என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-6 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி இரவு 9.51 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பூசம் இரவு 8.38 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூ ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூல வருக்கு திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை பெரிய தெருவில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-தாமதம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-வரவு

    கன்னி-உவகை

    துலாம்- கடமை

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- உழைப்பு

    மகரம்-நட்பு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-லாபம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
    • முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.

    இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.

    முருகன் சிலை கூட முன்பு மரகத பச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டு இருக்கலாம்.

    இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகத பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

    அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த ஸ்தலத்தை பாடியுள்ளார். திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.

    மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனை திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு "சீதளவாரிஜ பாதா நமோ நம" என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 ஸ்தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

    இந்த தலத்தில் முருகன் பிரம்ம சாந்த மூர்த்தி தோற்றத்தில் உள்ளார். பிரம்மனின் செருக்கை அடக்கி, படைத்தல் தொழிலை மேற்கொண்டு அடைந்த உருவமாகும்.

    ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார். வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

    சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான். இத்தலத்து சுப்பிரமணியரை வழிபட நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    • முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.
    • பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.

    சந்ததமும், அடியார் சிந்தையில் குடியிருக்கும் முருகப் பெருமான், நம் சிந்தையைக் கவர்கிறார். கலியுகத்தின் பேசும் கடவுளான பாலசுப்பிரமணியப் பெருமானின் அருட்பார்வை நம்மை நோக்கிப் பாய்ந்துவர, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாள் நாம் வேண்டும் வரங்களை அள்ளி அளித்தர, உடலும் உள்ளமும் லேசாகி மிதந்து வர, நம்மை நாம் இழந்து அவன் திருவடிகளில் சரணாகிறோம்.

    முக மண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை பாலசுப்பிரமணிய பெருமானை கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடி நிற்கும் கோல வடிவைக் காணலாம்.

    முருகப் பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சையில் கரும்பச்சை வைரம்போல் பிரகார ஜோதியாகக் காட்சி அளிக்கிறார். இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

    அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.

    அருணாசலேசுவரர், அபீத குஜாம்பகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம் பயிர்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை தைத் தலம் பற்றும் திருமண காட்சியாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண் மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக்கண் கோடி வேண்டும்.

    பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.

    மிக நேர்த்தியான வேலைப்பாடு, இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை. ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச் சிறப்பாக வள்ளி மணவாளப் பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.

    • மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.
    • இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக 'வருக...வருக...' எனக் கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது.

    ஐம்பொறிகளையும் ஐம்பூதங்களையும் அடக்கு, அடக்கு என ராஜகோபுரம் நம்மிடம் கூறுவது போல் உள்ளது.

    உயரமான கொடிமரம், கொடி மரத்துக்கு முன்னால் அழகே திருஉருவம் கொண்டதுபோல மரகதப் பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது.

    இதுபோல் சிறந்த வடிவமைப்புள்ள மரகத மயில் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக கூறலாம்.

    கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகத கல்லில் சூரியனார் ஒளி வீசிக்கொண்டு இருக்குக, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்டு கம்பீரமான ராஜகணபதி மரகத கல்லில் பச்சை பசேல் என மின்னிட மரகத விநாயகர் என்ற நாம கரணத்துடன் வேண்டுவதை அளிக்கும் அழகுக் கோலத்துடன் வீற்று இருக்கிறார்.

    பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், ஆதிமூலவர் (முன் இருந்த பாலசுப்பிரமணிய சுவாமியின் விக்ரகம்) நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் புடை சூழ சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

    இங்கு நவக்கிரகம் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பது சிறப்பாகும்.

    இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22&வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில்கள் பல உள்ளன.

    சென்னைக்கு வட மேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33&வது கிலோ மீட்டரில் இடது பக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவு வாயில்) நம்மை வரவேற்கிறது.

    இந்தத் தோரண வாயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.

    நுழைவுவாயிலைக் கடந்து ஆலயம் நோக்கி செல்கையில், சாலையின் இரு பக்கமும் பசுமையான நிலங்கள், வீசியாடும் நெற்கதிர்கள், குலுங்கிக்குலை தள்ளி ஆடும் வாழைத் தோப்புகள், கிராமத்தின் நுழைவாயிலில் சப்த மாதர் கோவில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில், மேற்கே பெருமாள் கோவில், பெருமாள் கோவிலுக்குப் பின்னால் விஷ்ணு, துர்கை கோவில்கள், வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது.

    இவ்வூரில் ராமர் கோவில், விநாயகர் கோவில், ஜைனர் 22&வது தீர்த்தங்கரர் பள்ளி என கோவில்கள் பல இருப்பதை, அருணகிரிநாதர், 'ஆடகம்பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென்சிறுவாபுரி' எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.

    • நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
    • கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.

    காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் நடுவில் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

    தீபாவளி நீங்கலாக ஆண்டு முழுவதும் முருகப்பெருமானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. (தேன் அபிஷேகம் பிரியமானதாம்)

    முருகன் இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.

    முருகன், கச்சியப்ப சிவாச்சாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம்.

    கச்சியப்பருக்கு பெருமைசேர்க்கும் பீடம் எதிரே முருகப்பெருமான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.

    நவகிரகங்கள் ஒன்றையன்று பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

    கி.பி. 11&ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது.

    வள்ளலாருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள குமரக்கோட்டம் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    அன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும்.

    பின்னர் காலை 8 மணிக்கு உற்சவ சுவாமிகளாக சுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வாணை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    காஞ்சீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்து வந்து சுவாமியை வலம் வந்து தரிசிப்பர்.

    கந்தபுராணம் அரங்கேறிய இடம் இக்கோவில் வளாகத்தில் உள்ளதால் இக்கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

    • நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
    • பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

    காஞ்சீபுரம் சுப்பிரமணியர் கோவில் (குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்பதாகும். காஞ்சியிலுள்ள முருகன் கோவில்களில் இது தனித்துவம் கொண்டதாகும்.

    கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.)

    மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் வைகாசி 11ம்நாள் பிரம்மோற்சவத்தில் வள்ளியுடன் சேர்ந்த சுப்பிரமணியருக்கும், ஐப்பசி கந்த சஷ்டியில் தேவசேனாவுடன் முருகனுக்கும் திருமணம் நடக்கிறது.

    கந்தசஷ்டி திருவிழாவின் போது இந்தக் கோவிலை 108 முறை சுற்றி தங்கள் கோரிக்கைக்காக பக்தர்கள் வேண்டுவார்கள்.

    வைகாசி விசாகப் பெரு விழாவும், திருக்கார்த்திகையும் இங்கு சிறப்பு. இது தவிர செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை, பூசம், சஷ்டி முதலியன இங்கு சிறப்பான நாட்களாகும்.

    நாக ஸ்கந்த வழிபாட்டிற்காக இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

    பிரார்த்தனை நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

    • சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
    • நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.

    மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.

    மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.

    ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

    பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.

    இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

    மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.

    இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கம்.
    • சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.

    "கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போகும் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.

    பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.


    ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை காண்கிறார்களோ அவர்களுக்கு 7½ நாட்டு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.

    ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:-

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகு கின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.


    இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார்.

    இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம். சூரியன்- உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் மகன்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு - மகன்,

    2. எமதர்ம ராஜன் - மகன்,

    3. யமுனா தேவி - மகள்.

    எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).

    சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.

    "வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி"என்று மாறினாள். "சாயா"என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.

    இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.

    நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு - மகன்

    2. ச்ருத கர்மா - மகன்

    3. பத்ரை - மகள்

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.

    ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.


    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான்.

    சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.

    அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.

    பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான். அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார்.

    அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்"என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள் பாலித்தருளினார்.


    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7½ சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    • பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்.
    • கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வழக்கமாக விரதமிருந்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னி ஐயப்பமார்கள் அதிகளவில் வருவதே இதற்கு காரணம்.

    தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துகொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.

    அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது.

    அதே நேரத்தில் யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் கடை பிடிக்கவேண்டிய விஷயங்களை இந்த ஆண்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-


    செய்ய வேண்டியவை

    * பக்தர்கள் மலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுங்கள்.

    * மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் - பாரம்பரிய பாதையை பயன்படுத்தி சன்னிதானம் செல்லவும்.

    * பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.

    * திரும்பும் பயணத்திற்கு நடைபந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.

    * சிறுநீர் கழிப்பதற்கும், உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் கழிவறைகளை பயன்படுத்துங்கள்.

    * சன்னிதானத்தில் நிலவும் கூட்டத்தின் நிலையை கண்டறிந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லுங்கள்.

    * டோலியை பயன்படுத்தும் போது, தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் உங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.

    எந்த உதவிக்கும் காவல்துறையை அணுகவும்.

    * சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

    * உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உண்ணக்கூடிய பொருட்களை வாங்கவும்.

    * பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

    * ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.

    * கழிவுப் பெட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுங்கள்.

    * தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெறவும்.

    * குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாளிகாபுரம் (பெண்கள்) முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிடப்பட வேண்டும்.

    * குழுக்கள் அல்லது உடன் வந்த நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டால், பக்தர்கள் காவல் உதவி நிலையங்களில் புகார் செய்யலாம்.


    செய்ய கூடாதவை

    * கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.

    * பம்பை, சன்னிதானம் மற்றும் யாத்திரை செல்லும் வழியில் புகைபிடிக்க வேண்டாம்.

    * மது அல்லது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.

    * வரிசையில் குதிக்க வேண்டாம். வரிசையில் இருக்கும்போது அவசரப்பட வேண்டாம்.

    * ஆயுதங்கள் அல்லது பிற வெடிபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.

    * அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை மகிழ்விக்க வேண்டாம்.

    * கழிப்வறைக்கு வெளியே சிறுநீர் கழிக்காதீர்கள். கழிவறைக்கு வெளியே உடல்களை சுத்தம் செய்யாதீர்கள்.

    * எந்தவொரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.

    * எந்த உதவிக்கும் காவல்துறையை அணுக தயங்க வேண்டாம்.

    * குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளை வீசக்கூடாது.

    * பதினெட்டாம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம்.

    * பதினெட்டம்பாடியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.

    * புனித படிகளில் ஏறும் போது பதினெட்டாம்படியில் மண்டியிட வேண்டாம்.

    * நடைப்பந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் திரும்பப் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

    * மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடு எங்கும் ஓய்வெடுக்க வேண்டாம்.

    * நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் விரிகளுக்கு (தரையில் பாய்கள்) பாதைகளை பயன்படுத்த வேண்டாம்.

    பாதுகாப்பு

    * பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

    * ஆயுதங்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    * சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி தீ எரித்தால் தீயை உபயோகித்த உடனே அணைக்க வேண்டும்.

    * பதினெட்டாம் படியில் ஏறும் முன் உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-5 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி இரவு 9.41 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 7.54 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் திருப்புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-கீர்த்தி

    கடகம்-உறுதி

    சிம்மம்-சாகசம்

    கன்னி-திடம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஜெயம்

    தனுசு- அன்பு

    மகரம்-பெருமை

    கும்பம்-உதவி

    மீனம்-உண்மை

    • நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.
    • அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார்.

    நோய் நீக்கும் வழிபாடு:

    அய்யப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது.

    இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும்.

    இங்கு மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.

    நெய் அபிஷேகம்:

    சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும்.

    இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும்.

    நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.

    அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார்.

    இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

    மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள்.

    இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.

    ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள்.

    அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது.

    அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

    ×