என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு.

    சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது.

    ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது.

    இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.

    • ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள்.
    • வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள். தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.

    இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

    அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

    இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது. இந்த சிறப்பான தினம் வருகிற சனிக்கிழமை (3-ந்தேதி) வருகிறது. மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டுகளிப்பர். கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர்.

    ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.

    அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

    ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.

     நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-15 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.01 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பொறுமை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-போட்டி

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பண்பு

    • பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி
    • திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

    திருவார் மறையின் செம்பொருள்போற்றி

    ஆறுமுகத்தெம் அரசேபோற்றி

    மாறுகொள் சூரரை வதைத்தாய்போற்றி

    இருள்கெடுத்திருன்பருள் எந்தாய்போற்றி

    உருள்பூங்கடம்பணி உறவோய்போற்றி

    ஈசற்கு இனிய சேயேபோற்றி

    மாசறு திருவடி மலரோய்போற்றி

    உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

    செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

    ஊனில் ஆவியார் உயிர்போய்போற்றி

    கானில் வள்ளியின் கணவபோற்றி

    எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

    அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

    ஏறுமயிலூர்ந்த தேகுவாய்போற்றி

    கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

    ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

    செய்ய மேனியனே தேவேபோற்றி

    ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

    பருவம் முதிராப் பண்பேபோற்றி

    ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

    மாமுதல் தடிந்த மறவபோற்றி

    ஒளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

    தெய்வம் எல்லாந்தொழும் செய்யாபோற்றி

    எக்கும் வேலுடை இறைவாபோற்றி

    வெக்குதல் அற்றார் விளக்கேபோற்றி

    கந்தா மணமார் கடம்பாபோற்றி

    காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி

    மூப்பீறற்ற முதல்வாபோற்றி

    கிள்ளை மொழியுமை பிள்ளாய்போற்றி

    கள்ளப் புலனைக் களைவாய்போற்றி

    கீழறும் அடியர் கிழவோய்போற்றி

    குன்றும் குழைந்தோட் குமரபோற்றி

    என்றும் இளைய ஏறேபோற்றி

    கூம்புகைத் தேவர் கோவேபோற்றி

    பாம்பணி சிவனார் பாலகபோற்றி

    கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி

    அண்டினோர்க் கருளும் அங்கணபோற்றி

    கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

    வீடில் வீடருள் விமலபோற்றி

    கைவேல் கொண்ட காவல்போற்றி

    நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

    கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

    படைக்கடல் தலைவ பரனேபோற்றி

    கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

    போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

    சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

    நவ சரவணத்தில் நகர்ந்தாய்போற்றி

    அறுவுரு அமைந்தே ஆடினாய்போற்றி

    அறுமீன் பாலுண் அமரபோற்றி

    பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

    நான் முகமைச் சிறை நாட்டினாய்போற்றி

    மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி

    செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி

    அங்கண் குறிஞ்சிக்கு அரசேபோற்றி

    இறைவனுக்கரும்பொரள் இசைந்தாய்போற்றி

    மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி

    பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி

    திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

    ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி

    மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி

    குன்று தோறாடும் குழந்தாய்போற்றி

    துன்று பழமுதிர் சோலையாய்போற்றி

    திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி

    இசைபெரு வேள்வி அன்முகபோற்றி

    செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

    மங்கல மான வானவபோற்றி

    வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

    திங்களின் ஒளிரும் சீர்முகபோற்றி

    ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

    சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

    மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

    துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

    செவியீராறுடைச் செம்மால்போற்றி

    கவித்தொடை புனைந்தோட் கந்தாபோற்றி

    பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

    என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

    பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

    அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

    நக்கீரற் கருள் நாதாபோற்றி

    தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

    குமர குருபரற் கருளினைபோற்றி

    பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

    கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

    தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

    பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

    கோழி வெல்கோடிக்கோவேபோற்றி

    ஊழி தோறூழி உள்ளாய்போற்றி

    செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

    மெய்யெல்லாம் வெண்ணீறணிவோய்போற்றி

    மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

    வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

    சேவலும்மயிலும ¢சேர்த்தோய்போற்றி

    போர்மிகு பொருந புரநல போற்றி

    ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

    பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

    தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

    அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

    கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

    இன்பார் இளைய ஏந்தால்போற்றி

    என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

    • ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.
    • எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவர் நவராத்திரி எட்டாவது தினமான அஷ்டமி தினம் அவசியம் பூஜிக்க வேண்டும்.

    ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார்.

    எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும்.

    அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபாலன் இல்லத்தில் அவதரித்தாள்.

    ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.

    சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும்.

    இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

    • தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.
    • தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

    தெட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம்.

    இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.

    மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.

    ஒருவரது ஜாதகத் தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குருபார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

    மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி.

    அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்ய வேண்டும்.

    • எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்
    • எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    1. தன லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    2. வித்யா லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    3. தான்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    4. வீர லட்சுமி

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    5. சௌபாக்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    6. சந்தான லட்சுமி

    எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    7. காருண்ய லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    8. ஆதி லட்சுமி

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்.

    இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

    • செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.
    • செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    வாழ்க்கையில் நன்கு வசதியோடு வாழ வேண்டுமென்றால் விஜயலட்சுமியை வழிபட வேண்டும்.

    விஜயலட்சுமியை முறைப்படி வணங்கினால் வெற்றி கிட்டும்.

    முதல் நாள் பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கவேண்டும். ஆனால் அன்று தேய்பிறையாகவோ அஷ்டமி நவமியாகவோ. கரிநாளாகவோ இருக்கக்கூடாது. அவ்வீட்டில் இறந்தவர் எவருக்கேனும் திதி நாளாயும் இருக்கக்கூடாது.

    மலர்களுள் செந்தாமரை, வன்னி,ரோஜா, மல்லிகை, முல்லை, சந்தன முல்லை, சம்பங்கி, மனோரஞ்சிதம் ஆகிய மலர் இனங்களைப் பயன்படுத்தலாம்.

    வீட்டிலுள்ள தூய்மையான அறையில், நடுப்பகுதியில் கிழக்கு முகமாகப் பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லைப்பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு பித்தளைத்தட்டில் பச்ச அரிசியைப் பரப்ப வேண்டும்.

    அதன் மீது மலர்கள் சுற்றப்பட்ட நீர் நிறைந்த செம்பை வைக்க வேண்டும். மாவிலைகளைக் செம்பின் உள் பக்கம் ஒரத்தில் வைக்க வேண்டும்.

    செம்பின் மீது தூய்மையாகக் கழுவப்பட்ட தேங்காய் ஒன்றை வைக்க வேண்டும்.

    செம்பிற்கும் தேங்காய்க்கும் சந்தனம்,குங்குமம்,திலகம் ஆகியன இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    வாயிலில் மாக்கோலம் இட வேண்டும். பூஜை தொடங்கும் போது வாசலில் அகல் விளக்கேற்ற வேண்டும்.

    பிரசாதமாகத் தயாரித்த போருள்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பூஜையை ஆரம்பிக்கலாம்.

    இந்தப் பூஜையைத் தனியாகவோ பலர் கூட்டாகவோ செய்யலாம்.

    முதலில் விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு, அருகம் புல்லால் அர்ச்சனை செய்து,கற்பூர தூப தீபம் காட்ட வேண்டும்.

    விஜயலட்சுமி பூஜையைத் தொடங்கவேண்டும். நூற்றெட்டு நாமாவளிகளைக் கூறி, மலர் அர்ச்சனை முடிந்து தூப தீபம் காட்டி, வணங்க வேண்டும்.

    பூஜை முடிந்ததும் மூன்று சிறுமிகளுக்கு துணி தானம் என்னும் பட்டுத்துணி, தாம்பூலம், கல்கண்டு, கனி ஆகிய வற்றைத் தர வேண்டும்.

    இயன்ற அளவு பணமும் தானமாகக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு மற்றவர்க்குப் பிரசாதங்களைக் கொடுத்து விட்டுத்தாங்கள் பயன்படுத்தலாம்.

    இந்தப்பூஜையை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்று, தொடர்ந்து இருபத்தொரு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.

    இவ்வாறு இருபத்தொரு நாளும் முடித்த பிறகு, எவ்வளவு இயலுமோ அந்த அளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    வழிபடுவதற்கான குறிப்புகள்

    வடிவம் :- நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

    பூஜை :- 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

    திதி :- அஷ்டமி

    கோலம் :- பத்ம கோலம்

    பூக்கள் :- மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

    நைவேத்தியம் :- பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

    ராகம் :- புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

    பலன் :- நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

    • இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபடவேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்தக்கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளைபேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள்&துர்க்கை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும். குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். ஆண்கள்&துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும். செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். இளம் பெண்கள்&துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான். வாலிபர்கள் துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும் அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும். பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    • தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.
    • அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.

    ராஜ ராஜேஸ்வரியை - தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

    1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

    2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமைப் படுத்த முடியாது.

    3. ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

    4. விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

    5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

    6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

    7. சித்து வேலைகள் கை கூடும்.

    8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.

    9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

    10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.

    • பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.
    • அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.

    அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.

    வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறுபிழிந்து விட்டு& பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கின்னம் போல் செய்து கொள்ள வேண்டும்.

    அந்த எலுமிச்சம் பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    துர்க்காதேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் ஆகியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    இரண்டு துண்டாக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாற்றைப் பிழிந்து அதில் வெல்ல சர்க்கரை கலந்து பானமாக்கி நிவேதனம் செய்ய வேண்டும்.

    பின்னர் துர்க்கா தேவியின் பாமாலைகள், துதிப்பாடல்கள், ராகு காலத்தில் பாடவேண்டிய பாடல்கள் ஆகியவற்றைப் மனம் உருகிப்பாட வேண்டும்.

    பூஜையின் முடிவில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பானகத்தைக் கொடுத்து தாங்களும் பருகலாம்.

    துர்க்கா தேவி பூஜையை வீட்டிலேயே செய்வதால் குடும்பம் என்றென்றும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.
    • பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும்.

    குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.

    எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.

    இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும்.

    அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும்.

    துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும். அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம்.

    நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம் பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்துச்சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.

    அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம் பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார்.

    அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.

    ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.

    பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.

    எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.

    தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.

    மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.

    அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள்.

    அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள்.

    பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.

    தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.

    அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும்.

    பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.

    ×