என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சோளிங்கருக்கு வந்து நரசிம்மருக்கு உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம். பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.

    பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும். புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

    பிரம்ம தீர்த்தம், பைரவ கலா வர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன. இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும்.

    கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர். அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி ‘பிரம்மா’ உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். ‘மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்’ என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார். ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.

    சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர். அப்போது கும்போதிர கால்கேயர் என்னும் அரக்கர்கள் தவத்திற்கு இடையூறு செய்தனர். அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார். நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார். ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.

    மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது. பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது. படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும். வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.
    அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.
    பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம். கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
    ஜாதகத்தில் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அந்தந்த பிரச்சனைகளுக்கு உகந்த பரிகாரங்களை பைரவருக்கு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
    நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

    பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    குழந்தைப் பேறு கிடைக்க

    தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

    வறுமை நீங்க

    நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.

    திருமணம் நடக்கும்

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும்.
    கார்த்திகை மாதம் முழுவதும் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
    * திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
    * கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
    * கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
    * கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
    * கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

    * கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
    * கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
    * கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    * கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
    * கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
    * கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    * தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
    நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை வைத்து முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.
    நமது பெற்றோர்கள் உயிரேடு இருக்கும் போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிக் பார்க்க வேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து அதற்குள் அவர்கள் அமராகி விட்டால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடன்களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்ய வேண்டியது நமது தலையாக கடமையாகும்.

    நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும்.

    அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்களை இறந்த திதியில் ஒரு புரோக்கிதரை அழைத்துமுறைப்பிடி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம்(உணவு) அளிக்க வேண்டும்.

    அப்படி செய்ய தவறிவிட்டால் நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல் நம் சந்ததியினருக்கு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

    பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் இதோ...

    அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால் அன்றைய தினம் சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்ல் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனொனில் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

    மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு பித்ரு பூஜை செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் என்று தெரிவித்தார்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.

    இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.

    சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

    செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

    ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

    இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.
    நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம்.
    மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.

    1. சூரியன் : கச கசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

    2. சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.

    3. செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

    4. புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

    5. வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    6. சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    7. சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    8. ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

    9. கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
    ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நிரந்தர தீர்வை காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சூரியன்: சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

    சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.

    செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.

    புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

    குரு: குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

    சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.

    சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.

    இராகு: இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு.

    கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.
    ஒருவரது ஜாதகத்தில் சூரியதோஷம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகள் தீர என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம்.
    சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம்.

    உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும்.

    சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

    சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.

    முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு

    சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
    நவக்கிரகங்கள் என்று போற்றப்படும் ஒன்பது கிரகங்களும், நமக்கு ஒவ்வொரு விதத்தில் நன்மைகளை வழங்குகின்றன. எந்தக் கிரகத்தை வணங்குவதால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    சூரியன் - ஆரோக்கியம், தலைமைப் பதவி, அரசு வேலை

    சந்திரன் - கீர்த்தி, சிந்தனாசக்தி, கற்பனை வளம்

    அங்காரகன் - செல்வம், வீரம், விவேகம், தன்னம்பிக்கை

    புதன் - அறிவு, வெளிநாட்டுயோகம், நகைச்சுவை உணர்வு

    வியாழன் - நன்மதிப்பு, போதிக்கும் ஆற்றல், மரியாதை

    சுக்ரன் - அழகு, அந்தஸ்து, நல்வாழ்க்கை, குணமான வாழ்க்கைத் துணை

    சனி - சந்தோஷம், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம்

    ராகு - பகைவர் பயம் நீங்குதல், பணவரவு அதிகரித்தல்

    கேது - குல அபிவிருத்தி, ஞான மார்க்கம், ஆன்மிக வாழ்வு.
    சோளிங்கபுரத்தில் யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் மோட்சம் கிட்டும். பாவங்கள் நீங்கும். துன்பங்கள் பறந்தோடும்.
    நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான்.

    உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.

    ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.

    சப்த ரிஷிகளும் வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்கபுரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர்.

    அவர்களிடமிருந்து முனிவர்களை காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களை கொல்ல ஆணையிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும் ஆஞ்சநேயரும் இத்திருத்தலத்தில் நரசிம்மமூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரிய மலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
    ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும், அதற்கு என்வென்ன பரிகாரங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.






    ராகு தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம்.



    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

    ராகு தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?

    ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை சூரியோதயத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வையுங்கள். தினமும் துர்கை காயத்ரி கூறுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கையை உதிரி 5 எலுமிச்சம்பழம் கொடுத்து, 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்கள். (எலுமிச்சை தீபம் கூடாது). 3 பழம் திரும்பி வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

    அடிக்கடி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள துர்கையையும், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று ராகுவையும், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நாகரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். முடிந்தால் பக்தர்களுக்கு உளுந்துசாதம் தானமாக கொடுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது அகத்திக்கீரை தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

    அடிக்கடி அருகிலுள்ள கோயிலில் துர்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் ராகுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை ரம்மியமாகும்.
    ×