என் மலர்
ஆன்மிகம்
- தேவர் சன்னதி முன்பு சாயாபி ஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
- வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 5-வது நாளான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அங்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தம், கந்த சஷ்டி கவசம் பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
- முருகப்பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும்.
- பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற தலம்.
காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருத்தலம்.

ஆலய சிறப்புகள்
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங் கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார்.
ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்கு சென்றார்.
அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார். அவன், பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் "பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான் உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்" என்றார், நாரதர்.'
இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனை தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றான். அங்கே அவனுக்காக காத்திருந்தார், நாரதமுனிவர்.

அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங்கினார். "துர்வாச முனிவரிடம் சென்று முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்" என்று ஆசி கூறி அனுப்பினார்.
பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி நின்றான். துர்வாச முனிவர். பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார்.
அதன்படி வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான் பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே வல்லக்கோட்டை முருகப் பெருமான் திருக்கோவில்.
வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபய கரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது.
பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள் வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை.
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருண கிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார். ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தமிழ்புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறும்.
பாலசுவாமி
திருச்செந்தூர், ஆண்டாள்குப்பம், திருக்கண்டியூர் ஆகிய ஆலயங்களில் பாலசுவாமி திருவுருவத்தைத் தரிசிக்கலாம், இவர், உடல் குறைபாடுகளை அகற்றும் சக்தி கொண்டவர் என்று நம்பப்படுகிறது. இவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த உடல்நலம் கிடைக்கும்.

தேவசேனாதிபதி
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்த முருகப்பெருமான் கோவிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில், இந்தத் திருவடிவைக் காணலாம். இவரை வழி பட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

பிரம்ம சாஸ்தா
காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்ம சாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகையான வித்தைகளும், கைவரப் பெறும். சகலவிதமான கலை அறிவும் கைகூடும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
கந்தசுவாமி
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலை, பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் இதுவாகும். இவரை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும்.

கஜவாகனர்
யானை மீதோ, யானையை அருகிலோ வைத்தபடி அருளும் முருகப்பெருமானை 'கஜவாகனர்' என்பார்கள். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகிய இடங்களில் இந்த வடிவத்தை காணலாம். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.
கிரவுஞ்சபேதனர்
திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் காணப்படுகிறது. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.
கார்த்திகேயா
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில், இவரது திருவுருவம் உண்டு. இவரை வழிபாடு செய்து வந்தால், சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.

குமாரர்
நாகர்கோவில் அருகில் சிறிய குன்றின் மீது இருக்கும் குமாரக்கோவிலில் இவரது திருவடிவம் இருக்கிறது. அதேபோல் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்கு பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இவரை வழி பட்டால் ஆணவம் அடியோடு நீங்கும்.
சேனானி
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழி பட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை விலகும்.
சரவணபவர்
சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது. தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.

சக்திதரர்
திருத்தணிகையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் திருவடிவம், ஞான சக்திதார் திருக்கோலமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.
சிகி வாகனர்
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம் ஆகும். மயில் மீது வீற்றிருக்கும் இந்த முருகனை வழிபட்டால் இன்ப வாழ்வு அமையும்.

சுப்பிரமணியர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி முருகன் கோவில் மூலவர், சுப்பிரமணியர் திருவடிவம் ஆகும். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்த பெருவாழ்வை அளிக்கக்கூடியவர்.
வள்ளி கல்யாண சுந்தரர்
திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருமேனி இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப்பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும்.
தாரகாரி
ஹதாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமானுக்கு இந்த திருப்பெயர் ஏற்பட்டது. உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில், இந்த தாரகாரி முருகன் அருள்பாலிக்கிறார்.
- சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-20 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 10.15 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: மூலம் காலை 9.46 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல். பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் பவனி. மாயவரம் ஸ்ரீ கவுரீ மாயூரநாதர் உற்சவம் ஆரம்பம். திருக்கேஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ கொடியேற்று. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவி லில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் அபிஷேகம், அலங்காரம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், அலங்காரம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-பாராட்டு
கடகம்-சுகம்
சிம்மம்-லாபம்
கன்னி-விருத்தி
துலாம்- கவனம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பயணம்
மகரம்-பாசம்
கும்பம்-உயர்வு
மீனம்-கடமை
- வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
- செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர்.
வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு.
வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர்.
ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம்.
நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே.
ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும்.
கோவில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
- வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.
- அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை.
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.
அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை.
எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர்.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
- இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
- ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.
அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.
இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.
முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.
இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.
இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
- சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
- எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.
விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும்.
உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள்.
- கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை.
- தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
கோவில்களில் இறைவன் திருவீதியுலா வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. கோவில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில், கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. இதற்கென்று தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதிவேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது.
செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை அடைய அடைய, அவன் பேரின்ப நிலையை விரைவாக அடைகிறான். இதற்காகவே, வீதிகளில் சுவாமி பவனி வருவதை உருவாக்கினார்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் (முதியோர்கள்), கோயிலுக்குச் செல்லக் கூடாதவர்கள் (தீட்டுப்பட்ட பெண்கள்), மரணம் போன்ற தீட்டுப்பட்ட குடும்பத்தினர்கள், நோய், கர்ப்பகாலம், போன்ற பல காரணங்களால் செல்ல இயலாதவர்கள் என பல்வேறு காரணங்களால் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும், வணங்க வேண்டும் என்பதற்காகவே உற்சவரான இறைவன் திருவீதியுலா வருகிறார்.
தீட்டு பட்டவர்களும் திருவீதியுலா வருகிற உற்சவரான இறைவனை வணங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலாவரும் இறைவனுக்கு திருஷ்டியை நிவர்த்தி செய்த பின்பே, மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்வார்கள் எனவே உற்சவர் இறைவனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். அதற்கு தடை ஏதும் கிடையாது. அதனால், எந்த பாவமும் நேராது.
- அர்ச்சனை என்பது இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.
- கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூறப்படுகிறது.
நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது.

சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும். பூக்களாலும், குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.
இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது
அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.
மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.
அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.

அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள். பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம் கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.
ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.
- இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை.
புதுடெல்லி:
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
3-வது நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே நீர் நிலைகளில் திரளும் பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடி பிரார்த்தனை செய்வார்கள். இதையொட்டி டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
- குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.
- செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.
குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.
செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகுக்கிறது.
ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.
ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.
உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.
பாவை விளக்கு
ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்ருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது.
இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.






