என் மலர்
மெக்சிகோ
- மெக்சிகோவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- மெக்சிகோவின் சென் வென்சிட்டி பகுதியில் கார் பந்தயம் நடைபெற்றது.
- அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குவாத்தமாலா:
வடமேற்கு நியூ மெக்சி கோவில் சம்பவத்தன்று 18 வயது மர்ம வாலிபர் ஒருவர் தேவாலயம் முன்பு நின்று கொண்டு கண்ணில் தென் பட்டவர்களை எல்லாம் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். அந்த வழியாக சென்று கொண்டு இருந்த 97 வயதுடைய ஸ்கோபீல்ட் மற்றும் அவரது 73 வயது மகள் மெலடி ஆகியோர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஷெர்லி என்ற 79 வயது பெண்ணும் பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒருவரும் குண்டுகாயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம வாலிபர் எங்கும் தப்பி ஓடாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். போலீசாரை பார்த்தும் அருகில் வந்து என்னை சுட்டுக்கொல்லுங்கள் என உரத்த குரல் எழுப்பினான். அவனை சரண் அடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவன் வெறித் தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தான்.
பின்னர் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்கோபீல்ட் என்ற பெண் பல ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிவர். அவரது மகள் மெலடி பாலர் பள்ளி நடத்தி வந்தார். தாய்- மகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
- விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமவுலிபாஸ்:
வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.
விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வேன் தீப்பிடித்து எரிந்தததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் 26 பேர் வேனுக்குள் கருகி இறந்தனர். லாரி டிரைவரும் பலியானார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப் ரடோ காய்ச்சலால் அவதிப்பட்டார்.
- 3-வது தடவையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப் ரடோ காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதிபர் லோபஸ் ஒப் ரடோ ஏற்கனவே 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். தற்போது 3-வது தடவையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
- மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
- துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
மெக்சிகோசிட்டி:
மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 வயது சிறுவன், 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மர்ம கும்பல் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
- குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மெக்சிகோ:
மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது.
இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் பாருக்குள் புகுந்தனர். அவர்கள் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் மதுபான பாரைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து 10 பேர் இறந்தனர். இதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் 10 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பஸ் பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
- மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மெக்சிகோ வந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் 40-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் அமெரிக்கா நோக்கி புறப்பட்டனர்.
இந்த பஸ் பியூப்லா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையோரமாக கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
- போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனான கஸ்மேன் கைது செய்யப்பட்டதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறையைத் தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பதிலடி கொடுத்தனர்.
இந்த வன்முறையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேர், பாதுகாப்பு படை தரப்பில் 10 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை மந்திரி லூயிஸ் கிரசென்சியோ சந்தோவல் கூறினார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வன்முறையின் மையப்பகுதியான சினலோவா தலைநகர் குலியாகன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓவிடியோ கஸ்மேன் இப்போது அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
- துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.
இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இதில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை.
அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
- துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
சிவாடட் யுரேஸ்:
மெக்சிகோ நாட்டில் சிவாடட் யுரேஸ் என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. இந்த ஜெயிலில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று வழக்கம் போல சிறைச்சாலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது மர்மநபர்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிறைச்சாலைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கைதிகள் மற்றும் போலீசார் மீது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எதிர்பாராதவிதமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.
இந்த சம்பவத்தில் 10 பாதுகாப்பு படை போலீசார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. அவர்களை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த போலீசாரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி கைதிகள் வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 11 பேர் பலி யானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.
- இஸ்தான்புல் நகருக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாஜா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் பிரிசாசுக்கு மேற்கு- தென்மேற்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. 19 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
துருக்கியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல் நகருக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6-1 ஆக பதிவானது. வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் பக்ரெட்டின் கோகா கூறும்போது, "நிலநடுக்கத்தில் 22 பேர் காயம் அடைந்தனர். பீதியில் ஒருவர் கட்டிடத்தில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்" என்றார்.






