என் மலர்
அமெரிக்கா
- வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
- இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வாஷிங்டன்:
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
- ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
- ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் ரஷியாவை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபர் புதின் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
- உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவோம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
- புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதின் மற்றும் அவரது பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயப்படப் போவதில்லை.
புதினின் செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியாகும். அவரால் அண்டை நாட்டின் நிலப்பரப்பைக் கைப்பற்றி அதிலிருந்து தப்பிக்க முடியாது. உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து ராணுவ தளவாடங்களை வழங்குவோம்.
நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முழுமையாக தயாராக உள்ளது. எனவே மிஸ்டர் புதின், நான் சொல்வதை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் எங்கள் நட்பு நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இன்றும் புதிய தடைகளை அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.
- உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவித்தார்.
- உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்தார்.
நியூயார்க்:
உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது என மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது.
உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.
- உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
- அந்த பகுதிகளில் பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்:
உக்ரைனுடன் 7 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய பகுதிகளை இணைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. இந்த பகுதிகளில் இதற்கு முன்பாக பொது வாக்கெடுப்பை ரஷியா நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் விடுத்துள்ள பதிவில், ரஷியாவின் நடவடிக்கைகள் உக்ரைனின் பிராந்தியத்தில் அமைதியைப் பாதிக்கும். இந்த ஆபத்தான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களை நிலைநிறுத்த பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கடமையை நான் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தெளிவாக உள்ளது. ஒரு தேசத்தின் பிரதேசத்தை அச்சுறுத்தல் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக வேறொரு தேசம் தன்னுடன் இணைக்கும் நடவடிக்கையானது ஐ.நா.வின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.
- உருகும் பனிப்பாறைகளே, பாகிஸ்தானின் பேரழிவு நிலைக்கு காரணம்.
- பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்,இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஊடக குழுவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறோம். தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இணைந்து செயல்படுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் உருகும் பனிப்பாறைகள்தான் பாகிஸ்தானின் இந்த பேரழிவு நிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பல காரணங்களுக்காக நாங்கள் (இந்தியாவுடன்) இணைந்து செயல்படுவது 2018-19 ஆண்டிற்கு பிறகு சாத்தியமற்றதாகி உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஏதேனும் ஒரு பகுதி இருந்தால், அதுதான் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்,
ஏனென்றால், நாங்கள் அனுபவித்தது, எங்கள் எதிரிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த பிலாவல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்ப்பதில் பாகிஸ்தான் நிலைப்பாடு உறுதியானது என கூறினார்.
- அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
- துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய டெக்சாசில் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது.
மத்திய டெக்சாசில் உள்ள மெரிக்கோரில் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சத்தங்களை கேட்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.
- அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
- இந்தப் புயலால் அம்மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.
புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.
இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.
இயான் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்தார்.
வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.
இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்தச் சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இந்த புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதத்தைக் கடந்துள்ளது.
- இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் டாலர்களை புதிய அவசர கால ராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்புக்காக உக்ரைனுக்கு வழங்குமாறு அமெரிக்க பாராளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார்.
- தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஒக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- புளோரிடா மாகாணத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
கரீபியன் கடலில் உருவான இவான் என்ற சூறாவளி புயல் கியூபா நாட்டின் மேற்கு பகுதிகளை தாக்கியது. மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியது. புயல் தாக்குதலால் அப்பகுதி கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கியூபாவை தாக்கிய இவான் புயல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை நோக்கி நகர்ந்தது. அந்த புயல் புளோரிடாவின் தென்மேற்கு கடலோர பகுதிகளை தாக்கியது. சூறாவளியின் கண் பகுதி போர்ட் மியர்ஸ் நகருக்கு மேற்கே உள்ள கேயோ சோஸ்டா தீவை தாக்கி கரை கடந்தது. அதனால் தொடக்கத்தில் 240 கி.மீ. வேகத்திலும், பின்னர் சற்று வலுவிழந்து மணிக்கு 168 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது. இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. புயல் காரணமாக கனமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் காற்றில் கவிழ்ந்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விமான நிலையத்தில் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன.
புளோரிடா மாகாணத்தில் 20 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகிறார்கள். புளோரிடா மாகாணத்தின் தென்மேற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜார்ஜியா, தென் கரோலினாவிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புயல் தாக்குதலையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் கூறும்போது, "இது மோசமான நாள். இதை இன்னும் இரண்டு நாட்கள் அனுபவிக்க போகிறோம்" என்றார். இதற்கிடையே கியூபாவில் இருந்து வந்த அகதிகள் படகு புளோரிடா கடலில் புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 23 பேர் மாயமாகி உள்ளனர்.
- ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
- இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.
வாஷிங்டன்:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:
உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது.

தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.
பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.






