என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.
    • மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

    பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி தேட அழல் மலையாய் நின்ற பெருமான் உலகம் உய்யும் பொருட்டு கல் மலையாகக் காட்சிக்கொடுத்த இடமே திருவண்ணாமலை.

    அவரே அண்ணாமலையார்.

    ஆதி ஜோதி வடிவில் காட்சி கொடுத்ததைத்தான் கார்த்திகை தீபம் என்ற குறியீட்டால் விளக்குகிறார்.

    மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

    இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரி நாளில் லிங்கோத் பவ காலம் என்று சொல்லப்படும் காலத்தில் சிவன் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார் என்பார்.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
    • சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.

    சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.

    அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

    சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.

    அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.

    உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும் சகல நன்மைகளும் உண்டாகும்.

    சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

    சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும்.

    அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

    மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

    • கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
    • பாசுபத விரதம்-தைப்பூசம்,

    சோமாவார விரதம்-திங்கள்,

    உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி,

    திருவாதிரை விரதம்-மார்கழி,

    சிவராத்திரி விரதம்- மாசி,

    கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,

    பாசுபத விரதம்-தைப்பூசம்,

    அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

    கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.

    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
    • மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம் எய்தும் புகலூரே.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

    செப்பில்பொருள் அல்லாக்

    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

    கடவுள்ளிடம் போலும்

    கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு

    தூவித்துதி செய்து

    மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்

    எய்தும் புகலூரே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சாக்கியர், சமணர் ஆகியோர்களின் உண்மையில்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளை கேளாதவராய், மிகுதியான தவத்தை செய்யும் அடியார்களின் தலைவராகிய சிவபெருமானுக்கு உகந்த இடமானது, அடியார்கள் மலர் கொய்து வந்து துதிப்பாடி, தவநெறியில் முயன்று உயர் வானகத்தை அடைவதற்குரிய வழிபாடுகளை செய்யும் புகலூர் ஆகும்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    10-ந்தேதி (செவ்வாய்)

    • விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    • சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    • சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்)

    • மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

    • அகோபிலமடம் திருமத் 2-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சனம்.

    • சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்)

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல தீர்த்தம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    • திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    • கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி)

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

    • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    • கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி)

    • சர்வ ஏகாதசி.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு.

    • மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு)

    • முகூர்த்த நாள்.

    • ஓணம் பண்டிகை.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்ட தேரில் பவனி, இரவு சப்தாவர்ணம்.

    • சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    • மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்)

    • முகூர்த்த நாள்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    • திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

    • மேல்நோக்கு நாள்.

    • விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - செலவு

    கடகம் - உதவி

    சிம்மம் - வரவு

    கன்னி - இன்பம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - உற்சாகம்

    தனுசு - தனம்

    மகரம் - சிந்தனை

    கும்பம் - பாராட்டு

    மீனம் - நம்பிக்கை

    • இன்று சஷ்டி விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 24 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 6.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 3.49 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல் நந்தீஸ்வரர்யாளளி வாகனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உழைப்பு

    ரிஷபம் - மகிழ்ச்சி

    மிதுனம் - சாந்தம்

    கடகம் - சிந்தனை

    சிம்மம் - மேன்மை

    கன்னி - லாபம்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - பயிற்சி

    தனுசு - லாபம்

    மகரம் - உவகை

    கும்பம் - சிறப்பு

    மீனம் - ஓய்வு

    • திருவண்ணாமலை விநாயகரை வழிபட துன்பங்கள் தீரும்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    தம்பியாகிய முருகப் பெருமானுக்கு இருப்பதுபோல, அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.

    விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    முதல் படைவீடு-திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    இரண்டாம் படைவீடு-விருத்தாசலம்:

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    மூன்றாம் படைவீடு-திருக்கடவூர்:

    எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

    நான்காம் படைவீடு-மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

    ஐந்தாம் படைவீடு-பிள்ளையார்பட்டி:

    அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    ஆறாம் படைவீடு-திருநாரையூர்:

    திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

    • தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.
    • இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே.

    ஒருசமயம் விஷ்ணு அசந்து தூங்கிய போது அவரை எழுப்பி விட சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.

    மருமகனான அவரிடம் சக்கரத்தை வாங்கிட அதட்டி, மிரட்டி கேட்க முடியாது.

    இதனால் அவரைச் சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்துவிடும் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதிய விஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.

    விநாயகர் சிரிக்க சக்கரம் கீழே விழுந்து விட்டது. விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.

    தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.

    இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    ஆணவமும் மாயையும் அகன்றிட அனைவரும் தோப்புக்கரணம் (தோர்பி கரணம்) போடலாம்.

    உண்ணி அப்பம் பிரசாதம்

    தமிழ்நாட்டில் மோதகமே விநாயகருக்கு முக்கிய பிரசாதம்.

    ஆனால் கேரளாவில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் சன்னதி முன்பாகவே உண்ணி அப்பம் தயார் செய்யப்பட்டு படைத்து வினியோகிக்கப்படுகிறது.

    ஈஸ்வர மங்கலம் விநாயகர் கோவிலும் உண்ணி அப்பமே முக்கிய நிவேதனப் பொருள்.

    • சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னையில் கோசை மாநகர் என்ற பெயரில் விளங்கிய கோயம்பேடும், அரும்பாக்கம் எனப்படும் நகருக்கும் நடுவில் ஒரு சுந்தர கணபதி கோவில் உள்ளது.

    சுற்றிலும் அருகம்புல்லால் சூழப்பட்ட காடாக ஒரு காலத்தில் இருந்ததால் அருகம்புல் பாக்கமாகி காலப்போக்கில் அரும்பாக்கமாக மருவியது.

    இத்தலம் சத்திய விரதச் சேத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு சத்யம்-அறம், பாக்கமாகி அரும்பாக்கமாக ஆகிவிட்டது எனவும் கூறுவர்.

    பெண்கள் பலர் கூடி இங்கே ஒரு கணபதி உருவத்தை வழிபட்டு, காலப்போக்கில் பக்தர்கள் கூடி 1969 முதல் மிகச் சிறப்பான சக்தி உடைய, அழகு பொருந்திய விநாயகர் சிலையை ஸ்தாபித்து எல்லாவித விசேஷங்களையும் செய்து வருகின்றனர்.

    சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    அருகால் வழிபட்டு வர ஆனந்தம் அருளும் இவரை வழிபட்டு வரலாம். தொடர்புக்கு:- 044-24756514.

    • வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.
    • தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    கண் திருஷ்டி விநாயகர் யந்திர வடிவம்

    திருஷ்டிகளை விரட்டுகிற இந்த யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

    மூல மந்திரம்:

    ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம க்ரஹ திருஷ்டி தோனம் நிவர்ஜய நிவர்தய :

    முள்ளங்கி விரும்பி

    வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.

    தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    எத்தனை அவதாரம் எடுத்தாய்

    வக்ர துண்ட விநாயகர் - உலகின் பிரளயம் தொடங்கி முடியும் போது இவர் தோன்றி அரி, ஹரன், அயன் இவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று

    • அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.
    • அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்” என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன்.

    சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

    திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார்.

    அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.

    அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்" என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    ×