என் மலர்
இலங்கை
- முதலில் ஆடிய தாய்லாந்து 133 ரன் எடுத்தது.
- அடுத்து ஆடிய மலேசியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தம்புல்லா:
9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து, மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள்எடுத்துள்ளது. அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார்.
மலேசியா சார்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசியா களமிறங்கியது. வான் ஜூலியா அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்தார். வின்பயர்ட் துரைசிங்கம் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில், மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தாய்லாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- அடுத்து ஆடிய இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்கள் எடுத்தது.
- இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.
இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், யு.ஏ.இ. அணிகள் மோதின. இதில் நேபாளம் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த யு.ஏ.இ. 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த யு.ஏ.இ. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார்.
நேபாளம் சார்பில் கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா பொறுப்புடன் ஆடினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் நேபாளம் 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார்.
யு.ஏ.இ. சார்பில் கவிஷா எகொடகே 3 விக்கெட் வீழ்த்தினார்.
- இலங்கை தலைநகர் கொழும்புவில் ஐ.சி.சி வருடாந்திர மாநாடு நாளை தொடங்குகிறது.
- இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
கொழும்பு:
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதற்கிடையே, ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியானது.
- ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு:
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளமும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வரும் 19-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 21-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 23-ம் தேதி நேபாளத்தையும் எதிர்கொள்கிறது.
- இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணை வெளியானது.
- ஜூலை 26-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
கொழும்பு:
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அட்டவணை வெளியானது.
முதல் டி20 போட்டி வரும் 26-ம் தேதியும், 2-வது டி20 போட்டி வரும் 27-ம் தேதியும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 29-ம் தேதியும் நடக்கவுள்ளது.
இதேபோல், ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடர் தோல்வியின் எதிரொலியாக இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வனிந்து ஹசரங்கா ராஜினாமா செய்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், வனிந்து ஹசரங்கா டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளை துறந்து ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை இலங்கை எப்போதும் கொண்டிருக்கும், நான் எப்போதும் போல் எனது அணி மற்றும் தலைமைக்கு ஆதரவளிப்பேன் என ஹசரங்கா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.
- ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது.
கொழும்பு:
சர்வதேச வர்த்தக வழித்தடத்தில், தென்கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையிலான முக்கியமான கடல்வழிப்பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள், எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக இலங்கை துறைமுகங்களில் நின்று செல்கின்றன.
ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன ஆய்வுக் கப்பலான 'யுவான் வாங்-5' இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கேட்டபோது, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது, இந்தியாவை உளவு பார்க்க பயன்படுத்தப்படும் என்று இந்தியா கருதியதே அதற்கு காரணம்.
ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி கொடுத்தது.
அதுபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான்-6' கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தியாவின் கவலைகளை தீர்க்கும்வகையில், வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை இலங்கை துறைமுகங்களில் நிறுத்த ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு அறிவித்தது. இந்த தடை அமலில் உள்ளது.
இந்நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் விஷயத்தில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை இலங்கை அரசால் பின்பற்ற முடியாது. சீன கப்பலுக்கு மட்டும் தடை விதிக்க முடியாது.
இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையில் இலங்கை ஒருதரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படாது.
வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அத்தடை விலக்கிக் கொள்ளப்படும். இலங்கை துறைமுகங்களில் வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களை நிறுத்த அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
- மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது
இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன. இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்
இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து அழைத்துவரப்பட்ட யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.
- இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார்.
- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91.
வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இரா.சம்பந்தன் இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது.
- மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கொழும்பு:
இலங்கையில் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மூலமாக பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.
இது தொடர்பாக இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தது. இதில் அந்த மோசடி கும்பல் 'வாட்ஸ்-அப்' குழுவில் ஆட்களை சேர்த்து அதிக லாபம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்து முதலீடு செய்ய வைத்தும், சட்டவிரோதமாக சூதாட்டங்களை நடத்தியும் பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. மேலும் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதிகளான மடிவெலா, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து மோசடி கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் குற்றப் புலனாய்வு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மோசடி கும்பலை சேர்ந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 137 பேர் இந்தியர்கள் ஆவர். மற்ற 19 பேரும் ஆப்கானிஸ்தான், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த மோசடி கும்பலிடம் இருந்து 158 செல்போன்கள், 60 கம்ப்யூட்டர்கள், 16 லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






