என் மலர்
ரஷ்யா
- சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ்.
- இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது.
மாஸ்கோ:
சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990-ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் இறந்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுக்கு ரஷிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
- உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.
- உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிபர் புதின் உத்தரவிட்டார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டார்.
ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட உக்ரைனை விட்டு ரஷியாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும். கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனில் பிப்ரவரியில் ரஷியாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய ஆதரவு பிராந்தியங்களான சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிலிருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
ஏற்கனவே, உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.
- ரஷியா-உக்ரைன் போரில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- உக்ரைன் குழந்தைகள் 972 உயிரிழந்துள்ளதாக தகவல்.
கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்தது. தலைநகர் கீவ் உள்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இரு தர்ப்பு படைகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போரில் 9 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின்
ராணுவத் தலைவர் ஜெனரல் வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 5,587 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 7,890 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளனர். குறைந்தது 972 உக்ரைன்
குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.சபை குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புள்ளி விவரங்கள்தான் ஆனால்
இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கும் என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷி 80,000 வீரர்களை இழந்துள்ளதாக அமெரிக்க
ராணுவ அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக பயங்கரவாதி தகவல்.
- கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதியிடம் நடத்தி விசாரணையில் துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- புதினுக்கு மிகவும் நெருக்கமான அலெக்சாண்டர் டுகினை ஊடகங்கள் ‘புதினின் மூளை’ என்றே அழைக்கின்றன.
- உக்ரைன் மீதான ரஷிய போரை அலெக்சாண்டர் டுகின் தீவிரமாக ஆதரித்து வருகிறார்.
மாஸ்கோ :
ரஷியாவை சேர்ந்த மூத்த அரசியல் தத்துவ அறிஞர் அலெக்சாண்டர் டுகின். தீவிர ரஷிய தேசியவாத சித்தாந்தத்தை கொண்ட இவர் அதிபர் புதினின் உதவியாளர் ஆவார்.
புதினுக்கு மிகவும் நெருக்கமான இவரை ரஷிய ஊடகங்கள் 'புதினின் மூளை' என்றே அழைக்கின்றன. புதின் அரசின் எந்தவொரு முக்கிய நடவடிக்கையிலும் அலெக்சாண்டர் டுகினின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷிய போரை அலெக்சாண்டர் டுகின் தீவிரமாக ஆதரித்து வருகிறார். இதனால் அவர் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அலெக்சாண்டர் டுகினின் மூத்த மகள் டார்யா டுகினா. 30 வயதான இவர் ரஷியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். தனது தந்தையை போல தீவிர ரஷிய தேசியவாதியான இவர், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.
ரஷியாவின் படையெடுப்பை நியாயப்படுத்தி ஆன்லைனில் தவறான தகவல்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் டார்யா டுகினா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
ஏற்கனவே அவரது தந்தை மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்ததை கவுரவமாக கருதுவதாக டார்யா டுகினா அப்போது தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள போல்ஷியே வியாசெமி என்ற இடத்துக்கு அருகே டார்யா டுகினா தனது தந்தையின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் திடீரென குண்டு வெடித்தது.
இதில் தீப்பிடித்து எரிந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசைக்கு சென்று கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் டார்யா டுகினா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே குண்டு வெடிப்பு நடந்த கார் டார்யா டுகினாவின் தந்தையும், அதிபர் புதினின் உதவியாளருமான அலெக்சாண்டர் டுகினின் கார் என்பதால் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாஸ்கோ அருகே நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அலெக்சாண்டர் டுகின் மற்றும் தர்யா டுகின் ஆகிய இருவரும் ஒரே காரில் வீடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அலெக்சாண்டர் டுகின் தனது பயணத்திட்டத்தை மாற்றியதால் தர்யா டுகின் மட்டும் காரில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியாவில் அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது.
- உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது.
மாஸ்கோ :
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
- உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
- உக்ரைன், தைவானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கும் அமெரிக்காவே காரணம் என்றார் அதிபர் புதின்.
மாஸ்கோ:
உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புதின் குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் தைவான் பயணத்தைக் குறிப்பிட்டு பேசினார். இதுதொடர்பாக, அதிபர் புதின் கூறியதாவது:
மோதல் பகுதிகளில் போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த மோதலை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளிலும் அமெரிக்கா அதையே செய்ய முயற்சிக்கிறது.
தைவானுக்குச் சென்ற அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் பயணம், ஒரு தனிப்பட்ட பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, தைவான் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும், நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் அமெரிக்க உத்தியாகும் என தெரிவித்தார்.
- கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ரஷியாவின் கிரிமியாவில் ராணுவ விமான தளம் உள்ளது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நீடித்து கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியாவின் கிரிமியாவில் ராணுவ விமான தளம் உள்ளது. இங்கிருந்து உக்ரை னின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. கிரிமியாவை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா தாக்குதல் நடத்தி தன்னுடன் இணைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கிரிமியா வில் உள்ள ரஷ்யாவின் ராணுவ விமான தளத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு தீப் பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
ராணுவ தளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறின.
இதற்கிடையே ரஷியா ராணுவ தளம் மீது உக்ரைனில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால் அதை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, "ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் வெடித்தது. தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. போர் விமானங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அதே போல் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்த வில்லை என்று உக்ரைனும் தெரிவித்தது.
இதற்கிடையே ராணுவ தளத்தில் குண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர் என்று கிரிமியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன.
- புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள்.
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர் புற்றுநோயால் அவதிப்படுவதாக கூறப்பட்டது. பிறநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது, புதினின் கை, கால்களில் நடுக்கம் இருந்தன என்று ஊடகங்கள் தெரிவித்தன.
இதேபோல் புதின், தன்னை போன்று உருவம் கொண்ட நபர் பொது வெளியில் உலாவ விடுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் புதினை போன்றே தோற்றம் கொண்ட போலி நபர் உலாவி வருவதாக உக்ரைன் நாட்டு உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைனின் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் ஒருதொலைக் காட்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதினின் சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரமும், காதுகளும் மாறி உள்ளன. அவரது புகைப் படங்களில் ஒவ்வொன்றிலும் காதுகள் வித்தியாசமானதாக இருக்கிறது. ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது. அது ஒரு கைரேகை போன்றது. அதை மீண்டும் செய்ய முடியாது.
புதினை போன்று வேறு ஒரு நபரை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், புதின் பொது வெளியில் தோன்றிய போது வெவ்வேறான பழக்க வழங்கங்கள், வித்தியாசமான நடத்தைகள், வித்தியாசமான நடைகள், நன்கு கூர்ந்து கவனித்தால் வெவ்வேறு உயரங்களை நீங்கள் பார்க்கலாம் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, கடந்த மாதம் ஈரானுக்கு சென்று அந்நாட்டு அதிபர் மற்றும் துருக்கி அதிபரை சந்திக்க புதினின் போலி நபர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.
நான் ஒரு குறிப்பை மட்டும் கொடுப்பேன். ஈரானின் தெக்ரானில், புதின் விமானத்தில் இருந்து கீழே இறங்குவதை பாருங்கள். அது புதினா? என்பதை பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே போல் உக்ரைன் வட்டாரங்கள் கூறும்போது, தெக்ரானில் விமானத்தில் இருந்து கீழே இறங்கியபோது புதின் வழக்கத்துக்கு மாறாக விரைந்து நடந்து சென்றதாக தெரிவித்துள்ளது.
புதின் பற்றிய உக்ரைனின் உளவுத்துறை தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது.
- போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மாஸ்கோ:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 150 நாளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ரஷியாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் ரஷிய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை இந்த கடற்படை தலைமையகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வந்தது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் விடுதியில் தங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி வெளியேறினர். ஆனால் விடுதியில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். விடுதி ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் இருந்ததால், உள்ளே இருந்தவர்கள் வெளியில் தப்பி செல்ல முடியாமல் தீயில் சிக்கி திணறினர்.
தீ விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாஸ்கோ நகர சபையின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கிரில் ஷிடோவ், விடுதியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்த அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
- ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக யூரி போரிசோவ் பொறுப்பேற்றார்.
- சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகவுள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது.
மாஸ்கோ:
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில், 2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
2024 க்குப் பிறகு ரஷியா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






