என் மலர்
இலங்கை
- டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 140 ரன்களை எடுத்தது.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய வங்காளதேசம் 80 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 81 ரன்களை எடுத்து வென்றது.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னும், ஷபாலி வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
- தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இந்த நேரத்தில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.
இதேபோல் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.
- இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
- முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 2022-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடம் பெரிய புரட்சி வெடித்தது. இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தபடி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அங்கு அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இதுகுறித்து சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்கிறது.
- நுவான் துஷாரா காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
கொழும்பு:
இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- முதலில் ஆடிய தாய்லாந்து 93 ரன்களில் சுருண்டது.
- அடுத்து ஆடிய இலங்கை 94 ரன்களை எடுத்து வென்றது.
தம்புல்லா:
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. அந்த அணியின் கன்னாபட் கொஞ்சாரோஎன்கை
ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில், தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 94 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
இதனால் இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 49 ரன்னும், விஷ்மி குணரத்னே 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தாய்லாந்து அணி தோற்று தொடரில் இருந்து வெளியேறியதால் வங்காளதேசம் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.
- மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து இடம்பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வென்றது.
தம்புல்லா:
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான், யு.ஏ.இ. அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, யு.ஏ.இ. அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தீர்த்தா 40 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால், சந்து மற்றும் துபா ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குல் பெரோசா 62 ரன்னும், முனீபா அலி 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் அரை சதம் கடந்தனர்.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்னில் வெளியேறினார். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் யு.ஏ.இ. அணி சிரமப்பட்டது.
ஈஷா ரோகித் 38 ரன்கள் எடுத்தார். கவிஷ்கா எகோடகே பொறுப்புடன் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- நடப்பு தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பு:
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.
- இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.
இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.






