என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
    • ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது.

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில்,

    சட்டவிரோதமாக இங்கு வரலாம் என தவறு செய்யாதீர்கள், இங்கு வந்தால் தங்க முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்க மாட்டோம். அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

    ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளது. எனது டாப் 5 முக்கிய பணிகளில் ஒன்றாக இது இருக்கிறது.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

    • லண்டனில் மகாத்மா காந்தி சிலை, குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
    • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசினார்.

    லண்டன்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

    இதற்கிடையே, லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. மீது புதிய தாக்குதலைத் தொடங்கினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், இது தைரியத்திற்கும் கோழைத்தனத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான போராட்டம். எனக்கு எதிரான விமர்சனங்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.

    அவர்கள் என்னை எவ்வளவு அதிகமாக தாக்குகிறார்களோ, அது எனக்கு நல்லது. ஏனென்றால் இது தைரியத்திற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலான சண்டை. இது மரியாதைக்கும் அவமரியாதைக்கும் இடையே, அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான சண்டை.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாட்டில் மறைக்கப்பட்ட பிரச்சினை என தெரிவித்தார்.

    • பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது.
    • இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்.

    கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல்வாதிகளும் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது.

    பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது.

    என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்" என்றார்.

    மேலும், அவர் "கிரிமினல் வழக்குகளின் கீழ் எனக்கு எதிராக பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியாக, ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மீது இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்" என்றார்.

    • பந்துவீச்சாளர் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • இந்தப் பட்டியலில் பும்ரா 4-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    லண்டன்:

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    • இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து இங்கிலாந்து புதிய மன்னராக 2-ம் எலிசபெத்தின் மகன் 3- ம் சார்லஸ் நியமிக்கபட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதிய மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா வருகிற மே மாதம் 6- ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட இந்த சிம்மாசனம் 1308-ம் ஆண்டு மன்னர்கள் முடி சூட்டு விழாவுக்காக தயார் செய்யப்பட்டது.

    1399-ம் ஆண்டு மன்னர் ஹென்றி இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து முடிசூட்டி கொண்டார். அதன்பிறகு 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இந்த சிம்மாசன நாற்காலி சேதம் அடைந்தது. பின்னர் இந்த சிம்மாசனத்தின் அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலையில் சிங்க உருவம் பொருத்தப்பட்டு உள்ளது. பல சிறப்புகளை பெற்ற சிம்மாசனத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மே மாதம் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் இதில் அமரவைக்கப்பட்டு முடி சூட்டப்படுவார். அப்போது அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும். இந்த விழாவால் லண்டன் பக்கிம்காம் அரண்மனைகளை கட்டத் தொடங்கி இருக்கிறது.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்து உள்ளது.
    • அவரது உடல்நிலை நன்றாக இருந்ததால் விமானி எதிர்மறையாக எதையும் நினைக்கவில்லை.

    இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் விமானி ஆகியோர் பிளாக்பூல் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் பி.ஏ.-28-161 என்ற அந்த விமானம் ஓடுபாதையில் செல்லும்போது அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொண்டு இருந்து உள்ளனர். விமானம் உயரே சென்றபோது, பயிற்சியாளரின் தலை திடீரென சரிந்து உள்ளது. ஆனால், அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்து உள்ளார். புறப்படும்போது அவரது உடல்நிலை நன்றாக இருந்ததால் விமானி எதிர்மறையாக எதையும் நினைக்காமல், விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து உள்ளார்.

    ஆனால் சிறிது நேரத்தில் பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்து உள்ளது. அப்போதும், நகைச்சுவைக்காக அவர் அப்படி செய்கிறார் என நினைத்தபடி, தொடர்ந்து விமானத்தை செலுத்தி உள்ளார். விமானம் தரையிறங்கிய பின்னரும் பயிற்சியாளர் பதில் எதுவும் அளிக்காமல், எழுந்திருக்காத நிலையில், அதிர்ச்சியடைந்த விமானி அவசரகால விமான பணியாளர் ஒருவரை உதவிக்கு அழைத்து உள்ளார். ஆனால், அந்த பயிற்சியாளரை காப்பாற்ற முடியவில்லை.

    அவருக்கு. முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்து உள்ளது என்றும், அதற்காக மருந்து எடுத்து வந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவரது பிரேத பரிசோதனை முடிவில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர்.

    லண்டன்:

    வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பல நாடுகள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன.

    வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தை மிகப்பெரிய அளவில் இங்கிலாந்து நடைமுறைப்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியில் சுமார் 2,900 பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் சராசரியாக 4 நாட்களில் 34 மணி நேரம் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை பார்க்கும் திட்டத்தை பெரும்பாலான நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்று கொண்டுள்ளனர். சோதனை முயற்சியில் ஈடுபட்ட 61 நிறுவனங்களில் 92 சதவீதம் பேர் அத்திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டம் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சிட்டிசன்ஸ் அட்வைஸ் கேட்ஸ்ஹெட்டின் தலைமை அதிகாரி பால் ஆலிவர் கூறும்போது, இந்த திட்டத்தால் வேலை தக்க வைத்தல், ஆள் சேர்ப்பு மேம்பட்டுள்ளது. நோய் நிலைகள் குறைந்துள்ளது. குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை ஊழியர்கள் செய்து வருகிறார்கள் என்றார்.

    • தொல்லியல் ஆய்வாளர்கள் இது டைனோசரின் இடது கால் தடம் என்று கூறியுள்ளனர்.
    • கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யோர்க்ஷிர்:

    இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.

    மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராணி எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
    • இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது

    லண்டன் :

    மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

    இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது.

    இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே கூறி விட்டது. இதையொட்டிய சர்ச்சை இன்னும் தொடர்கிறது.

    தற்போது இந்த வைரம் பதித்த கிரீடத்தை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு அந்த நாட்டின் புதிய ராணியாக மகுடம் சூட்டப்போகும் கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அப்படி இல்லை.

    மே மாதம் 6-ந்தேதி கணவர் மன்னர் மூன்றாம் சார்லசுடன் மகுடம் சூடப்போகும் ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்த கிரீடத்தைத்தான் கமிலா தேர்ந்தெடுத்துள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதில் கோஹினூர் வைரம் கிடையாது. அதே போன்ற வேறொரு வைரம்தான் அதில் பதிக்கப்பட்டுள்ளது,

    ராணி கமிலாவின் தலையை அலங்கரிப்பதற்காக அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவர் கோட்டை கண்காட்சியில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது.

    சமீபத்திய வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை புதிய ராணி ஒருவர் மகுடம் சூட்டுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    முதலில் மன்னர் சார்லஸின் பாட்டியின் கிரீடத்தைத்தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என ஊகங்கள் எழுந்தன.

    ஆனால் கடைசியில் ராணி மேரியின் கிரீடத்தை ராணி கமிலா பார்க்கர் தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இளவரசியாக இருந்து வந்த சார்லசின் மனைவி கமிலா ராணி (குயின் கன்சார்ட்) பட்டம் பெற்றார்.

    இந்நிலையில். மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் அவரது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு நடக்கும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக ராணி வருத்தம் தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.

    ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார் என்பதும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்துள்ளார்.
    • இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் இயான் மோர்கன். இயான் மோர்கன் 16 டெஸ்ட்களில் விளையாடி 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களும், 115 டி20 போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும், 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,458 ரன்களும் எடுத்துள்ளார்.

    இதற்கிடையே, இயான் மோர்கன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், உள்ளூர் போட்டிகள், பிற லீக் கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இயான் மோர்கன் அறிவித்தார்.

    இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×