என் மலர்
உலகம்

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டெடுப்பு
- தொல்லியல் ஆய்வாளர்கள் இது டைனோசரின் இடது கால் தடம் என்று கூறியுள்ளனர்.
- கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க்ஷிர்:
இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






