என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.
    • தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    கண் திருஷ்டி விநாயகர் யந்திர வடிவம்

    திருஷ்டிகளை விரட்டுகிற இந்த யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

    மூல மந்திரம்:

    ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம க்ரஹ திருஷ்டி தோனம் நிவர்ஜய நிவர்தய :

    முள்ளங்கி விரும்பி

    வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.

    தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    எத்தனை அவதாரம் எடுத்தாய்

    வக்ர துண்ட விநாயகர் - உலகின் பிரளயம் தொடங்கி முடியும் போது இவர் தோன்றி அரி, ஹரன், அயன் இவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று

    • அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.
    • அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்” என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன்.

    சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

    திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார்.

    அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.

    அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்" என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    • கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
    • பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

    ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும்.

    இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.
    • தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

    ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.

    ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

    மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது.

    எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    பிள்ளையார் சுழி

    உலகத்தில் முதன் முதலாக எழுத்தைக் கண்டு பிடித்து எழுதத் தொடங்கியவர் விநாயகர் தான் என்பது புராணம் கூறுவது.

    மகாபாரதத்தை வியாசர் எடுத்துரைத்த போது அதை அழியாமல் காக்கும் பொருட்டு விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாக்கி எழுதினார்.

    எழுத்தைக் கண்டு பிடித்த கணபதிக்கு நம் நன்றியைச் சொல்லும் விதமாக எதை எழுதத் தொடங்கினாலும் (உ) பிள்ளையார் சுழியைப் போடுகிறோம்.

    அதன்படி இவர் முழு முதற்கடவுள் என்கிறோம். முதல் எழுத்தாளரும் விநாயகர் பெருமானே.

    • விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    வேலூர் அருகே உள்ள சேன்பாக்கம் என்ற ஊரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 11 சுயம்பு விநாயகர்கள் உள்ளனர்.

    இத்தனை சுயம்பு விநாயகரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

    விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    இந்த விழாவை 1895 ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.

    விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை.

    எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

    • சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.
    • அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோவில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார்.

    சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.
    • பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு அழகுப்படுத்த வேண்டும்.

    கோலம் போடும் போது புள்ளிக் கோலம், பின்னல் கோலம் இன்றி பூக்கோலம் போடுவது நல்லது.

    மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.

    பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    அருகில் 5 முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

    5 வகை பூக்கள், 5 வகை நறுமணப் பொருட்கள், 5 வகை பழங்கள் படைக்க வேண்டும்.

    அத்துடன் அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.

    இவ்வாறு வழிபட வரமும் கிடைக்கும். வளமும் பெருகும்.

    • விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.
    • முந்திய மயூரேச விநாயகர், பிந்திய மயூரேச விநாயகர்

    விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.

    அந்த அவதாரங்கள் இங்கே...

    1. வக்ரதுண்ட விநாயகர்

    2. சிந்தாமணி விநாயகர்

    3. கஜானனர்

    4. விக்நராஜர்

    5. முந்திய மயூரேச விநாயகர்

    6. பிந்திய மயூரேச விநாயகர்

    7. தூமகேது

    8. கணேசர்

    9. கணபதி

    10. மஹோத்கடர்

    11. டுண்டி விநாயகர்

    12. வல்லப விநாயகர்

    • வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும்.
    • பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள்

    முழு முதல் கடவுளாக கொண்டாடப்படக்கூடியவர் விநாயகப்பெருமான். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும், விரதமாக இருந்தாலும், யாகமாக இருந்தாலும், விநாயகரை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணு பகவானை வழிபடுவதை வைணவம்' என்றும், சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும் சொல்வது போல, விநாயகரை பிரதான தெய்வமாக வழிபாடு செய்வதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள். ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதியும் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்தனர். அப்போது அங்கு பிரணவ வடிவிலான ஒரு உருவத்தை பார்வதியும், பரமேஸ்வரனும் நோக்க, அதில் இருந்து தோன்றியவர் விநாயகர் என்று சொல்லப்படுகிறது.

    ஒரு முறை பார்வதி நீராடச் செல்லும் பொழுது, தன் உடலில் இருந்து பரிமளங்களை (வாசனை துகள்கள்) உருட்டி வைத்ததாகவும், அதில் இருந்து தோன்றியவரே விநாயகர் என்றும் சொல்கிறார்கள். அப்படி உருவான விநாயகரை பார்வதி தனக்கு காவலாக வைத்து விட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை, விநாயகர் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவனுக்கும் விநாயகருக்கும் சண்டை உருவானது. இதில் தன் சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார், சிவபெருமான். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி, நடந்ததை புரிந்து கொண்டு, விநாயகரைப் பற்றி சிவபெருமானிடம் கூறினாள். இதையடுத்து வடதிசையில் தலைவைத்து படுத்திருந்த வெள்ளை யானையின் தலையை எடுத்து வந்து விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு ஈசன் உயிர் கொடுத்தார் என்றும் கூறுவாார்கள்.

    விநாயகப் பெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, விநாயகர் சதுரவர்த்தி தர்ப்பணம், அஷ்ட திரவிய ஹோமம், வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் ஆகியவை. விநாயகர் விரதங்களில், சங்கடகர சதுர்த்தி பிரதானமாகத் திகழ்கிறது. அஷ்ட திரவியங்கள் என்பது கரும்பு, அவல், கொழுக்கட்டை, தேங்காய், எள், நெல்பொரி, சத்து மாவு, வாழைப்பழம் ஆகியவையாகும். அஷ்ட திரவிய ஹோமத்தில் கொழுக்கட்டையை முழுவதாகவும், அவல், பொரி, மாவு ஆகியவற்றை கைப்பிடி அளவிலும், கரும்பை கணு அளவிலும், தேங்காயை பிறை வடிவாகவும், எள்ளை உள்ளங்கை சுருங்கிய அளவும் எடுத்துக்கொண்டு, வாழைப்பழத்தை சிறியதாக இருந்தால் முழு அளவிலும், பெரியதாக இருந்தால் துண்டாக நறுக்கியும் சேர்க்கலாம். இந்த பொருட்களை எல்லாம் தேன், பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து, தனித்தனியாக ஹோமம் செய்வது விசேஷமானதாகும்.

    வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும். இந்த ஹோமமானது, நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாக கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவித்யா மந்திர உபதேசம், கணபதி மந்திர ஜப சித்தி இல்லாமல் செய்வது பிரயோஜனம் இல்லை. குரு முகமாக கட்டாயம் இந்த மந்திரங்களை உபதேசமாக பெற வேண்டும். புரட்டாசி, ஐப்பசி மாத சுக்லபட்ச நவமி அன்று, ஜபத் துடன் கூடிய ஹோமத்தை செய்வது மிக விசேஷமானதாகும். இதை பாராயணம் செய்வது லட்சுமி குபேர அருளைக் கொடுக்கும். ஐந்து முறை பாராய ணம் செய்தால் உலகம் வசமாகும். 10 முறை பாராயணம் செய்தால் சர்வலோக வசீகரம் உண்டாகும். ஆனால் மந்திர சித்தி என்பது இதில் முக்கியமானதாக கூறப்படுகிறது.

    பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள். அன்னத்தால் ஆகுதி கொடுக்க அன்ன விருத்தியும், தேனால் ஆகுதி கொடுக்க தங்கமும் சேரும். பசும்பாலால் ஆகுதி கொடுக்க பசுக்கள் விருத்தி அடையும். பசுந்தயிரால் ஆகுதி கொடுக்க எல்லா பாக்கியங்களும் தேடி வரும். எள் கலந்த அரிசியால் ஹோமம் செய்ய வறுமை நீங்கும், கடன் தொல்லை விலகும். தாமரை பூவும், பசு நெய்யும் கொண்டு ஹோமம் செய்ய அசையாச் சொத்துக்கள் தேடி வரும். அரசு சமித்து கொண்டு ஹோமம் செய்ய ஜன வசீகரம் உண்டாகும். நொச்சி சமித்தால் ஹோமம் செய்ய வறட்சி விலகும். அருகம்புல்லால் ஹோமம் செய்ய எல்லாவித வியாதிகளும் விலகிச் செல்லும். நாயுருவியால் ஹோமம் செய்ய நவக்கிரகங்களும் வசமாகும். வெல்லம், வாழைப்பழம் மற்றும் பாயசத்தால் ஹோமம் செய்ய நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய செல்வங்கள் தேடி வரும்.

    முக்கனியில் தேன் சேர்த்து ஹோமம் செய்ய சகலமும் வசீகரமாகும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் போல் மகா கணபதியின் சதுரவர்த்தி தர்ப்பணம் மிக விசேஷமானதாகும். கணபதி மூல மந்திரத்தை கொண்டும் விசேஷ மந்திரங்களாலும் 444 முறை நீர் விடுதல் விசேஷமானதாகும்.

    வாசனை கலந்த சுத்தமான தண்ணீரும், பஞ்சபாத்திரம் மற்றும் அரைத்த சந்தனம், நல்ல குங்குமம், ஒரு பித்தளை தாம்பாளம் போன்றவற்றை கொண்டு விநாயகப் பெருமானுக்கு இந்த தர்ப்பணத்தை செய்வார்கள். சிலர் கணபதி எந்திரத்தையும் சிலர், கணபதி விக்கிரகத்தையும் வைத்து செய்வதும் உண்டு. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சம் அன்று, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆரம்பிப்பார்கள்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவார்கள். இதில் ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கும் விநாயகர் விரதத்தால் (விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதால்), வருடம் முழுக்க விரதம் இருந்த பலனும், ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலனும் கிடைக்கும். அன்றைய தினம் காலை எழுந்து களிமண்ணால் செய்த விநாயகரை பெரும்பாலும் பூஜிப்பார்கள். ஆனால் களிமண்ணால் செய்த விநாயகரை பூஜித்த மறுநாள், புனர் பூஜை செய்து விட்டு நீரில் கரைக்க வேண்டும்.

    -'ஜோதிட சிம்மம்'

    சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)
    • ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    விநாயகர் சதுர்த்தி அன்று, 21 வகையான புஷ்பத்தினால் அல்லது அட்சதையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நன்மைகள் பலவாக நமக்கும் கிடைக்கப்பெறும்.

    * ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்ப யாமி (புன்னை மலர்)

    * ஓம் மஹாகணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை மலர்)

    * ஓம் தீரகணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளம் பூ)

    * ஓம் விஷ்வக் ஸேன கணபதயே நம: வகுளபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம் பூ)

    * ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாள புஷ் பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)

    * ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி பூ)

    * ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)

    * ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தம் பூ)

    * ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகப்பூ)

    * ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)

    * ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    * ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்ப யாமி (முல்லைப்பூ)

    * ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றைப்பூ)

    * ஓம் ஈச'கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கம் பூ)

    * ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப் பயாமி (செங்கழுநீர் பூ)

    * ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்திப்பூ)

    * ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)

    * ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளிப்பூ)

    * ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லைப்பூ)

    * ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லிப்பூ)

    * ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லிப்பூ)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
    • ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார்.

    வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

    விநாயகரை வணங்காமல் சென்றதால் தான் இந்தத் தடை என்பதை உணர்ந்த சிவபெருமான், உடனே பிள்ளையாரை நினைத்து வணங்கினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு, உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, 'முக்கண்ணனையே தனக்கு காணிக்கையாகத் தர வேண்டும்' என்றார் கணபதி.

    எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    ×