என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்மேன்"

    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணியானது வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மார்க் சாப்மேன் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் 2-வது போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 98 ரன்கள் எடுத்தார்.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தானும், 3வது போட்டி முடிவில்லாமலும், 4வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 98 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இப்திகார் அகமது 36 ரன்னும், இமாத் வாசிம் 31 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் டிக்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து திணறியது.

    அடுத்து இறங்கிய சாப்மேன் அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நீஷம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-2 என சமன் செய்தது நியூசிலாந்து அணி.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சாப்மேனுக்கு அளிக்கப்பட்டது.

    ×