என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர்.
    • இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் கொண்டாட்டமாகும். 'ஈஸ்டர்' என்ற வார்த்தை 'ஆல்பா' என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு 'விடியல்' என்று பொருளாகும். இது ஜெர்மன் மொழியில் 'ஈஸ்டாரம்' என்றும், ஆங்கிலத்தில் 'ஈஸ்டர்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு 'உயிர்த்தெழுதல்' என்பது பொருளாகும்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்வதற்கு ஐரோப்பாவில் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளின் பயன்பாடு 13-ம் நூற்றாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதையடுத்து, உயிர்த்தெழுதலின் அடையாளமாக முட்டை மாறியது. இயேசு கல்லறையில் இருந்து எழுந்தது போல், முட்டை ஓட்டில் இருந்து வெளிப்படும் குஞ்சு புதிய வாழ்க்கையை குறிக்கிறது.

    ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தில், சிலுவையில் இயேசு சிந்திய ரத்தத்தின் அடையாளமாக முட்டைகளுக்கு சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. இந்த முட்டையினுள் வண்ண வண்ண சாக்லெட்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் படி இருக்கும்.

    ஈஸ்டர் என்பது, 'பாஸ் ஓவர்' நிகழ்வை நினைவுகூரும் பாஸ்கா பண்டிகைக்கு ஒப்பானதாகும். இது இஸ்ரவேலர்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, எகிப்தை விட்டு புறப்படும் போது, கடவுள் எகிப்தில் இஸ்ரவேலர்களின் வீட்டு நிலைகளில் ரத்தம் பூசப்பட்ட வீடுகளை 'கடந்து சென்றதன்' நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதை யூதர்கள் இன்றளவும் முக்கியமான நிகழ்வாக கொண்டாடி வருகின்றனர்.

    இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பாஸ்காவைக் கொண்டாடினர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அப்பம், திராட்சை ரசத்தை சீடர்களுக்கு கொடுத்து நற்கருணை திருவிருந்து என்னும் உடன்படிக்கையை உருவாக்கிய கடைசி இரவு உணவு - பாஸ்காவின் முதல் நாளுக்கான பாரம்பரிய உணவாகும்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரத்தம் சிந்தி மரித்ததை நினைவுகூரும் நிகழ்வு தான் இப்போது ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படும் நற்கருணை, திருவிருந்து ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை என்பது நம் ஒவ்வொருவருக்கும் நித்திய வாழ்வு உண்டு என்பது தான்.

    இன்றைக்கு நம் ஒவ்வொருவரையும் வாட்டிக்கொண்டிருக்கும் பயங்கள் பலவிதம். அது மரணத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். அல்லது வியாதியால் மரணம் வந்துவிடுமோ என்ற அச்சமாக இருக்கலாம். அல்லது எதிர்காலத்தைக் குறித்த பயமாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொருவரையும் பலவிதமான பயங்கள் ஆட்டிப் படைக்கிறது.

    ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நமது பயத்தை நீக்குகிறவர் இயேசு கிறிஸ்து, அதனால் தான் வேதாகமத்தில் 365 முறை 'பயப்படாதே' என்று கூறப்பட்டுள்ளது. நமது பயத்தை அவர் சந்தோஷமாக மாற்றுகிறார் எப்படி?

    "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்றார் (மத்.28:20). அல்லேலூயா! ஆமேன்.

    இன்றைக்கு உலக வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மனிதன் வாழ்விலிருந்து மரணத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஒரு வாசல்.

    நிலையற்ற வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள்ளாக கடந்து செல்லுகிற ஒரு வாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே அவர் நிரூபித்தார்.

    மனிதனாய் பிறந்தார், மாம்சமும் ரத்தமும் உடையவராய் வாழ்ந்தார், அவர் மகிமையின் சரீரத்தோடு எழுந்திருக்கும்போது எனக்கும் அதே நம்பிக்கை உண்டு. மறுமை ஒன்று உண்டு, அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் இந்த உலகிற்கு காட்டியது.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உன்னதமான நம்பிக்கையை தருகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது போல நாமும் இம்மையில் மரித்தாலும், மகிமையில் நிச்சயமாக உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை தான் அது, ஆம் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், ஜீவிக்கிறார்.

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் பிறருக்கு அவர் செய்த அன்பான சேவையின் முன் மாதிரியை பின்பற்றுவதன் மூலம் நாம் அவருக்கு நன்றி செலுத்தி, உயிர்த்தெழுதல் நினைவை கொண்டாடி, தேவைப்படுவோருக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவோம். 

    • 16-ந்தேதி சங்கடகர சதுர்த்தி.
    • 19-ந்தேதி சஷ்டி விரதம்.

    15-ந்தேதி (செய்வாய்

    * பாபநாசம் சிவபெருமான் விருட்சப சேவை.

    * சமயபுரம் மாரியம்மன், உதகமண்டலம் மாரியம்மன் ரத உற்சவம்.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் விழா தொடக்கம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * சங்கடகர சதுர்த்தி.

    * சென்னை கேசவப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

    * சமயபுரம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெரு மாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (வியாழன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * திருவைகுண்டம் வைகுண்டபதி, திருவரங்கம் நம்பெருமாள், மதுரை வண்டியூர் மாரியம்மன் தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (சனி)

    * சஷ்டி விரதம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சென்னை சென்ன கேசவப் பெருமாள் தலங்களில் ரத உற்சவம்.

    * அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    *கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வெண்ணெய்த் தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் கருட வாகனத்தில் பவனி.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன் னிதி எதிரில் அனும னுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்)

    * சிரவண விரதம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் கருட வாகனத் தில் பவனி.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம்.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-2 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை காலை 10.07 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 2.04 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், சென்னை ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோவில்களில் கருட வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவ சாந்தி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-களிப்பு

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-பண்பு

    கன்னி-வரவு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- ஊக்கம்

    மகரம்-உவகை

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-மாற்றம்

    • திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
    • வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பு.

    வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளி உள்ள செல்வ முத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்வது மூலம் செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

    முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், 12 கைகள் செய்யும் தொழில்களும்:

    ஆறுமுகங்கள்:

    1. உலகிற்கு ஒளி தருவது ஒருமுகம்,

    2. வேள்வி காப்பது ஒரு முகம்,

    3. அடியார் குறை நீக்கி வரமருளுவது ஒரு முகம்,

    4. வேத ஆகமாய் பொருளை விளக்குவது ஒரு முகம்,

    5. பகைவரை தீயோரை அழித்து நன்மை செய்வது ஒருமுகம்,

    6.வள்ளிக்கு மகிழ்வை தருவது ஒருமுகம்.

    12 கைகள்:

    1,2 கைகள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. 3- வது கை அங்குசம் செலுத்துகிறது. 4- வது கை தொடையில் அமர்த்தி உள்ளது. 5,6-வது கைகள் வேலை சுழற்றுகின்றன.7-வது கை முனிவர்களுக்கு பொருளை விளக்குகிறது.

    8- வது கை மார்பில் உள்ள மலையோடு சேர்ந்துள்ளது. 9- வது கை வேள்வி ஏற்கிறது.10- வது கை மணியை ஒலிக்கின்றன. 11- வது கை மழையை அளிக்கின்றன. 12- வது கை மணமாலை சூட்டுகிறது.

    முருகப்பெருமானின் கிரீடத்தில் உள்ள உறுப்புக்கள்:

    கிம்புரி, கோடகம், பதுமம், மகுடம், தாமம்.

    ஆறுபடை வீடுகள்:

    1.திருப்பரங்குன்றம் (மதுரைக்குஅருகில்), 2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), 3. திருவாவினன்குடி (பழனி), 4. திருஏரகம் (சுவாமிமலை), 5. குன்றுதோறாடல் (திருத்தணிகை), 6. பழமுதிர்ச்சோலை (மதுரைக்கு அருகில்).

    வல்லவரான இறைவன் உயிர்களின் மீது கொண்ட கருணை யினால் உயிர்களின் ஆணவமாகிய சூரனின் ஸ்தூல உடம்பை போக்கி (ஆணவ மலம் நீங்கின அச்சூரனின்) ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் என்பது சூரசம்காரத்தின் உட்கருத்தாகும்.

    வழிபடும் முக்கிய நாட்கள்:

    சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பாக உரியது. இவ்விரதத்தால் நினைத்த பயன் கைகூடும்.

    கிருத்திகை விரதம்:

    ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செல்வ முத்துக்குமரனுக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    • பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.
    • இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது.

    ஆனி மாதத்தில் ஸ்கந்த பஞ்சமி, ஆடியில் நாக பஞ்சமி, ஆவணியில் ரிஷி பஞ்சமி, கார்த்திகையில் நாக பஞ்சமி, தை மாதத்தில் வசந்த பஞ்சமி, மாசியில் ரங்க பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீபஞ்சமி என்று ஏழு பஞ்சமி விரதங்களை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது தமிழகத்தின் மரபாகும்.

    பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை நாகராசாவாகும். நாகதோஷ நாக சாப பரிகார பூஜைகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமும், நாகங்களின் அனுக்கிரகம், அருள் நலம் வேண்டி பூஜித்திட பஞ்சமி திதியும் உத்தமமாகும்.


    உரகம், ர, அ, பணா, கவ்வை, அரவு, நாகம், பாம்பு, சர்ப, ஆஷ்லேஷா, கட்செவி, போகி, சுகி, அரி, வியாளம், பன்னகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம் எனும் 21 பெயர்களால் அழைக்கப்படுவது ஆயில்யம் நட்சத்திரம்.

    பஞ்ச பிரம்மாக்களில் ஒருவரான கசியபமுனிவர் முதலில் கத்துரு முனி பத்னி மூலம் ஆயிரம் சர்ப்பங்களையும், இரண்டவதாக சுவரசை முனி பத்னி மூலம் ஆயிரம் பாம்புகளையும் தோற்றுவித்தார்.

    முதன் முதலில் பிறந்தவர் சேஷன் அதனால் ஆதிசேஷன் என்ற பெயருடன் நாகராசாவாக முடி சூட்டப்பட்டார். சாத்வீக குணமும், பொறுமையும், நல்ல சிந்தனையும், கொண்ட ஆதிசேஷனுக்கு சர்ப்பங்களின் பழிவாங்கும் குணமும், கோபமும், முரட்டு சுபாவமும் பிடிக்காமல் அரச பதவியில் இருந்து விலகி தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக இறைவனிடம் வேண்டிய வரத்தின் மூலம் ஆயிரம் தலைகளுடன் பூமியைத் தாங்கும் வர பலத்தை பெற்று வணங்கத்தக்கவரானார்.

    பின்னர் சர்பங்களுக்கு அரசனாக அனந்தனும் பாம்புகளுக்கு அரசனாக வாசுகியும் ஆனார்கள், ஆதிசேஷனின் தம்பியர்களான அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், சங்கபாலன், குளிகன், மகாபத்மன் எண்மரும் அண்ணனைப்போல தவமிருந்து அண்ணனுக்கு துணையாக இந்த பூமியை 8 திக்கில் இருந்தும் காக்கும் வரத்தைப் பெற்று அஷ்டதிக் நாகர்கள் ஆனார்கள்.


    இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது. நாகர்கோவில், அனந்தமங்கலம். கார்கோடகநல்லூர், வாசுதேவநல்லூர், தச்சநல்லூர், பத்மநேரி, சங்க பாலபுரம் என்று பலவுள்ளன. நாகராசாவான அனந்தின் பெயரால் அனந்த விரதம் திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன், நாகநாதர், நாகேஸ்வரர்,நாகவல்லி, நாகம்மன், சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர் என்ற திருப்பெயர்களும், தெய்வங்களுக்கு குடையாக படுக்கையாக, அணிகலன்கலாக, கச்சைகளாகவும் நாகங்கள் தனி இடத்தைப் பெற்றுள்ளன. புன்னாக மரம் என்ற புன்னை மரமும், புன்னாகவராளி என்ற ராகமும் விசேஷமாக உள்ளது.

    • அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள்.
    • அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மனுக்கு சுமார் 200 ஆண்டு கால வரலாற்று பெருமை உள்ளது. உடுமலை நகரில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூல விக்ரகத்தின் முன் சுயம்புவாக எழுந்து அம்மன் அருள் பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்து காக்கும் தெய்வமாகவும் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.


    கண் புரை, அம்மை நோய், ஜூரம், வெயில் கொப்புளங்கள் ஆகியவையோடு வெப்பத்தால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள் என்ற பெருமையும் கொண்டவள் உடுமலை மாரியம்மன்.

    அம்மை வார்க்கும்போது அம்மனை வழிபட்டு நோய் குணமாக பூச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அடி அளந்து கொடுத்தல், தீர்த்தம் கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை மக்கள் அம்மனுக்கு காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். சாதி பேதமின்றி அனைத்து சமயத்தினரும் உடுமலை மாரியம்மனை வணங்கி வழிபடுவது பெரிய சிறப்பாகும்.

    மணமாகாத கன்னிப்பெண்கள் அம்மன் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்தால் நல்ல வாழ்க்கை துணை கொடுப்பாள் இந்த அன்னை என்பது மக்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.


    8-வது நாள் திருக்கம்பம் நடுதலும், மறுநாள் கொடியேற்று விழாவும் நடைபெறும். கொடி மர பூஜை, கொடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை ஆகியவைகள் செய்து கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    ஆத்மாவையும், தர்மத்தையும் கீழ் நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல அன்னை கருணை இதயத்தோடு அருள்புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதையே கொடியேற்றுதல் நிகழ்ச்சி உலகிற்கு உணர்த்துகிறது.

    திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் எழுந்தருளும் அம்மன் சமம், விசாரம், சந்தோஷம், சாது, சங்கமம் என்ற நான்கு கால்களாக கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

    எண்ணிய எண்ணம் முடித்தல் வேண்டி அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். வாழ்வில் விளக்கேற்றிடும் அன்னைக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபடுகின்றனர். திருவிழாவின்போது 15ம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இந்த விழாக்களில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பிரம்மிக்க வைக்கும் வகையில் திருத்தேரோட்டம் நடைபெறும்.

    இந்த ஆண்டு இன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கூடியுள்ளனர் என்பது சிறப்பான ஒன்றாகும்.

    • இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
    • கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.

    அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார்.

    இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

    அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    • நாளை காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம்.
    • வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2-ந்தேதி) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற ஆராட்டு திருவிழா முடிவடைந்த நிலையில் சித்திரை விசுக்கனி தரிசனம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    நாளை காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கை நீட்டமாக நாணயங்களை வழங்குகின்றனர். காலை 7 மணி வரை பக்தர்கள் விசுக்கனி தரிசனம் செய்யலாம். இதற்காக பக்தர்கள் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    வருகிற 18-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

    • சூரியனார் கோவிலில் சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-30 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: பிரதமை முழுவதும்.

    நட்சத்திரம்: சித்திரை இரவு 9.01 மணி வரை. பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவிலில் சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கல்லங்குறிச்சி ஸ்ரீகலியுக வரதராஜப் பெருமாள் என்கிற கலியபெருமாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. கரிவலம் வந்த நல்லூர், பாபநாசம். கோவில்பட்டி ஒழுகைமங்கலம் கோவில்களில் தேரோட்டம். சென்னை ஸ்ரீசென்ன கேசவ பெருமாள் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் ெபருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-நலம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-நட்பு

    துலாம்-அமைதி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    • இன்று பவுர்ணமி.
    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: பவுர்ணமி மறுநாள் காலை 6.03 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.31 மணி வரை. பிறகு சித்திரை.

    யோகம்: மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பவுர்ணமி. குச்சனூர் ஸ்ரீசனிபகவான் அலங்காரம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தங்க பல்லக்கு, இரவு தங்க குதிரை வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் தெப்போற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடல் கழர், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை, உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெரு மாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிறப்பு

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-விவேகம்

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-இன்பம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- மகிழ்ச்சி

    மகரம்-உறுதி

    கும்பம்-சுபம்

    மீனம்-பக்தி

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
    • அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பதுடன், திருமண தடைகள் அகலும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி உள்ளிட்ட இடங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    எனவே மூலஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் அதற்கு பதிலாக சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சன்ன தியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வேண்டுதலுக்காவும், வேண்டுதல்கள் நிறை வேறியமைக்காகவும் காவடி சுமந்தும், பால்குடம் ஏந்தியும் அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.


    சுவாமிமலை

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.

    முன்னதாக அதிகாலை மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

    மேலும், பங்குனி உத்திரத்தன்று முருகனை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றியும், அர்ச்சனை செய்தும் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.


    வயலூர் முருகன்

    குமார வயலூர் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு குத்தி வந்தூம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் முருகப்பெ ருமா ன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா நடைபெறுகிறது.

    நாளை (சனிக்கிழமை) உபய அபிஷேகங்களும், 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி வேலன் வேடனாக விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்ட நிகழ்ச்சி பின் முருகப்பெருமானாக காட்சியளித்தலும் நடைபெறுகிறது.


    15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக பாலாயம் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறாதால். இந்த பங்குனி உத்திரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    • ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள்.
    • ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி நம்பெருமாள் தங்க கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்கில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 7-ம்நாள் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று நம்பெருமாள் குதிரை வாகனத்தில் கோரதம் அருகே வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடை பெற்றது. இதை யொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார்.

    அங்கு ஏற்கனவே நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாரை சென்று சந்தித்தால் ரெங்க நாச்சியார் கோபம் அடைந்து கதவை சாத்திக்கொள்ளலும், பின்னர் மட்டையடி உற்சவமும் நடைபெற்றது.

    பின்னர் இந்த ஊடலை நம்மாழ்வார் சமரசம் செய்ய நம்பெருமாள் சமாதானம் கண்டருளி முன்மண்டபம் வந்து சேந்தார். பின்பு ஏகாந்தம் நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இந்த வேளையில் மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார்.

    பின்னர் பெருமாளும், தாயாரும் சேர்த்தி சேவை அருளினர். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர்.

    தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முதியவர்கள், குழந்தைகள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சேர்த்தி சேவைக்கு பக்தர்கள் செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதியையும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேர்த்தி மண்டபம் வரை குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப்பெரிய ஏர் கூலரும், தாயார் சன்னதி முன் மண்டபத்தில் மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருந்தது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில் களும், நீர்மோர் மற்றும் பிரசாதம் வழங்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் நம்பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவையொட்டி இன்று இரவு 10.30 மணி வரை பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப் பாளர் வேல்முருகன் மற்றும் கோவில் அதிகாரி கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×