என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மங்கலம் உண்டாக்கும் குத்து விளக்கு
    X

    மங்கலம் உண்டாக்கும் குத்து விளக்கு

    • குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.
    • செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

    குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது.

    செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து&நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது.

    இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகுக்கிறது.

    ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.

    ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.

    உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

    பாவை விளக்கு

    ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்ருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது.

    இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

    Next Story
    ×