என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்கு நடக்கும் திசைகளை பொறுத்து அவர்களுக்கு உகந்த நட்சத்திரம் கூடும் நாளில் பரிகாரங்களை செய்தால் விரையில் எதிர்பார்த்த பலன்களை அடையலாம்.
    சூரிய திசை நடப்பவர்கள்:- சூரியதிசை நடப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் கூடும் நாளில் சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஆலயம் சூரியனுக்குரிய பரிகார ஸ்தலமாகும். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இந்தத் திருத்தலம் உள்ளது. சூரியனுக்கு எதிரில் குரு நிற்க, நவக்கிரக அனுக்கிரக ஸ்தலமாக இது விளங்குகிறது.

    சந்திர திசை நடப்பவர்கள்:- திங்கட்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் திங்களூர் சென்று வழிபட்டு வரலாம். இதுவும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சந்திரன் பூஜித்து பேறு பெற்ற ஆலயம் இதுவாகும்.

    செவ்வாய் திசை நடப்பவர்கள்:- செவ்வாய்க்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டு வரலாம். இந்த ஆலயத்தில் வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதர், தையல்நாயகி, அங்காரகன் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலம் இது. செவ்வாயின் கடுமை குறைய, இங்குள்ள அங்காரகனுக்கு பரிகாரம் செய்வார்கள்.

    புதன் திசை நடப்பவர்கள்:- புதன்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில் திருவெண்காடு சென்று வழிபட்டு வருவது நல்லது. இங்குள்ள பெரிய வாரணப்பிள்ளையார், அகோரமூர்த்தி, கொம்பில்லா நந்தி, சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாநாயகி, புதபகவான் ஆகியோரை வழிபட்டால், தடைகளில் இருந்து தப்பிக்கலாம். பிள்ளைச் செல்வம் வழங்கும் பிள்ளை இடுக்கியம்மன் சன்னிதி இந்த ஆலயத்தில்தான் உள்ளது.



    குரு திசை நடப்பவர்கள்:- வியாழக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், ஆலங்குடிக்குச் சென்று வழிபட்டு வரலாம். கும்பகோணம் பக்கத்தில் உள்ள இந்தத் திருக்கோவில் அகஸ்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகும். இங்குள்ள இறைவன், தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற திருநாமமும் இறைவனுக்கு உண்டு.

    சுக்ர திசை நடப்பவர்கள்:- வெள்ளிக்கிழமையும், தாரா பலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், கஞ்சனூர் சென்று வழிபட்டு வருவது நல்லது. இங்குள்ள அக்னீஸ்வரர் வழிபாடு செய்வது சுக்ர பலத்தைக் கொடுக்கும். கும்பகோணம் அருகில் உள்ளது இந்த ஆலயம்.

    சனி திசை நடப்பவர்கள்:- சனிக்கிழமையும், தாராபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நாளில், காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் தீர்த்தமாடி தர்ப்பாரண்யேஸ்வரர், ஞானாம்பிகை, காகவாகனத்தான் ஆகியோரை வழிபட்டு வரவேண்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறும் போது இங்கு சென்று வழிபட்டால் தடைகள் அகலும்.

    ராகு- கேது திசை நடப்பவர்கள்:- இந்த இரண்டு கிரகங்களும் சுய பலம் அற்ற கிரகங்கள். இவர்களுக்கென்று தனி வீடு இல்லை. ஆனால் அவர் எந்தக் கிரகத்தில் வீட்டில் இருக்கிறார்களோ, அந்த கிரகத்திற்குரிய கிழமையில் தாராபலம் பெற்ற நட்சத்திரம் சேரும் நாளில் அந்தந்த கிரகங் களுக்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். ராகுதிசை நடப்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள நாகநாதரை வழிபட்டு வரலாம். கேது திசை நடப்பவர்கள் பூம்புகாருக்கு அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் சென்று கொள் தானியம் தீபமேற்றி கேதுபகவானை வழிபட்டு வர வேண்டும்.
    கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.
    தெய்வ வழிபாடுகள் தான் மனித வாழ்க்கைக்கு தெம்பூட்டுபவை. சோகமான நிலையில் இருக்கும் ஒருவரை யோகமான வழிக்கு மாற்றுவது தெய்வ வழிபாடுகள் தான். எந்த வழிபாடாக இருந்தாலும், குருவின் வழியாக அதை முறைப்படி செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    ஒரு சிலருக்கு வழிபாடு மேற்கொண்ட உடனேயே பலன் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு அந்த பலன் தாமதமாகும். இதற்கு அவரவர் ஜாதக அமைப்பும், பூர்வ புண்ணிய பலனுமே காரணம். அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், தொடர்ந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நற்பலனைப் பெறலாம்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனையோ தோஷங்கள் இருக்கின்றன. பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்காகத் தான் பிரதோஷத்தன்று நாம் ஈசனையும், நந்தியெம்பெருமானையும் வழிபடுகிறோம்.

    இல்லத்திலோ, ஆலயங்களுக்குச் சென்றோ கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜையைச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் உருவாகும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.



    பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். மேலும் கிரக தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் அகல எளிய வழிபாடு கோ பூஜை தான். நம்மால் இயன்ற பொழுதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் உணவு கொடுக்கலாம். இதனால் நம்முடைய கர்ம வினைகள், முன்னோர்களின் சாபங்கள் நீங்கி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

    பசுவை தெய்வத்தின் அம்சமாக வழிபட வேண்டும். வாசமுள்ள மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு வஸ்திரம் சாத்தி, மூன்று முறை வலம் வந்து தீப தூபங்கள் காட்டி அதன் வால் பகுதியைத் தொட்டு வணங்க வேண்டும். பசு வசிக்கக் கூடிய கொட்டிலில் தியானம் செய்வதும், ஹோமம் செய்வதும் நல்லது. பசுவின் கோமியத்தை தீர்த்தமாக வீட்டிற்குத் தெளிப்பது வழக்கம். அதன் சாணம் கூட கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

    வீட்டில் கிரகப்பிரவேசம் வைக்கும் பொழுது, கோபூஜை செய்து பசுவும், கன்றும் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, வீட்டினர் குடியேறுவர். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் விலகி, சகல சம்பத்தும் கிடைக்க அது வழிகாட்டும் என்பது நம்பிக்கை. மணிவிழா, நூற்றாண்டு விழா போன்றவை கொண்டாடும் போது கூட, முதன் முதலில் கோபூஜை செய்து, பிறகு கஜ பூஜை செய்தபிறகு தான் மற்ற ஹோமங்களைத் தொடங்குவார்கள்.

    அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரகப் பாதிப்புகள் அகல வழிபிறக்கும்.



    நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால் பிதுர் தோஷம், சாப - பாவ தோஷங்கள் போன்றவை விலகி, குலம் தழைக்கும். கொஞ்சி மகிழும் குழந்தை இல்லத்தில் தவழ வேண்டுமானால் தவறாமல் கோபூஜை வழிபாட்டை மேற்கொள்வதோடு, பசுவிற்கு இயன்ற அளவு உணவோ, பழமோ கொடுத்து வர வேண்டும்.

    மேலும் பாதியில் கட்டிடப்பணிகள் நின்றாலோ, கட்டிடம் கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும். இதை அனுபவத்தில் தான் உணர முடியும். வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக கோபூஜை செய்ய வேண்டும்.

    அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது. பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் மாறி மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன் கிடைக்கும்.

    இல்லத்துப் பூஜையறையில் பசுவும் கன்றும் இணைந்த கண்ணன் படத்தைவைத்து வழிபடுவதன் மூலம் பிள்ளைச் செல்வம் உருவாக வழிபிறக்கும்.
    திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.
    திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

    திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

    இக்கோவிலில் வட்டவடிவமான கருவறைப் பகுதியில் முன்புறம் மகாதேவரும், பின்புறம் பார்வதி தேவியும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் சதிதேவி, தர்மசாஸ்தா, பெருமாள், யட்சி ஆகியோர்களுக்குத் தனிச் சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு அருகில் பெரிய தெப்பக்குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலில் இருக்கும் பார்வதி சன்னிதி ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மாலை வேளையில் பார்வதி தேவி சன்னிதி வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. 12 நாட்களுக்குப் பின்பு மீண்டும் சன்னிதி மூடி வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இச்சன்னிதியிலிருக்கும் சாளரத்தின் வழியாகப் பக்தர்கள் பார்வதி தேவியை வேண்டிச் செல்கின்றனர்.



    மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி எட்டு நாட்கள் இங்கு சிறப்பு விழா ஒன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடைபெறும் ஆறாட்டு விழா மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இவ்விழா நாட்களில் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு, உணவு உண்பவர்களுக்கு வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங்கிவிடும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் இருக்கும் பார்வதி தேவி சன்னிதி திறந்திருக்கும் பன்னிரண்டு நாட்களில் இங்குள்ள பார்வதி தேவியைத் திருமணத்தடை உடையவர்கள்  வழிபட்டுச் சென்றால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களிருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிலிருந்து அங்கமாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீமூலநகரம் சென்று, அங்கிருந்து வல்லோம் சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து அகவூர்  திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலுவா, காலடி ஆகிய ஊர்களிலிருந்து திருவைராணிக்குளத்திற்குக் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    சொத்து பிரச்சனை, வழக்கு, கடன், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பைரவருக்கு சில பரிகாரங்களை எந்த நாட்களில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவர்கள், ஆனந்த கால பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கோர்ட்டு வழக்கு, விவாகரத்து, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும். சனியின் குருநாதர் பைரவர்.

    வெள்ளிக்கிழமை அன்று ராகுகாலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மாலை அணிவித்து, புனுகு பூசி, சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டால், அர்த்தாஷ்டம சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும். கண்டகச்சனியின் பிடியில் இருந்து விடுபட திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் பைரவருக்கு அல்லி மாலை அணிவித்து, புனுகுபூசி, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த சாதம் படையலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    ஏழரைச்சனியின் பிடியில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, புனுகு பூசி, கருவேப்பிலைசாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.



    பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட வேப்ப எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்கள் செவ்வாழை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட குணம் கிடைக்கும்.

    சொத்து பிரச்சினை, இழந்த சொத்துகளை திரும்ப பெற, வழக்குகளில் வெற்றி கிடைக்க 11 மிளகை சிவப்பு நிற துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    திருமணத்தடை உள்ளவர்கள் நுனி வாழை இலையில் மஞ்சள் அரிசியை கொட்டி அதில் நட்சத்திர தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு முந்திரி கொட்டைமாலை அணிவித்து, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து 5 அல்லது 7 அஷ்டமிகளில் வழிபட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு, உயர் பதவி கிடைக்க பைரவருக்கு கிராம்பு மாலை அணிவித்து வணங்கி வர நல்லபலன் கிட்டும்.

    ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கமாலைஅல்லது எலுமிச்சை பழ மாலை அணிவித்து ,எள் கலந்த சாதம், இனிப்பு பதார்த்தங்கள், பாயசம் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர்கடன் பூஜைக்கான மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து வழிபட்டு 10 பேருக்கு அன்னதானம் செய்தால் பிதுர்கடன் நீங்கும்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை மாரியம்மனை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று முதல் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின் முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகளில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறும்.

    மேலும் இந்த கோவில் வளாகத்தில் முதல் கடவுளாக விநாயகரும், துர்க்கையம்மன், சுப்பிரமண்யசுவாமி, தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் ஒரே இடத்தில் ரெங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள நந்தி பகவான் காதில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி்க்கடனை சொல்லி வழிபட்டு வருவது கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.



    கோவிலில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    உப்பு, மிளகு காணிக்கை :

    நிலக்கோட்டை மாரியம்மனின் அருளால் பக்தர்களுக்கு ஏற்படும் நோய்கள் குணமடைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நோய்களை தீர்த்து வைத்தால் உப்பு காணிக்கை செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். அதன்படி நோய் குணமானதும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் உப்பை காணிக்கையாக செலுத்துவார்கள்.

    இதே போன்று உடலிலும், மனதளவிலும் ஏற்படும் இன்னல்களை போக்கினால் மிளகை காணிக்கை செலுத்துவதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்வார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு மிளகை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த நடைமுறை தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    கடன் தொல்லை, திருமணத்தடை உள்ளவர்கள் மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரில் விசாலாட்சி ஜோதிட மந்திராலயத்தில் உள்ள திசை மாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தால் பிரச்சனை தீரும்.
    மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் சாலை யில் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலம் அடுத்த மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரில் விசாலாட்சி ஜோதிட மந்திராலயத்தில் உள்ளது திசை மாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவில்.

    விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து வலம்புரி விநாயகருக்கு 7 தேங்காய் மாலை சாற்றி, 7 லட்டு, 7 எலுமிச்சை பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

    இதனால் கடன் தொல்லை தீர்ந்து, திருமணத்தடை அகன்று முன்னோர் சாபமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    கோவில் தரிசன தொடர்புக்கு கைப்பேசி எண். 94431&65504.
    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது ஒவ்வொரு விதமாக உடையும் தேங்காய்க்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரிபாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும்.

    சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.



    குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக்கூடாது.

    ஆனால் சிதறுகாய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான், நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.
    ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் விலகி விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.
    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம் 5. ப்ரணகால தோஷம் எனப்படும்.

    1. வஞ்சித தோஷம் : பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

    2. பந்த தோஷம் : நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.



    3. கல்பித தோஷம் : பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

    4. வந்தூலக தோஷம் : ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

    5. ப்ரணகால தோஷம் : திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.
    கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடியில் நவகிரக தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை வணங்கினால் தோஷம், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
    நவக்கிரகங்களால் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் ஆலயங்கள், தமிழகத்தில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி. இது கும்பகோணம் அருகில் உள்ளது. இத்தலத்தில் வழிபட்ட பிறகே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

    சனிப்பெயர்ச்சியால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை சிவன் - பார்வதி - முருகருக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பின் சூரியனாரை மனமுருக பிரார்த்தித்தால் எப்படிப்பட்ட சனி தோஷமும் விலகும்.

    இந்த தலத்திற்கு ‘பஞ்சமங்கள சேஷத்திரம்” என்ற நாரதர் கூறுவதாக நாடி சாஸ்திரம் பேசுகிறது. ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரம். அனுமன் சாலீசா போன்ற ஸ்லோகங்களை இந்த பஞ்சமங்கள சேஷத்திரத்தில் அமர்ந்து 12 முறை பாராயணம் செய்தால், களத்திர தோஷம் நீங்கும். விவாகம், புத்திர, கல்வி, உத்யோகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் முற்றிலுமாக களையப்படும்.



    காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தாயாரையும் பிரார்த்தித்த பின், சூரிய காயத்ரியை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சமர்ப்பித்து பெரும் நல்விளைவுகளில் சூரிய உதய நேரத்தில் பாராயணம் செய்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சனி, கண்டகச் சனி போன்ற 12 விதமான சனி தோஷங்கள் நிவாரணம் ஆவதுடன் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும்.

    தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்திற்கு வந்து இங்கு தரும் வெள்ளெருக்கு இலையில் சுவாமி நிவேதனம் செய்த தயிர்சாதத்தை வைத்து சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    ஆடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இறைவன் பிராணநாதசுவாமி- இறைவி மங்களாம்பிகை.

    தல விருட்சம் - வெள்ளெருக்கு

    இத்திருத்தலத்தில் முறைப்படி வழிபாடு செய்தால் ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். அன்பான இல்லறமும் அமையும்.
    சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும், சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரியதொரு சிவாலயம் உள்ள அற்புதமான தலம் சென்னை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருகோயில் உள்ளது.
    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. சிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும், சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரியதொரு சிவாலயம் உள்ள அற்புதமான தலம் சென்னை TO திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருகோயில் உள்ளது. இங்குள்ள நடராஜ பெருமான் மூலிகைகளால் ஆனவர். இவருக்கு அபிஷேகம் செய்த நீரை பருகினால், சிறுநீரக நோய்கள் நீங்குகிறது.

    ஒரு கிலோ வெட்டி வேரினை வாங்கி 48 துண்டுகளாக மாலை கட்டி நடராஜருக்கு செலுத்தி அர்ச்சனை செய்து பின்னர் அந்த வெட்டி வேரினை ஓரு டம்ளர் நீரில் ஒவ்வொரு துண்டு வெட்டி வேரினையும் 48 நாட்கள் இரவு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் சிறுநீரக நோய் தீர்ந்து விடுகிறதாம். சிறுநீரக நோய் உள்ளவர்கள் நிறைய பேர்கள் வந்து தரிசித்து போகிறார்களாம். ஊர் பொதுமக்களும் கோயில் குருக்கலும் கூறுகிறார்கள்.



    இந்த கோவில் உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று. மாசி மாதம் வளர்பிறையில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்தால் பல தோஷங்கள் நிவர்த்தி ஆகிறது. சுவாமிக்கு குத்துக்கடலையை மாலையிட்டு குத்துக்கடலை சுண்டல் பூஜையை விடியற்காலை 4.30 மணி முதல் 7 மணிக்குள் குரு ஓரையில் வழிபட வேண்டும். இந்த பூஜையை 11 வாரம் செய்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூரில் இருந்து அடிக்கடி பஸ் போக்குவரத்து வசதி உள்ளது.
    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது.
    திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோவில் ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகார தலமாகும். ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க வழிபட்டதால் இத்தலம் பாம்பு+புரம்= திருப்பாம்புரம் என்றானது.

    கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனை தொழுத வண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். ராகுவும், கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு.

    ராகுவும், கேதுவும் கோவிலில் ஈசானிய மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும், அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வணங்குபவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.



    ராகு, கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

    ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரத்துக்கு சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வரை ரெயிலில் வந்து அங்கிருந்து பஸ், காரில் கோவிலுக்கு வரலாம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம், திரு நீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.
    ×