என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஒருவர் ஜாதகத்தில் கர்மாவினைகள், எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பிரச்சனைகள் தீர்ந்து நலம் பெறவேண்டும்.
    பொதுவாக ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.

    சரி, இதில் தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு எல்லோருக்கும் பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா? சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இது எதனால்? இப்படி நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.

    பரிகாரம் :

    1. த்ருத கர்மா (தெரிந்தே செய்த பாவம்):

    இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது.



    இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. அதை ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கஷ்டங்கள் தொடர் கதையாக வந்துகொண்டு இருக்கும்.. அனுபவித்துதான் தீரவேண்டும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

    2. த்ருத அத்ருத கர்மா (தெரிந்தே செய்த தவறு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது):

    சில சமயம் நாம் செய்யும் காரியம் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்திருப்போம். நல்லவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் விட்டிருப்போம். தீயவர்களுக்கு அவர்களுடைய குணம் அறியாமல் உதவி செய்திருப்போம். ஆனால், அந்தக் காரியம் தவறாக முடிந்திருக்கும். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது.

    இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    3. அத்ருத கர்மா (தெரியாமல் செய்த தவறு):

    மிகவும் மன்னிக்கக்கூடிய சிறய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.

    ஆகவே மேற்கூறிய கர்மாவினைகள், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நலம் பெறவேண்டும்.
    திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.

    மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.

    வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்குமம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.

    திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.



    விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.

    ஸ்ரீ மந்நாராயணனின் அம்சமாகப் போற்றப்படுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.

    திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோஷ நாளில் நந்திபகவானுக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுக்க வேண்டும். விரைவில் திருமணம் நடைபெறும்..!!

    12 இராசிக்காரர்களின் துன்பங்களை போக்க வெற்றிலை பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    மேஷம்:- வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.

    ரிஷபம்:- வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கன்னி:- வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    மிதுனம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கடகம்:- வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

    சிம்மம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.



    துலாம்:- வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    விருச்சிகம்:- வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

    தனுசு:- வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மகரம்:- வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    கும்பம்:- வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மீனம்:- வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
    பைரவரை தினமும் வழிபாடு செய்வதால் தோஷங்கள், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபாடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

    1. தலை குனியா வாழ்க்கை.
    2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
    3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
    4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
    5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
    6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
    7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
    8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
    9. இறைவனை எளிதாக உணர்தல்.
    10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.
    பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ள அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.
    திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம்.

    பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்.

    அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டி கேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.

    சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.

    இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி சூன்யம் நோய்களும் குணமாகும் என கூறுகின்றனர் பக்தர்கள்.

    மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.

    நம்மை பாதித்துள்ள தோஷங்களும், பாவங்களும் நீங்க நாமும் ஒரு முறை திருமங்கலம் சென்று வரலாமே!
    செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
    சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.

    அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

    ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.



    மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கள காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங் களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

    செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன் பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
    ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு ஸ்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை அங்கு வழிபட, மலடியும் குழந்தை பெறுவாள்.
    ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும்’ என்று திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் அபிராமிபட்டர் ஏராளமான நற்பேறுகளை வேண்டுகிறார். அதில் அவர் ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கூறுவதில் இருந்தே புத்திரபாக்கியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    அதாவது மற்ற பேறுகள் எல்லாம் தவறினாலும், புத்திர பாக்கியம் எனும் சந்தான பாக்கியம் தவறாமல் கிடைக்க அருள வேண்டுகிறார் அபிராமிபட்டர். திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதத்தில் இருந்தே புதுமண தம்பதியரிடம் ஊராரும், உறவினர்களும் கேட்கும் ஒரே கேள்வி ‘விசேஷம் ஏதாவது உண்டா?’ என்பதுதான். இங்கு விசேஷம் என்பது புத்திர பாக்கியம்.

    தற்போதைய உணவு பழக்க முறையாலும், கர்ம வினைகளாலும் சிலருக்கு புத்திர பாக்கியம் தள்ளிப்போகலாம். ஆண்களின் உயிரணுக்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது. அதுபோல மாதவிலக்கில் தடைகள், கருமுட்டை உருவாகுவதில் உள்ள தடைகள், கரு குழாயில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்சினைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.

    ஆனால் ஒரு தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். ஆம்! அந்த ஆலயமே ‘திருவாலங்காடு வண்டார் குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன.

    ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஈசனின் ஊர்த்தவ நாட்டியம் நடந்ததும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான்; வடபத்திரகாளி அம்மன்.



    நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ஆகும். இங்கு நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்துதான், அதிதீ புத்திரபாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரன் இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, தன் மகன் ஜெயந்தனை பெற்றானாம்.

    பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை சமேத சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு வந்தான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் அசரீரியாக ‘பரதா! நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா.

    கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் அத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை அங்கு வழிபட, மலடியும் குழந்தை பெறுவாள்’ என்று அருளினார்.

    பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

    இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என அம்மன்கள் உள்ளனர். இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

    இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.

    பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி -தெய்வானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
    திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். மார்கண்டேயரை எமனிடம் இருந்து காத்து அருளியவர் இத்தல இறைவன். இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கூறத்தங்குடியில் உள்ள இறைவனும் எம பயம் போக்கும் இறைவனாக விளங்குகிறார். பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, மனம் குழம்பிய நிலையில் இங்கு வந்து வழிபட்டு தெளிவு பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

    திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்திற்கும் இணையாக விளங்கும் ஆலயம் என்பதால், இத்தல இறைவன் எம சம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எமனின் சாபத்தை சம்ஹாரம் செய்து, மோட்சம் அளித்த தலம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆலயம் எமபயம் போக்கும் திருத்தலமாக திகழ்கிறது.

    திருவாரூர் மாவட்டம் பாமணி கிராமத்தில் உள்ள அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது. இந்தக் கோவில் ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

    காவிரியின் தென்கரை தலங்களில் 104-வது தலம். சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாகநாதசுவாமி தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். வாசலில் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் காட்சியளிக்கிறார்.

    மகாவிஷ்ணு துயில் கொள்ளும் அஷ்ட நாகங்களான வாசுகி, கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை ஈசன் உண்டதால் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க வழி தேடினார். அப்போது பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேஸ்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று அசரீரி கேட்டது.



    ஆதிசேஷன் தனஞ்செய முனிவராக சுவாமியை வணங்கிய நிலையில் தனி சன்னிதியில் வீற்றிருந்து ராகு-கேது தோஷ நிவர்த்தி வழங்குகிறார். இந்த விவரங்கள் தருவநாடி, சப்தரிஷி நாடி என்றழைக்கப்படும் நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளில் குறிப்பிட்டு தோஷ பரிகாரங்கள் செய்ய வழிபடச் சொல்கிறது.

    பாதாளத்தில் இருந்து சுயம்பு லிங்கமாக புற்று மண்ணால் ஆன சர்ப்பபுரீஸ்வரர் என்றழைக்கப்படும் நாகநாத சுவாமிக்கும், அம்பாள் அமிர்த நாயகிக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜைகள் செய்து வழிபட்டால் பூமியின் புதல்வனான செவ்வாயின் தோஷம் நீங்கும். முன் ஜென்ம வினையால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும் என தலபுராணம் கூறுகிறது.

    சிவபெருமான் பார்வதி தேவியுடனும், குழந்தையான சுப்பிர மணியருடன் காட்சி தரும் கோலம் தான் சோமாஸ் கந்தர். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம், பூஜைகள் செய்து வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரச் செய்து தரிசனம் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.
    மயிலாப்பூரின் பழமையான ஆலயம், ராகு - கேது தோஷம் நீக்கும் தலம், காலையில் தொடங்கி மதியம் வரை தொடர்ந்து அபிஷேகம் காணும் அம்மன் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன் ஆகும்.

    மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர்.



    இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம்.

    மேலும், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள். காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இந்நேரம் மாறுபடும்.
    ஒரு வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தரமாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    மனிதன் மண் மீது ஒரு வீடு கட்டி குடிபோகும்பொழுது ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பது மனிதனுக்கு தெரியாது.

    ஆனால், சில பறவைகளுக்கு அதை அறிந்து கொள்ளும் ஞானம் நிறைய உண்டு. சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.

    மேலும், ஒரு வீடு கட்டி குடிபோகும் பொழுது, வீட்டிற்குள் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது.

    நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும்.

    அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.

    ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லதா? கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதைவிட இது போன்று செய்தால் நல்லபலன் இருக்கும்.

    புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம்.

    இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது, இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
    திருச்சி திருவானைக்காவலில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    வீரபத்திர சுவாமி திருக்கோவில்களை நாம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காண முடியும். ஆம்! அப்படிப்பட்ட ஒரு ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது.

    கருவறையில் இறைவன் அருள்மிகு வீரபத்திரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் இவருக்கு மட்டுமே வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலை படலும் உரியனவாக உள்ளன.

    இவரது ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது.

    ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் மகாஷ்டமி விரதம். இது வீரபத்திரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் இவரை அலங்கரித்து வழிபடுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரரை தும்பை பூ மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். வெற்றிலை மாலை சூட்டி அர்ச்சனை செய்து இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.

    திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் மேற்கு ராஜ கோபுரத்திற்கு அருகே உள்ளது இந்த ஆலயம்.
    ×