search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் பிராந்தியங்கள் இணைப்பு- ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு
    X

    உக்ரைன் பிராந்தியங்கள் இணைப்பு- ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா-சீனா புறக்கணிப்பு

    • ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்து வருவதால் ரஷியாவை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.

    இந்த நிலையில் உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லுசன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபர் புதின் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் ரஷியா விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும். ரஷியாவால் கொண்டு வரப்பட்ட எந்த மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்ககூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தது. ஆனால் இந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா உள்பட 4 நாடுகள் புறக்கணித்தது. ஐ.நா. சபை தீர்மானத்திற்கு ரஷியா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×