என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.
    • இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    எமனை எதிர்க்கும் விநாயகர், திருப்பைஞ்லி

    திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் திருப்பைஞ்ஞீலியில் உள்ள எமன் கோவிலின் நுழைவாசலுக்கு முன்பாக உள்ள விநாயகர் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

    இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி உதைக்கும் நிலையில் காணப்படுகிறார்.

    அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க உதைக்கும் நிலையில் இந்த தோற்றம் என்கிறார்கள்.

    நோய் நொடியின்றி வாழ இவர் அருள்பாலிக்கிறார்.

    ராஜகணபதி, சேலம்

    அவ்வையார், பூத உடலோடு திருக்கைலாயத்துக்குச் செல்லும் போது இத்தலத்து ராஜ கணபதியைத்தான் வணங்கிச் சென்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

    இத்திருக்கோவில் சேலம் அருள்மிகு சொர்ணாம்பிகா சமேத சுகவனேசுவரர் கோவிலின் இணைக் கோயிலாக உள்ளது.

    இவரை வழிபட முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.
    • அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.

    சென்னைக்கு அருகில் உள்ள ஓரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது.

    கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது.

    அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை.

    எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூட்டி வழிபடலாம்.

    அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.

    வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும்.

    மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.

    • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.
    • பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

    பட்டத்து பிள்ளையார்

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டய புரத்தில் உள்ள விநாயகர் பட்டத்துப்பிள்ளை என்றழைக்கப்படுகிறார்.

    அந்தக்காலத்தில் எட்டயபுரத்து குறுநில மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும்போது இந்தப் பிள்ளையாரை வணங்கிய பிறகுதான் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

    பதவி சம்பந்தமாக எந்தவிதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை இந்தப் பிள்ளையார் தீர்த்துவைப்பார் என்று ஐதீகம்.

    கும்பகர்ணப் பிள்ளையார்

    கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பாதையில் திருக்கடுவாய்க் கரைப்புத்தூர் என்ற தலத்தில் கும்பகர்ண பிள்ளையார் இருக்கிறார்.

    ஒரு முறை கும்பகர்ணனால் பாதிக்கப்பட்ட முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மகன் விநாயகரை பார்த்து கும்பகர்ணனை இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூக்கி வீசு என்று கூற, விநாயகரும் தன் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் தூக்கி எறிந்தார்.

    விநாயகரால் கும்பகர்ணனின் தொல்லைகள் முனிவர்களுக்கு நீங்கியது. அன்று முதல் இந்த விநாயகருக்கு கும்பகர்ண பிள்ளையார் என்ற பெயர் வழங்கலாயிற்று.

    • சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.
    • ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின. அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது. நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான்.
    • சிவபெருமான் ஜூரஹரமூர்த்தி அவதாரம் ஆகும்.

    அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான். லிங்க வடிவிலே சிவபெருமான் பல ஆலயங்களில் காட்சி தருகிறார். சில கோயில்களில் நடராஜ ரூபத்தில் காட்சி தருகிறார். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவ பெருமான் காட்சி தரும் அரிதான கோயில் ஆந்திராவில் உள்ளது.

    சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்:

    ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது சித்தூர். சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள கிராமம் சுருட்டப்பள்ளி. இந்த கிராமத்தில்தான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார். எங்குமே இல்லாத வகையில் இங்கு மட்டும் சிவ பெருமான் சயன கோலத்தில் காட்சி தருவது ஏன்? என்று கோயில் புராணம் சொல்கிறது.

    புராணத்தின்படி, வாசுகி பாம்பை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக மாற்றி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அப்போது, வலி தாங்காத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. இதனால், ஆலகால விஷத்தில் இருந்து தங்களை காக்க வேண்டி தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர்.

    தல வரலாறு:

    மற்ற உயிர்களை காப்பதற்காக அந்த ஆலகால விஷத்தை சிவ பெருமானே விழுங்கினார். மிகக்கொடிய அந்த விஷம் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை (கழுத்தை புராணங்களில் கண்டம் என்றும் குறிப்பிடுவார்கள்) பிடிப்பார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்றுவிடும். இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டானது.

    இந்த நிகழ்வுக்கு பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்திற்கு சென்றனர். அப்போது, சிவ பெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவி மடியில் தலை வைத்து படுத்து ( சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளியான இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவ பெருமான் இந்த கோயிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    பிரதோஷ வழிபாடு:

    இந்த கோயிலில் பார்வதி தேவியை சர்வமங்களா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சயன கோலத்தில் காட்சி தரும் பள்ளிகொண்டீஸ்வரராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோயிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். இங்கு வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சிவபெருமான் ஜூரஹரமூர்த்தி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை ஒரே கல்லில் செதுக்கியிருப்பார்கள். இந்த கோயிலில் பிரதோஷ வழிலாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இங்கு நடை திறந்திருக்கும். சென்னையில் இருந்து சித்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். கோயிலின் வாசல்தான் பேருந்து நிறுத்தமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    "இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

    இன்பன், நற்புவி தனக்கு இறைவன்

    தன்துணை ஆயர் பாவை நப்பின்னை

    தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்

    வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி

    வாயுரை தூது சென்று இயங்கும்

    என்துணை எந்தை தந்தை தம்மானை''

    திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம்.

    என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

    ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

    அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-13 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி இரவு 8.50 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: சதயம் நண்பகல் 2 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குரு வார திருஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தன்னம்பிக்கை

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-மேன்மை

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-உறுதி

    கன்னி-பயணம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-நேர்மை

    தனுசு- பரிவு

    மகரம்-பாசம்

    கும்பம்-ஊக்கம்

    மீனம்-பரிசு

    • துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு “சந்தோஷி” என்று பெயரிட்டனர்.
    • சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    கயிலாயத்தில் ஒருநாள் நாரதர் தன் இரண்டு மகன்களை விநாயகரிடம் அழைத்து வந்து "இவர்கள் இருவரும் விரதம் அனுஷ்டிக்க ஆசைப்படுகிறார்கள்.

    நீங்கள் தான் இவர்களுக்கு விரதம் அனுஷ்டிப்பதற்காக காப்புக் கட்டுதல்)செய்து வைக்க வேண்டும்" என்று கூறினார்.

    அதற்கு விநாயகர் "நானும், நீயும் எப்படி காப்பு கட்டி விட முடியும்? ஒரு சகோதரி தான் கட்டிவிட வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்ட நாரதர் "நீங்கள் தான் சகோதரியை அவதாரம் செய்வித்தல் வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.

    அந்த வற்புறுத்தலின் காரணமாக விநாயகப் பெருமான் சித்தி, புத்தியைத் துணைகொண்டு ஒரு சகோதரியைத் தோற்றுவித்தார்.

    துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமான அக்குழந்தைக்கு "சந்தோஷி" என்று பெயரிட்டனர்.

    சந்தோஷி என்றால் எப்போதும் ஆனந்தத்தைத் தருபவள் என்பது பொருள்.

    மேலும் பெண் என்பதால் பெயரின் கடைசியில் மாதா என்று சேர்த்து "சந்ஷோமாதா" என அனைவராலும் போற்றப்பட்டார்.

    • அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது மாம்பழ விநாயகரைத் தான்.
    • கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார்.

    கிழக்கு கோபுரம் வழியாக நடராஜர் ஆலயத்திற்கு செல்லும் பாதையான 21 படிகள் என்னும் வாயிலைக் கடந்தால்,

    முதலில் வருவது, தண்டாயுதபாணி சன்னிதி அமைந்த குலோத்துங்க சோழன் திருமாளிகை பிரகாரம் வரும்.

    அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது மாம்பழ விநாயகரைத் தான்.

    கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார்.

    அவரை தரிசித்து, பிரகாரம் வலம் வந்தால் கொடி மரம்

    அதன் அருகே பால தண்டாயுதபாணி சன்னிதி

    பிறகு பிரகார வலம் முடித்து, நடராஜரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.

    • நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது.
    • ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

    நடராஜர் கோவிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு காட்சியளிக்கிறது.

    ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது.

    இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

    கோவிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது.

    கோவிலின் வடக்கு கோபுர வாயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவகாம சுந்தரி அம்மன் கோவில் ஒரு தனியான கோவில் வளாகமாக கலைநயம் மிக்க கற்சிற்ப அலங்கார நுணுக்கங்களோடு அமைந்துள்ளது.

    சிவராத்திரியின்போது நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

    இது தவிர மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் போன்ற விழாக்காலங்களில் தேர்த்திருவிழா மற்றும் தரிசனம் போன்ற விமரிசையான சடங்குகள் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன.

    • கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது.
    • இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

    கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி வலப்புறத்தில் மற்றொரு வாசல் அமைப்பும் உள்ளது.

    இது திருவிழா ஊர்வலங்களின்போது உற்சவ மூர்த்திகள் வெளிவர பயன்படுத்தப்படுகிறது.

    நான்காவது பிரகாரத்தை அடுத்து கோவிலின் நடுநாயகமாக வீற்றிருக்கும் மூன்றாவது பிரகாரத்திற்குள் இறங்குவதற்கு கிழக்கும் மேற்கும் வாசல்கள் உள்ளன.

    இந்தப்படிகளின்வழி இறங்கி மூன்றாவது பிரகாரத்தில் நாம் நுழையும்போதே கருங்கல் அமைப்புகளின் பிரம்மாண்டம் மற்றும் இருள் கவிந்த பாதாளத்தின் குளிர்ச்சியோடு கோவில் நம்மை உள்வாங்கி கொள்கிறது.

    உயரமான தூண்கள் மற்றும் கருங்கல் சிற்ப அமைப்புகளோடு காட்சியளிக்கும் மூன்றாவது பிரகாரத்திலிருந்து அடுத்த இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைய கிழக்குத்திசையில் ஒரு வாசல் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது பிரகாரத்தில் தேர்போன்ற சன்னதி, தங்கவிமானம் மற்றும் திறந்தவெளி சுற்றுப்பிரகாரம் போன்றவற்றை காணலாம். மேலும் முதல் பிரகாரமான கருவறை இங்குதான் வீற்றிருக்கிறது.

    இதுவே சித்சபை என்றழைக்கப்படுகிறது. இதற்கு எதிரே கனகசபை மற்றும் நிருத்யசபை ஆகியவை அமைந்துள்ளன.

    இது தவிர மூன்றாவது பிரகாரத்தில்தேவ சபையும், நான்காவது பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜ சபையும் ஆக ஐந்து சபைகள் நடராஜர் கோவிலின் முக்கிய அங்கங்களாக விளங்குகின்றன.

    • அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.
    • நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    நடராஜர் என்று கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர் கோவில்.

    இது சோழ வம்சத்தின் அடையாளச்சின்னம். அறத்துக்கும் ஆன்மீகத்துக்கும் நம் முன்னோர்கள் அளித்துச்சென்ற அங்கீகாரம்.

    இது கோவில் மட்டுமல்ல, காலப்பெட்டகமும்கூட!. வெவ்வேறு காலகட்டத்தில் பல ராஜ வம்சங்களால் இந்த கோவிலில் புதுப்பிப்பு செய்யப்பட்டும், புதிய கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டும் இருக்கிறது.

    கோவில் வளாகம் பல்வேறு அடுக்கடுக்கான தொகுதிகளை கொண்டு அமைந்திருப்பது அற்புதமான கட்டிடக்கலை அம்சமாக கருதப்படுகிறது.

    ராஜகோபுர வாயிலை தாண்டி கோவில் வளாகத்தில் நாம் கால் பதித்த உடனேயே பிரமிப்பு புராதன திராவிடக் கட்டிடக்கலையின் நகரின் மையப்பகுதியில் ஒரு பிரமாண்ட நீள்சதுர அமைப்பில் வீற்றிருக்கும் இந்த கோவிலின் ஒட்டுமொத்த வளாகமும் கோட்டைச்சுவர்கள் போன்று 10 மீ உயரம் கொண்ட கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.

    அது அழகாக பிரிக்கப்பட்டு அடுத்தடுத்த பிரகாரங்களாக கீழிறங்கி கொண்டே செல்கிறது.

    நான்காவது வெளிபிரகாரத்தில் விரிவான நந்தவனப்பகுதி உள்ளது.

    இந்த பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தம் எனும் புண்ணியதீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், விநாயகர் கோவில், சிவகாம சுந்தரியம்மன் ஆலயம், நந்தி சிலை, நவக்கிரக சன்னதிகள், நடன சபை மற்றும் பல சிறு சன்னதிகள் அமைந்துள்ளன.

    மேலும் தூண்களோடு காணப்படும் ஒரு நடைக்கூட அமைப்பும் கோபுரத்தோடு இணைந்த மதில் சுவரையட்டியே காணப்படுகிறது.

    ×