என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்துள்ள கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில் நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாக விளங்குகிறது.
    சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் காலபைரவர் சேத்திரபாலகராகவும், சொர்ணஆகர்ஷண பைரவராகவும் வேண்டுவன எல்லாம் அருளுகிறார். அவரை வழிபட பகை, பயம், வறுமை நீங்கி இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். அஷ்டமியில் நெய்விளக்குடன் முந்திரி மாலை அணிவித்து, அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும். தீவினைகள் அகலும். நல் வினைகள் சேரும்.

    வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
    திருமண தடைப்படுபவர்கள் திருநெல்வேலியில் உள்ள கல்யாண சீனிவாச பெருமாள் கோவிலில் வழிபாடு செய்தால் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம்.
    திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சன்னியாசி கிராமத்தில் இருக்கிறது கல்யாண சீனிவாச பெருமாள் கோவில். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் இது. திருப்பதி வெங்கடாஜலபதி தான் இங்கும் மூலவராக இருக்கிறார். உற்சவர் கல்யாண சீனிவாசர்; தாயார் அலமேலு மங்கை.

    திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனையை நிறைவேற்ற முடியாதவர்கள், இத்தலத்திற்கு வந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி வருகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து கல்யாண சீனிவாசப் பெருமாளை வழிபட்டால் சிறந்த வாழ்க்கை துணை அமையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது கல்யாண சீனிவாசருக்கு ஒரு மண்டலம் அலங்காரம் செய்து உற்சவம் நடப்பது சிறப்பாகும். மற்றும் தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், நவராத்திரி, புரட்டாசி பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம் ஆகியவையும் வெகு சிறப்பாக நடைபெறும்.



    இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் வெங்கடாஜலபதியை வேண்டினால் படிப்பு தடை விலகும். திருமண தடை நீங்கும். குழந்தைப்பேறு, நல்ல வேலை ஆகியவை கிட்டும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இத்தலத்து ஆஞ்ச நேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும் என சொல்லப்படுகிறது.

    மூலவர் வெங்கடாஜலபதிக்கு திருமஞ்சனம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு சாற்றியும், புஷ்ப அங்கி, வஸ்திரங்கள் சாத்தியும், நைவேத்தியம் படைத்தும், ஊஞ்சல் துலாபாரம் செய்தும் முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். உத்தியோகம், உயர்பதவி கிடைக்க பெற்றவர்கள் கருட சேவை செய்தும், திருமண பாக்கியம் கிடைத்தவர்கள் கல்யாண உற்சவம் செய்தும் வழிபடுகிறார்கள். ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகளை சாற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து ஆட்டோக்களில் சென்று வரலாம்.
    தேவர்களே ஆனாலும் பைரவர் தரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது. தீய எண்ணத்தோடு பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்களை காப்பாற்றுவதே பைரவரின் பணியாகும்.
    மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, தனது அளப்பரிய படைப்பாற்றலை எண்ணி கர்வம் கொண்டார். தானும் சிவபெருமானுக்கு நிகரானவன் என ஆணவம் கொண்டார். அந்த அகந்தை பிரம்மனின் ஞானத்தை மறைத்தது. அது அவருடைய நான்கு முகங்களான சதுர்வேதத்தையும் செயல் இழக்கச் செய்தது. ஐந்தாவதாக ஒரு முகம் வெறும் கர்வமுகமாக தனியே புடைத்தெழுந்தது. நான்முகனின் கர்வத்தை அகற்றி ஞான தீபமேற்ற இறைவன் திருவுளம் கொண்டார்.

    இதையடுத்து சிவபெருமானிடம் இருந்து புறப்பட்ட சக்தி ஒன்று, பைரவர் ரூபமாக மாறியது. பிரம்மனின் ஐந்து சிரசுகளில் கர்வ முகமானதை பைரவர் கிள்ளினார். அப்போது பைரவர் கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது. பிரம்மனும் தன் தவறு தெளிந்து நான்முகன் ஆனார். சிவனின் அம்சம் கொண்டதால், அவரது பிரிய தேவதையாக விளங்குகிறார் பைரவர்.

    அகந்தை உள்ளவர்கள் தேவர்களே ஆனாலும் பைரவர் தரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது. தீய எண்ணத்தோடு பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்களை காப்பாற்றுவதே இவரது அருட்பணியாகும். எனவேதான் கர்ம வினைகளின் படி உயிர்களுக்கு நல்லதையும், கெட்டதையும் வழங்கும் சனிபகவானுக்கு, பைரவர் குருவாக விளங்குகிறார்.
    செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் இந்த கோவிலுல் உள்ள குளத்தில் நீராடிவிட்டு, பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
    சிக்கமகளூரு மாவட்டம் பத்ராவதி மற்றும் தரிகெரே பகுதிகளுக்கு இடையே எம்.சி.ஹள்ளி கிராமத்தில் பத்ரகிரி மலை அமைந்துள்ளது. அந்த மலையில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் முருகன் ஆலயம் இருக்கிறது. இக்கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் சிவசுப்பிரமணியராக வீற்றிருந்து, முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த ஆலயத்தில் மூலவரான முருகன் பிரமாண்ட தோற்றத்துடன் சிவசுப்பிரமணி சாமியாக காட்சி தருகிறார். கருவறையில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி உள்ளார்.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செவ்வாய்தோஷம், பித்துரு தோஷம், ஜாதக பொருத்தமின்மை, திருமணத்தடை ஆகியவை நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம், செல்வம், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருதல் ஆகியவை கிட்டும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அதற்கான பரிகார முறைகளும் உள்ளன.



    அதாவது செவ்வாய் தோஷம் நீங்க வேண்டி வரும் பக்தர்கள் திங்கட்கிழமை அன்று இரவே கோவிலுக்கு வந்து, குளத்தில் நீராடிவிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு முதல் பூஜையில் கலந்துகொண்டு முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல், செவ்வாய்க்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் திருமணத்தடை, ஜாதக பொருத்தமின்மை, புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து பூஜை செய்தால் தடைகள் நீங்கி நினைத்தது நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இக்கோவில் பெங்களூரு-ஒன்னாவர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் பத்ரகிரி அமைந்துள்ளது.
    பச்சைமலை முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.
    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து சுமார்1 கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. மலையுச்சியில் கோவில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

    சுமார் 2,000 வருட பழமை மிக்க கோவில் இது. துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக ஸ்ரீசுப்பிரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது தல புராணம்.



    இங்கு பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரப் பெருவிழா இந்த நாளில் முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி வீடு-மனை வாங்கும் யோகம் கிட்டும்.

    ஆறாம் நாள்-திருக்கல்யாண வைபவம். இதில் கலந்து கொண்டு வேண்டினால் நினைத்தபடி திருமணம் இனிதே நடந்தேறும். 7-ஆம் நாள் திருத்தேரோட்டமும் 8-ஆம் நாள் முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன. ஸ்ரீசண்முகக் கடவுளுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி, சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம்.

    அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரரை தரிசித்து வழிபட்டு வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.
    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. யாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்டதால் வயிற்று வலியும், அதில் போடப்படும் பொருட்களைச் சுட்டெரித்ததால் பாவமும் ஏற்பட... நொந்து போனார் அக்னி பகவான். சிவனிடம் முறையிட்டார். இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார்.

    வரம் பெற்றார். பிற-கு, சிவனாரிடம், இந்த தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என அருளினார் சிவனார். இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவு-ந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு.

    ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் தலம், இரண்டு கோபுரங்களும் ஐந்து சுற்றுகளும் கொண்டு, அழகுறக் காட்சி தருகிறது. திருநாவுக்கரசரின் பதிகத்தைக் கேட்டு மகிழ, செவி சாய்த்து காட்சி தரும் கோட்டை விநாயகர் இங்கு உள்ளார். ரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று, மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என்கிறது தல புராணம்.



    இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

    பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடைபெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்திற்கான சிறந்த, விரைவில் பலன் தரும் பரிகாரம் என்ன என்பதை விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

    பங்குனி உத்திரம் சாஸ்தா கோவில்களில் தான் பெரும்பாலும் கொண்டாடப்படும். கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிகளில் காணப்படும். எனவே, தனித்து செல்லாமல் கூட்டமாகச் சென்று வழிபடுவார்கள். ‘சாத்து’ என்ற சொல்லுக்கு ‘கூட்டம்’ எனப்பெயர் வந்தது. கூட்டமாக வந்து வழிபடுவதால் இவர் சாஸ்தா எனப்பட்டார்.
    உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யும் போது அந்த குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவார் என்பது நம்பிக்கை.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சந்நிதிக்கு எதிரே ஸ்ரீ பைரவருக்குத் தனிக்கோவில் காணப்படுகிறது. நமது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் ஆட்சி செய்கின்றன. நவக்கிரகக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ராசி மண்டல நட்சத்திரத் தொகுதி ஒவ்வொன்றும் லிங்க வடிவில் இத்தல அதிபதியான ஸ்ரீ பைரவரை வணங்கி பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தெற்கு நோக்கிய கருவறையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கும் இவர் சூரசூளாமணி பைரவர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு நேர் எதிரில் முதல் பிரகாரத்தில் சப்த மாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொதுவாக சப்தமாதர்கள் தெற்குப் பிரகாரத்தில் மட்டுமே காணப்படுவர்.



    ஆனால், இத்தலத்தில் சப்தமாதர்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வடக்கு பிரகாரத்தில் அமைத்து தனி வழியும் அமைத்துள்ளனர். பைரவருக்குக் கிழக்கில் சூலதீர்த்தம் என்னும் பைரவ தீர்த்தம் அமைந்துள்ளது. இங்குள்ள பைரவருக்கு கருப்பு நூலினால் நெய்யப்பட்ட வேட்டி மற்றும் துண்டினை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

    பின்னர் இந்த வேண்டுதல் துணிகளை உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்கின்றனர். இவ்வாறு வஸ்திர தானம் செய்யும் குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவாராம்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதரை மனப்பூர்வமாக வழிபட்டு வந்தால், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் நீங்கி சந்தேகங்கள் உண்டாகும்.
    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி விட்டு, குளக்கரை பிள்ளையாரை நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பின்னர் பக்கத்தில் உள்ள எமதர்மனை அர்ச்சித்து பூஜிக்க வேண்டும்.

    பின்பு வாஞ்சிநாத பெருமானையும், மங்களநாயகி அம்மனையும் மனப்பூர்வமாக வழிபட்டு வந்தால், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் நீங்கும். சந்தேகங்கள் அகன்று ஒற்றுமை பலப்படும்.
    சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும்.
    சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தனின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் சரி.. அல்லது காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் சரி, நம்முடைய பாவக் கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் மறு பிறவி என்பதும் இருக்காது என்கிறார்கள். சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும். விபத்துகளும், ஆபத்துகளும் நம்மை நெருங்காது.
    தஞ்சாவூர் திருநறையூர் நம்பி ஆலயத்தில் உள்ள கருடாழ்வாரை ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும்.
    தஞ்சாவூரில் உள்ள நாச்சியார் கோவில் என்ற இடத்தில் உள்ளது திருநறையூர் நம்பி ஆலயம். இந்த ஆலயம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாலய பெருமாள், ‘திரு நறையூர் நம்பி’ என்ற பெயரிலும், தாயார் வஞ்சுளவல்லி என்ற பெயரிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

    பெருமாள் கருவறைக்கு முன்பாக வலது புறம் தனி சன்னிதியில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். உற்சவ காலத்தில் இங்குள்ள கல் கருடனே பெருமாளுக்கு வாகனமாக செல்லும் என்பது சிறப்பம்சம் வாய்ந்ததாகும். சன்னிதிகளில் இருக்கும் கருடாழ்வார் இதுபோல் வாகனமாக செல்வது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.



    இந்த ஆலயத்தில் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்திபெற்றது. கருடாழ்வாரே, ஆண்டாளின் தகப்பனாரான பெரியாழ்வார் அவதாரம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள கருடாழ்வாருக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகு சாத்தி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். பட்டு வஸ்திரம் சாத்தி வழிபட்டால், எண்ணங்கள் ஈடேறும்.

    ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடாழ்வாரை வணங்கினால், மகப்பேறு கிடைக்கும். திருமணம் கைகூடும். மேலும் விஷ ஜந்துக்களின் பயம் போகும். பொதுவாக எல்லா கருடனின் உடலிலும் எட்டு நாகங்களே ஆபரணங்களாக இருக்கும். ஆனால் இங்குள்ள கருடாழ்வாருக்கு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குகின்றன.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

    ஓம் அங்காரகாய வித்மஹே
    சக்திஹஸ்தாய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

    ஓம் லோஹிதாங்காய வித்மஹே
    பூமிபுத்ராய தீமஹி
    தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
    ×