனி பகவானை வணங்கி வருவதால் அனைத்து தடைகளும் நீங்குவதோடு, விரோதங்கள் நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
நிழல் கிரகமான ராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து தானியத்தால் தயாரித்த பதார்த்தத்தை படைத்து வழிபட்டு வணங்கி வருவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். திடீர் பணக்காரனாக்கும் நிலையை இராகு பகவான் தரக் கூடியவர். ராகுவை வணங்கி வர முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும். ராகுவை வணங்கி வர துர்க்கை அம்மனின் அருள் பெற முடியும்.
நிழல் கிரகமான கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. தீராத நோய் தீரவும், குறையாத மருத்து செலவுகள் பெரியளவில் குறையவும், மனதில் மகிழ்ச்சியும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய கேது பகவானுக்கு கொள்ளு படைத்து வணங்கவும். கேதுவை வணங்கி வர ஞானத்தை தரக்கூடிய வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கும்.

அன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும்.
சில கோடீஸ்வரர்கள் உணவு உண்ண உட்காரும் சமயத்தில் வீட்டில் சண்டை ஏற்பட்டு மனதில் நிம்மதி பறிபோய்விடும். இதனால் உணவு உண்ணவே பிடிக்காது. கோடிக்கணக்கில் காசு இருந்தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாது. இதனால் ஏன் இந்த வாழ்க்கை? என்று கலங்கி போவார்கள்.
ஏழைகள் நிலையோ இன்னும் பரிதாபம், பசி இருக்கும். வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடவும் ஆள் இருக்கும். உடல் ஆரோக்கியமும் இருக்கும். ஆனால் கையில் காசு இருக்காது. வாழ்க்கை எப்போதுமே 'போதவில்லை' என்கிற நிலையைத் தான் தொடர்ந்து தந்திருக்கும். அதிலும் ஒரு மிகப் பெரிய தரித்திர நிலையையே அவர்கள் அடைந்து இருப்பார்கள்.
மேற்கண்ட இது போன்ற நிலையை தான் சாஸ்திரங்கள் 'அன்ன தோஷம்' என்கின்றன. இந்த தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும். முகம் பொலிவிழந்து விடும். மனதில் எப்போதும் சோகம் குடிக்கொண்டிருக்கும்.
எதனால் இந்த தோஷம் ஒருவருக்கு வருகிறது என்பதை பின்வருமாறு பார்ப்போம்,
1. ஏழை, எளியவர்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்கள்.
2. வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் பசியாக இருக்கும் சமயத்தில் தாங்கள் மட்டும் சாப்பிடுபவர்கள்.
3. பிறரை சாப்பிடகூட விடாமல் பசிக்கப் பசிக்க வேலை வாங்குபவர்கள்.
4. உணவு சாப்பிட அமர்ந்தவர்களை சாப்பிட விடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பவர்கள்.
5. போதுமான் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள் அல்லது உணவை குப்பையில் அடிக்கடி கொட்டுபவர்கள்.
6. சிறு குழந்தைகளை பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள்.
என மேற்கண்ட அனைவருக்கும் அன்ன தோஷம் ஏற்படும்.
அன்ன தோஷத்திற்கான பரிகாரம்
வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்னை அன்னபூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற மட்டும் ஏழைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அன்ன தானம் செய்யுங்கள். இதனால், இத்தோஷத்தில் இருந்து சீக்கிரத்தில் விடுபட இயலும்.

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.
சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோவிலில் யந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அவருடன், அவரது அன்னை சாயாதேவியும் யந்திர வடிவில் அருள்பாலிக்கிறார். இங்கு சனீஸ்வர பகவான் யந்திர வடிவில் 5 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளார்.
கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள ‘பாஸ்கர தீர்த்தம்‘ என்ற குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டால் திருமண வரம், குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லட்சுமி கடாட்சம், சனீஸ்வர தோஷம் மற்றும் சகல தோஷம் போன்றவை நிறைவேறுவதாகவும், எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினால் வேண்டும் வரம் கிடைப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.
சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை, ஒவ்வொரு வருடம் காணும் பொங்கல் அன்று பால்குட அபிஷேகம் சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
வேலூர்-திருவண்ணாமலை சாலையில் சந்தவாசலில் இறங்கி அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆரணி, போளூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
சிவபெருமானின், பெரும் சக்தி கொண்ட தோற்றமே பைரவர் ஆவார். இவரின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. எமதர்மனுக்கு, பைரவர் மிகப்பெரும் சக்தியை வழங்கியிருந்தார். அது பற்றி அறிந்த சனீஸ்வரன், தனது அண்ணனைப் போலவே தானும் பைரவரை நோக்கி மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்த பைரவர், சனியின் முன்பாகத் தோன்றினார். சனி பகவான் கேட்ட வரங்களை அளித்த பைரவர், அதற்கும் மேலாக நவக்கிரகங்களில் ஒருவராக திகழும் வரத்தையும், உயிர்களின் கர்மவினைப்படி இன்ப- துன்பங்களை வழங்கும் வரத்தையும் அருளினார். அதோடு சனியின் வாத நோயையும் பைரவர் நீக்கியருளினார்.
அதோடு தன்னை வழிபடும் பக்தர்களை, எக்காரணம் கொண்டு சனி தோஷம் பீடிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார், பைரவர். சனியின் சஞ்சாரப்படி எவர் ஒருவர் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், அவர் பைரவரை வழிபட்டு சரணடைந்து விட்டால், அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மைகளையே செய்ய வேண்டும் என்பது பைரவ மூர்த்தியால், சனி பகவானுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை என்று சொல்லப்படுகிறது.
சனியின் பார்வையால் பாதிக்கப்படுவோர், சனியின் தோஷத்தால் அவதிப்படுவோர் என அனைவரும், பைரவ மூர்த்தியை வழிபட்டு வந்தால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
பைரவருக்கு வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் துணியில் 27 மிளகுகளை கட்டி வைத்து, அதனை முன்தினம் இரவு நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அஷ்டமி அன்று, அதனை பைரவருக்கு சமர்ப்பித்து ராகுகாலங்களில் வழிபாடு செய்து வருவது சிறப்பான பலனைத் தரும். ராகு காலங்கள், வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் வழிபாடு செய்து வந்தால், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை, கல்யாண வரம் மற்றும் பணச் சேர்க்கை, தொழில் தொடங்குவதில் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.
இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்(மற்றது தப்பித்துவிட்டால்) அது மிகக்கொடூரமான பாவமாகும். இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும்.
அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள். இல்லாவிட்டால், அது உங்களின் அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் ஈந்துவிட்டு இறக்கும். காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.
இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம். ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து.
ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது. சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.
பரிகாரங்கள் :
ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரைநுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும்.
கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.
கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. காமதேனு பசு மூன்று உலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.பசுவுக்கு தினமும் பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், 48 ஆயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.நாள் தோறும் பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவே தான் அவரை கோபால கிருஷ்ணன் எனவும் அழைக்கிறோம்.கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின் போது பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.ஒரு பசு தன்னுடைய முதல் கன்றை பிரசவிக்கும்போது அதனை “தேனு” என்பார்கள். 2வது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைதான் “கோ பூஜை”க்கு பயன்படுத்துவார்கள்.
பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. எனவே தான் பசுவின் பின்பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது தலமான சுவாமிமலையில் வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும்.
முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்த இடம் இந்த சுவாமிமலை. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவது திருத்தலம். சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவராகிய சிவபெருமானையே குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேல் பகுதியிலும், சிவனுக்கு கீழ் பகுதியிலும் சன்னிதிகள் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில், 60 படிகள் 60 தமிழ் ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கோவிலின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும் காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல ஏராளமான பேருந்துகள் இயங்குகின்றன.