என் மலர்
பாகிஸ்தான்
- பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கூடுதல் போலீசார் ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டனர்.
- போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போலீசார் பலியானார்கள்.
பெஷாவர்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் லக்கி மார்வாட் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அங்கு குறைவான போலீசாரே இருந்தனர்.
இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கூடுதல் போலீசார் ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டனர். அப்போது அங்கு போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போலீசார் பலியானார்கள். போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி அஷ்பக்கான் தெரிவித்தார்.
இந்த இரண்டு தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து பாகிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார்.
- பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார்.
இஸ்லாமாபாத் :
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். அப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றபோது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதை தொடர்ந்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், உள்துறை ராணுவ மந்திரி ராணா சனாவுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராணா சனாவுல்லா பேசும்போது, "பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்" என்றார்.
இம்ரான்கான் குறித்த ராணா சனாவுல்லாவின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
- சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோதுமை, தக்காளி, மாவு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
- பெரும்பாலான நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் இரவு 10 முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நாடு கடனில் தத்தளித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து விட்டது.
கோதுமை, தக்காளி, மாவு, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அந்த பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.
வாழைப்பழம் டஜன் ரூ.250 முதல் ரூ.500-க்கு விற்பனை ஆகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். தொடர் மின்வெட்டும் பொதுமக்களை பாடாய்படுத்தி வருகிறது. பெரும்பாலான நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் இரவு 10 முதல் காலை 10 மணி வரை 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.
தற்போது ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லீம்கள் நோன்பு இருந்து வருகின்றனர். அவர்கள் இந்த மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மின்வெட்டை கண்டித்து பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டமும் நடத்த தொடங்கி உள்ளனர். நேற்று கைபர் பக்துங்கா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார்.
- பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சையது முகமது ஷானின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
- கோர்ட்டு அவரது ஜாமீனை நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி இம்ரான்கான் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானை கைது செய்ய தடை விதித்ததோடு, 5 வழக்குகளில் கடந்த 24-ந் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்தநிலையில் ஜாமீனை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட்டு அவரது ஜாமீனை நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டது.
- பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
- இம்ரான் கான் ஒவ்வொரு நாளும் நெருக்கடிகளை உருவாக்குகிறார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்க ளின் விலை அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த படி இருக்கிறது.
நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார். இதை வலியுறுத்தி அவரது கட்சி போராட்டங்களில் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி கஜாவா ஆசிப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியருப்பதாவது:-
பாகிஸ்தானில் தேர்தலை நடத்துவதற்கான போதுமான பணம், நிதியமைச்சகத் திடம் இல்லை. இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை.
இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டு பொய்யானது. அவர் மாகாண சபைகளை அரசியலமைப்பிற்கு முரணாக கலைத்து விட்டார். ஆனால் அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் கோர்ட்டு முன் ஆஜராக விரும்பவில்லை.
இம்ரான் கான் தனது பதவி காலத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டனர். தற்போது இம்ரான் கான் ஒவ்வொரு நாளும் நெருக்கடிகளை உருவாக்குகிறார். ஆனால் அவற்றை அரசாங்கம் சமாளித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் விரைவில் வெளியே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசீம் முனீருக்கு எதிராக பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
- கைது நடவடிக்கைக்கு தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அரசு கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை மலிவு விலையில் வாங்கி கோடிக்கணக்கில் விற்று முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது பெண் நீதிபதியை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பரிசு பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயத்தில் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டு முன்பு திரண்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக 746 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த சமூக ஊடக பிரிவு தலைவர் அஸ்லாம் மஸ்வானி பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு எதிராக பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது ஆகிய வழக்குகளில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானதால் அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உயர்மட்ட விசாரணை அமைப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு இரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.
- பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த 18-ந்தேதி இம்ரான்கான், பரிசு பொருள் மோசடி வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜரானார்.
- கோர்ட்டு வளாகத்தில் தான் கொலை செய்யப்படலாம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கடந்த 18-ந்தேதி இம்ரான்கான், பரிசு பொருள் மோசடி வழக்கு தொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜரானார். இந்த நிலையில் கோர்ட்டு வளாகத்தில் தான் கொலை செய்யப்படலாம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள கோர்ட்டில் நான் ஆஜரானபோது அந்த வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் இருந்தனர். புலனாய்வு அமைப்புகளை சேர்ந்த அவர்கள் என்னை கொலை செய்ய வந்துள்ளனர்.
என்னை சிறையில் அடைக்க அவர்கள் விரும்ப வில்லை. என்னை கொல்லை முயற்சிக்கிறார்கள். அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? எனவே எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கோர்ட்டு விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






