என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    இலுப்பைக்குடி தான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் வறுமையை போக்கி செல்வம் கிடைக்க அருள் புரிவார்.
    பொதுவாக பைரவரின் கையில் கபாலம் இருக்கும். ஆனால் காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக்குடி தான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். சித்தர்களில் ஒருவரான கொங்கனவர், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

    மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனவர் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றுகளாக தங்கம் தயாரித்தார்.



    அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு ‘சுயம்பிராசேஸ்வரர்’ என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.
    பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட ‘நாய்க்கடி பலகை’ இருக்கிறது. நாய்க்கடிபட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
    படிப்பில் அதிக மதிப்பெண் பெற, கல்வி வளம்பெற, கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து சகலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை வழங்கும்.
    ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞான காரகன் கேதுவும்’, ‘வித்யாகாரகன் புதனும்’ படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.

    சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரியவர்கள் கூட ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லியபோது செய்யாமல் விட்டு விட்டால் ‘ஆஹா! மறந்து போய்விட்டது. நாளை செய்கிறேன்’ என்பார்கள். மறதி என்ற மூன்றெழுத்துக்குள்ளேதான் மதி என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. மதி என்றால் சந்திரன் என்று பொருள்.

    படிப்பில் அதிக மதிப்பெண் பெற, கல்வி வளம்பெற, கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து சகலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை வழங்கும்.
    கெங்கையம்மன் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களின் துன்பங்களை போக்கி வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறாள்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரத்தில் அருள்மிகு கெங்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கி நல்லாசி புரிகிறாள்.மிகவும் புராதனம் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ந் தேதி கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்று செல்கின்றனர்.

    முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி (கெங்கைஅம்மன்) மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். ரேணுகாதேவி நாள்தோறும் தாமரை குளத்தில் நீராட செல்வது வழக்கம். நீராட செல்லும்போது மண்ணால் குடம் செய்து, நீராடிவிட்டு திரும்பி வரும்போது மண் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவாள். அதேபோல் ஒருநாள் ரேணுகாதேவி தாமரை குளத்திற்கு சென்று நீராடி உள்ளாள்.

    அப்போது வான்வழியே சென்ற கந்தர்வனின் நிழல் குளத்தில் தெரிந்துள்ளது. அந்த கந்தர்வன் அழகில் சில நொடிகள் ரேணுகாதேவி மயங்கி உள்ளாள். இதை ஞான திருஷ்டி மூலம் உணர்ந்த ஜமதக்கினி முனிவர், தனது மனைவி கற்பு நெறி தவறி விட்டதாக கடும் கோபம் கொண்டார். இந்த குற்றத்திற்கு தண்டனையாக தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். தந்தை சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்ட பரசுராமன் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் தனது தாயின் தலையை வெட்ட புறப்பட்டார்.

    தனது மகனே தன் தலையை வெட்ட வருவதை கண்ட ரேணுகாதேவி மகனால் வெட்டப்பட்டு இறப்பதை விட தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதே மேல் என முடிவு செய்து ஓடத் தொடங்கினாள். அப்போது சலவை தொழிலாளி ஒருவரது வீட்டில் மறைந்து கொண்டாள். அங்கும் பரசுராமன் வரவே கடலில் வீழ்ந்து இறப்பதே மேல் என முடிவு செய்து கடலை நோக்கி ஓடினாள். தொடர்ந்து ரேணுகாதேவியை பரசுராமன் விரட்டி வந்தார். அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டாள். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார்.

    பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்கினி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார். அப்போது பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்கினி முனிவர் ஒரு பாத்திரத்தில் புனித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்ப்பித்து கொள் என்றார்.



    இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன், வேகமாக சென்று உயிர்பிக்கும்போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரேணுகாதேவியின் தலையையும், ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புனிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர்.

    இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1-ந் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கையம்மன் கோவில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

    தனது மகனால் வெட்டப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற கெங்கைஅம்மன் பிற்காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறாள்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவினையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டிய நாள் முதல் பக்தர்கள் கோவிலில் கூழ் ஊற்றியும், மா விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் அம்மனுக்கு தங்களால் இயன்ற அளவு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொள்வர். அதேபோல் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது முதல் சிரசு செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் மூடைமூடையாக தேங்காய்களை உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதேபோல் கோவில் மண்டபத்தில் அம்மன் வீற்றிருக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடுவர்.

    லட்சக்கணக்கான தேங்காய்களை பக்தர்கள் உடைத்து வழிபடுவதில் இருந்தே கேட்ட வரம் அருள்பவள் கெங்கையம்மன் என்பது நிரூபணமாகிறது.
    பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். 16 விதமான பெயர்களில் அருள்புரியும் கவுரி தேவியை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இதில் கேதாரம் என்பது சிவனையும், கவுரி என்பது பார்வதியையும் குறிக்கும். ஈசனை நோக்கி அன்னை விரதம் இருந்ததால் இது ‘கேதார கவுரி விரதம்’ என அழைக்கப்பட்டது. கவுரி தேவி, 16 விதமான பெயர்களில் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    ஞான பஞ்சமி :

    ஒரு முறை, சிவத்தை விட சக்தியே சிறந்தது என்று பார்வதிதேவி எண்ணினாள். இதனால் சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. இதைக் கண்ட பார்வதி தேவி, உலகில் சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். இதையடுத்து அன்னையை தன்னுடைய உடலில் சரி பாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கினார்.

    அன்னை ஞான கவுரியானாள். இந்த ஞான கவுரியை, பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’, ‘கவுரி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கிறாள்.

    அமிர்த கவுரி :

    தேவலோகத்தில் அமிர்தம் என்ற ஒன்று உண்டு என்கிறது புராணம். அது உயிர்களுக்கு குறையாத ஆயுளைத் தருவதாகும். மிருத்யுஞ்ஜயரான சிவபெருமானின் தேவியானதால் கவுரிக்கு ‘அமிர்த கவுரி’ என்று பெயர். இந்த அன்னையை ஆடி மாத பவுர்ணமி, ஜல ராசியான கடக மாதத்தில் வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் அமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருகடவூர் அபிராமி, அமிர்த கவுரி அம்சம் பொருந்தியவள். அங்குள்ள கள்ளவாரணப் பிள்ளையார் ‘அமுத விநாயகர்’ ஆவார்.

    சுமித்ரா கவுரி :


    உலக உயிர்களின் சிறந்த நண்பன், இறைவனே. சுந்தரரின் தோழனாக ஈசன் அருள்பாலித்ததும், இறைவன் நடத்திய திருவிளையாடல்களுமே இதற்கு சாட்சியம் கூறும். ஈசனைப் போலவே உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.

    யோக கவுரி :

    யோக வித்தையின் தலைவியாக ‘மகா கவுரி’ திகழ்கிறாள். இவளையே யோக கவுரி என்று அழைக்கிறார்கள். மகா சித்தர் என்று போற்றப்படும் ஈசனுடன், யோகேஸ்வரியாக இந்த அன்னை வீற்றிருப்பாள். காசியில் இவர்கள் இருக்கும் பீடம், ‘சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. சித்தர்களின் யோகங்களை அருளும் யோகாம்பிகையாக இந்த அன்னை திகழ்கிறாள். யோக கவுரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை ‘யோக விநாயகர்’ என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகர், யோக கணபதி ஆவார். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை ‘யோக கவுரி’ சொரூபமானவள்.

    வஜ்ர ச்ருங்கல கவுரி :

    உறுதி மிகுந்த உடல் கொண்டவர்களை, ‘வஜ்ர தேகம் கொண்டவன்’ என்று கூறுவார்கள். அத்தகைய உடலை, உயிர்களுக்கு தரும் தேவியை, ‘வஜ்ர ச்ருங்கல தேவி’ என்று அழைக்கிறார்கள். இந்த அன்னை அமுத கலசம், சக்கரம், கத்தி, நீண்ட சங்கிலி போன்றவற்றை கையில் ஏந்தியபடி, கருட வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். ‘ச்ருங்கலம்’ என்பதற்கு, ‘சங்கிலி’ என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், ‘வஜ்ர ச்ருங்கல கவுரி’ என்கிறார்கள். இந்த அன்னையை வழிபட்டால் முக்தி கிடைக்கும். இந்த அன்னையுடன் இருப்பவரை சித்தி விநாயகர் என்று கூறுவார்கள்.



    மோகன கவுரி :

    துன்பத்திற்கு காரணம் ஆசைதான். அந்த ஆசையின் வலையில் சிக்காமல் இருக்க இந்த கவுரிதேவியை வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்குத் தெய்வீக சக்தி களையும் அளிப்பவள் இந்த அன்னை. இவளுடன் த்ரைலோக்கிய (மோகன) கணபதி வீற்றிருக்கிறார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோகன) கவுரி அருள்பாலிக்கிறாள்.

    சுயம் கவுரி :

    சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் அருள்கிறாள், இந்த கவுரி தேவி. திருமணத் தடையால் வருந்துபவர்கள், சுயம் கவுரி தேவியை வழிபடலாம். ருக்மணி, சீதை, சாவித்திரி போன்ற புராண கால பெண்களின் கவுரி பூஜை, இந்த அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடியவை. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை ‘சாவித்திரி கவுரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

    கஜ கவுரி :

    பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கிறாள் கஜகவுரி தேவி. இந்த அன்னையை ஆடி மாத பவுர்ணமியில் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் இந்த கவுரிதேவிக்கு பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் கஜ கவுரியை தரிசிக்கலாம்.

    விஜய கவுரி :


    ஒருவன் செய்த நற்செயல்களால், அவன் பெரிய புகழை அடைந்திருக்கலாம். ஆனாலும் அந்த புகழின் முழுமையான பயனை அனுபவிக்க இந்த விஜய கவுரி அன்னை அருள் வழங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.
    சத்யவீர கவுரி :

    இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.

    வரதான கவுரி :

    பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப்படுகிறாள். இந்த அன்னை கொடை வள்ளல்களின் கரத்தில் குடியிருப்பவள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. காஞ்சியிலும் அறம் வளர்த்த நாயகியைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.



    சொர்ண கவுரி :

    ஒரு பிரளய முடிவில் அலைகடலின் நடுவில் சொர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் பலரும் அதனை பூஜித்தனர். அப்போது அந்த லிங்கத்திற்குள் இருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சொர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். சொர்ண கவுரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சொர்ண கவுரி விரதத்தை, ஆவணி வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும்.

    சாம்ராஜ்ய மகா கவுரி :

    அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

    அசோக கவுரி :


    அசோகசாலம் என்பதற்கு துன்பமற்ற இடம் என்பது பொருள். அதுவே இந்த தேவியின் பட்டணமாகும். இங்கு இருக்கும் கவுரி, ‘அசோக கவுரி’ என்று அழைக்கப்படுகிறாள். சித்திரைவளர்பிறை அஷ்டமியில் (அசோகஷ்டமி) அசோக கவுரியை வழிபட, பேரின்ப வாழ்வைப் பெறலாம். இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கிறார்.

    விஸ்வபுஜா மகா கவுரி :

    தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, மனதார பூர்த்தி கவுரி என்றும் அழைக்கப்படு கிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கிறார்.
    வெள்ளிக்கிழமைகளில் பைரவருக்கு பூஜை செய்து ஏழை பெண்ணுக்கு தங்க தாலியை தானமாக கொடுத்தால் கால பைரவரின் அருளாசி கிடைக்கும்; பல மடங்கு செல்வவளம் உண்டாகும்.
    வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் காலபைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யும் போது சந்தனாதித்தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது, சிகப்பு அரளிமாலை அல்லது பூக்கள் போன்றவைகளை பூசாரியிடம் பூஜைக்குத் தர வேண்டும். இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.

    இதில் இந்த வழிபாட்டை 31 வெள்ளிக்கிழமைகள் செய்து முடித்தப்பின்னர், குறைந்தது ஒரு ஏழைப்பெண்ணுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்க வேண்டும்; அதிகபட்சமாக 3 இன் மடங்குகளில் (3,6,9,12,15) ஏழைப் பெண்களுக்கு அவர்களின் குல வழக்கப்படி தாலி செய்து தானம் செய்தால், கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும்; பல மடங்கு செல்வவளம் உண்டாகும்.
    இத்தல அம்பாள் பத்திரகாளியம்மனிடம், தொட்டில் பிரார்த்தனை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர உடனே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
    பத்திரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் உள்ள அன்னையை பவுர்ணமி, செவ்வாய், வெள்ளி, அமாவாசை முதலிய நாட்களில் அந்திசாயும் பொழுதில் வழிபடுவது நல்லது. வழிபாட்டின் போது அம்மனின் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சை பழங்களை அவள் திருப்பாதத்தில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும்.

    சிலர் தங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை, பத்திரகாளி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். தன லாபம் கிட்ட, எதிரிகள் தொல்லை அகல, சுபகாரிய தடைகள் அகல செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி பத்திரகாளி அம்மனை வழிபட வேண்டும். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டி கோளாறுகளும் இவளை வழிபட நீங்குகிறதாம்.

    இத்தல வீரபத்திரர், அனுமன் சன்னிதியில் பவுர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும். இங்கு ஆலய உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாட சுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்திரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மன். இந்த அம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்கள் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வந்தால், சொல்வாக்கும், நல்ல செல்வாக்கும் கிடைக்கும்.



    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இத்தல அம்பாள் பத்திரகாளியம்மனிடம், தொட்டில் பிரார்த்தனை செய்து, அவளது கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர உடனே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகள் இங்கு வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்ள கண்டிப்பாக குழந்தைபாக்கியம் அளித்திடுவாள் பத்திரகாளியம்மன்.

    ஜாதக ரீதியாக லக்னத்தை, செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். இத்துடன் ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, இத்தல பத்திரகாளியை அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்கிறார்கள்.

    விருதுநகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் சிவகாசி உள்ளது.
    திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் உடனடியாக அவர்களது பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.
    இரண்யகசிபுவை வதம் செய்தது போலவே, உக்கிர தோற்றத்தில் இறைவன் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் 4-வது அவதாரம்தான் நரசிங்கரின் தோற்றம்.

    பொதுவாக நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் சிங்கமுகத்தோடு இருப்பதால், பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வு தோன்றலாம். ஆனால் அவர் பக்தர்களுக்கு கருணையை வாரி வழங்குபவர்.

    நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
    கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள். தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.

    அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.



    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடிவிடும். அதன்பின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

    கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம். பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும்.
    அழகான சிறு குழந்தைகளைப் பார்த்தால் அதோடு பேச வேண்டும். அதைப் பார்த்து சிரிக்க வேண்டும். அதை தொட்டு முத்தம் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும். ஆனால் ஒருவர் பார்வை போல், மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலர் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். அவர்கள் கண்ணில் இருந்து வரும் கதிர்வீச்சு ஊறுவிளைவிக்கும் தன்மையைக் கொடுக்கலாம். அதனை கண் திருஷ்டி என்பார்கள்.

    அங்ஙனம், திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.
    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

    மூலம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

    நாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாமகிரித் தாயார் உடனுறை, ஸ்ரீ நரசிம்மரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்குதல் நலம்.

    மூலம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

    திருநீர்மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வணங்குதல் நலம்.



    மூலம் நட்சத்திரம்மூன்றாம் பாத பரிகாரம்:

    திருவதிகையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரரை வணங்குதல் நலம்.

    மூலம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

    சமயபுரத்தில் ஆட்சி செய்யும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்குதல் நலம்.
    சித்ரா பவுர்ணமி அன்று செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும் எந்த சூழ்நிலையிலும், பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் சித்ரகுப்தரின் அருளை எளிதில் பெறலாம்.
    மனிதன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் தொழிலை சித்ரகுப்தர் செய்கிறார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. எமதர்மனின் கணக்கராக இருந்து வரும் இவரது பணி, மனிதனின் மரணத்திற்கு பின் அவனது பாவ, புண்ணிய விவரங்களை எமதர்மனிடம் பட்டியலிட்டு காட்டுவது ஆகும். அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப அவர்கள் செல்வது சொர்க்கமா? நரகமா? என்பது நிர்ணயிக்கப்படுகிறது. சித்ரகுப்தரின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகள் கூறப்படுகின்றன.

    சித்ரகுப்த என்ற வடமொழி சொல்லுக்கு “மறைந்துள்ளபடம்” என்று பொருள். நாம் செய்யும் குற்றங்களை சித்திரம் போல் ரகசியமாக தம் மனதில் நிலை நிறுத்திக்கொள்வதால் இவருக்கு சித்ரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது.

    ஆரம்பத்தில் எமதர்மன் தான் இந்த பணியை செய்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமான தால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.

    சிவபெருமான் ஒரு பொற்பலகையை எடுத்து கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், பொன் நிறம், வெண்மை நிறம் என 7 நிறங்களை கொண்டு ஒரு உருவத்தை வரைந்தார். அந்த உருவத்தின் வலது கையில் தங்க எழுத்தாணியையும், இடது கையில் ஓலைச்சுவடியையும் வைத்திருக்குமாறும், வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்து இருக்கும் படியும் வரைந்தார். வரைந்த சித்திரத்தை உமையம்மையிடம் காட்டி, அதற்கு உயிர் கொடுக்கும் படி கூறினார். அதன்படி சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் சித்ரகுப்தர் என பெயர் பெற்றார்.



    அவருக்கு சிவனும், பார்வதியும், சிரஞ்சீவி பட்டத்தை வழங்கி, ஜீவராசிகள் செய்யும் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு பாவத்திற்கு ஏற்ப தண்டனைகளை நிறைவேற்ற எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்கும்படி கூறினர். அதன்படி மனிதன் செய்த பாவங்களுக்கு இரண்டு கட்டமாக தண்டனை வழங்க முடிவு செய்தார். முதற்கட்டமாக மனிதன் செய்த பாவங்களுக்கு தண்டனையாக பூமியில் அவன் வாழும் போதே தீராத மனஉளைச்சலோடு அவதிப்பட வேண்டும்.

    மரணத்துக்கு பிறகு இரண்டாம் கட்ட நரக தண்டனையை அனுபவிக்கவேண்டும். அடுத்தவர் மனைவியை விரும்புபவர்கள், கணவனை வஞ்சித்து வாழும் பெண்கள், பிறருடைய பொருட்களை பறிப்பவர்கள், தெய்வத்தை நிந்திப்பவர்கள் உள்ளிட்ட 28 வகையான பாவ செயல்கள் புரிபவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்க வேண்டும். இதற்கான முடிவு எடுப்பதில் சித்ரகுப்தருக்கு தனி அதிகாரம் உண்டு.

    தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கினான். அவளை அடைய முயன்ற இந்திரன், பொழுது விடியும் முன்பே கோழிபோல கூவினான். கவுதமர் பொழுது விடிந்து விட்டது என்று கருதி நீராடப் புறப்பட்டார். பின்பு உண்மையை அறிந்து அகலிகையை கல்லாக போகும்படி சாபமிட்டார்.

    இந்திரனுக்கு உடல் எல்லாம் கண்களாக போகும்படி சாபமிட்டார். இதனால் தேவேந்திரன் தனது மனைவி இந்தி ராணியுடன் காஞ்சீபுரம் வந்து 2 ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தான். இந்திரனின் தவத்தை கண்டு மனமகிழ்ந்த பரமேஸ்வரன் அவன் முன் காட்சி தந்து ‘இந்திரா! கவுதம முனிவரின் சாபத்தால் உனக்கு குழந்தைப்பேறு இல்லை. இருந்தாலும் சித்ரா பவுர்ணமி அன்று, காமதேனுவின் வயிற்றில் என் அம்சமான மகன் சித்ரகுப்தர் பிறப்பார்’ என்று ஆசி கூறினார்.



    அதன்படி சித்திரை மாதம் பவுர்ணமி அன்று ஞாயிற்றுக் கிழமை காமதேனுவின் வயிற்றில் சித்ரகுப்தன் பிறந்தான். அதனால் பசும்பால், பசு தயிரால் இவருக்கு அபிஷேகம் செய்யக்கூடாது என்றும், எருமைப்பால், எருமை தயிரில்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் கூறுவர். சித்ரகுப்தர் காஞ்சீபுரத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தார். இதன் பயனாக இவருக்கு அறிவாற்றலும், எல்லாவித சித்திகளும் கிடைத்தன. பின்னர் ஈசன் கட்டளையை ஏற்று எமனிடம் போய்ச் சேர்ந்தார்.

    சித்ரகுப்தர், மயப்பிரம்மாவின் மகள் பிரபாவதியம்மை, மனுப்பிரம்மாவின் புதல்வி நீலாவதியம்மை, விசுவப்பிரம்மாவின் மகள் கர்ணகியம்மை ஆகிய மூவரையும் திருமணம் செய்து கொண்டார். சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்தபட்ச தண்டனை வேண்டும் என்றாலும் இவர் அருள் ஒருவருக்கு இருந்தால் தான் முடியும். சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும் எந்த சூழ்நிலையிலும், பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் சித்ரகுப்தரின் அருளை எளிதில் பெறலாம்.

    காஞ்சீபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் உள்ளது. இது பரிகார தலமாகவும் விளங்குகிறது. வலதுகையில் எழுத்தாணியும், இடதுகையில் ஓலைச்சுவடியும் தாங்கிய எழிலார்ந்த உருவத்தோடு அருள் புரிகிறார். இங்கு கலியுகத்துக்கு முன்னதாகவே சித்ரகுப்தர் எழுந்தருளி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட சர்வ தோஷங்களும் நீங்கும்.

    ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணியங்கள் அனைத்தும் சித்ரகுப்தரால் எழுதப்படுகிறது என்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.



    சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை தொடங்கி ‘சித்ரகுப்தாய நம’ என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். மாலையில் பவுர்ணமி நிலவு உதயமானதும் வீட்டில் விளக்கேற்றி சித்ரகுப்தருக்கு பூஜை செய்யவேண்டும். வெண்பொங்கல், இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன் நீர் மோர், பழங்கள், இளநீர், பலகாரங்கள் படைக்கவேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவுக்கு தானம் செய்யவேண்டும்.

    பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். பயத்தம்பருப்பும், எருமைப்பாலும் கலந்த பாயாசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பின்னர் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தர் மனம் மகிழ்ந்து நம் பாவ கணக்குகளை குறைப்பார். இந்த விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் இருக்காது. சித்ரகுப்தரிடத்தில் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திக்க வேண்டும். நவக்கிரகங்களில் கேதுபகவானின் அதிஷ்டானதேவதை ஸ்ரீ சித்ரகுப்தரே ஆவார். கேதுபகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் நீங்கிட சித்ர குப்தரை வழிபடவேண்டும்.

    கேது பகவானுக்கு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் சித்ரகுப்தரை வழிபடுவதோடு கேது பகவானுக்கு உகந்த கொள்ளு தானியத்தில் வடை அல்லது சுண்டல் செய்து புளியோதரையுடன் நைவேத்தியமாக படைத்து கேது பகவான் தோத்திரப்பாடலை பாடி செங்கரும்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும்.
    நவரத்தினம் அணிவது உடல் நலத்தையும், செல்வச்செழிப்பையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
    நகை அணிவது அழகிற்காக என்பது உண்மைதான். ஆனால் அழகுடன் ஆரோக்கியமும் கிடைக்கும் என்றால் நகை அணிவதை கூடுதல் பலன் என்றே சொல்ல வேண்டும். நவரத்தினங்கள் பார்க்க வண்ணமயமாய் இருப்பதுடன் அதிகப்பலன்களையும் கொடுக்கக்கூடியதாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. பொதுராக நவரத்தினத்தை மோதிரங்களாக அணிவது தான் வழக்கம் என்றாலும் பென்டன்ட், நெக்லஸ், கம்மல் மற்றும் வளையல்களிலும் இது எடுப்பாகவே இருக்கும்.

    நவரத்தினம் அணிவது உடல் நலத்தையும், செல்வச்செழிப்பையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.



    நவரத்தினமும் நலகோள்களும் :

    சிவப்பு நிற மாணிக்கக்கல் சூரியனையும், முத்து சந்திரனையும், பவளம் செவ்வாயையயும், பச்சை புதனையும், புஷ்பராகம் குருவையும், வைரம் சுக்கிரனையும், நீலம் சனியையும், கோமேதகம் ராகுவையும், வைடூரியம் கேதுவையும் குறிக்கிறது. மேற்கூறிய நவகோள்களிலிருந்து வரும் காந்த அலையின் ஆற்றல்கள் நம் உடலில் இரத்த ஓட்டத்திலும், தசைகளிலும், நரம்புகளிலும், எலும்பு மஜ்ஜையிலும், விந்து நாதத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

    அவரவரின் பிறந்த நேரம் மற்றும் காலத்திற்கேற்ப அந்தந்த ஆற்றல்கள் நல்லதாகவோ கெடுதலாகவோ பயன்களைத் தரக்கூடியது. அவரவரின் தசாபுத்திகளுக்கு ஏற்ப இந்த பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். நல்ல தரமான ஜாதிக்கற்களாக, குறிப்பிட்ட அளவுகளிம் எடையிலும் பார்த்து அணியும் போது அது, அந்த கோள்களின் அலைகளின் தாக்கத்தை சமன் செய்து அணிபவருக்கு நன்மையை அளிக்கிறது. மேலும் இந்த கற்கள் நன்மையளிக்கக் கூடிய வகையில் உள்ள கிரகங்களின் கதிர்வீச்சை மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.



    நவரத்தின நகைகளை அணியும் முறை :

    நவரத்தின நகையை, அது மோதிரமாக இருந்தாலும் மற்ற நகையாக இருந்தாலும் வெள்ளி அல்லது தங்கத்தில் மட்டுமே பதித்து அணிவது நல்லது. நவரத்தின நகையை எப்படி அணிய வேண்டும் என்பதை கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோஷம் எதுவுமில்லாத கற்களாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். நகையை மஞ்சள் சேர்ந்த நீரில் நன்கு கழுவி, துடைத்து பூஜையறையில் வைத்து நவரத்தின மந்திரங்களால் ஜபித்து வணங்க வேண்டும்.

    பின்பு அதிகாலை நேரத்திலோ அல்லது நல்ல நேரமாக பார்த்தோ அல்லது கோயிலிலோ நகையை அணிந்து கொள்ள வேண்டும். நவரத்தின மோதிரம் அணியும் போது நீலக்கல், கையை தொங்க விடும்போது உடலின் அருகில் இருக்குமாறு அணிய வேண்டும். பெண்கள் இடது கையின் மோதிர விரலிலும், ஆண்கள் வலது கையின் மோதிர விலலிலும், ஆண்கள் வலது கையின் மோதிர விரலிலும் மோதிரத்தை அணிய வேண்டும்.
    ×