என் மலர்tooltip icon

    மலேசியா

    • முதல் செட்டை இழந்த பிவி சிந்து இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
    • காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யீங்கை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த பிவி சிந்து, இரண்டாவது செட்டை 21-12 என வென்றார். சுதாரித்துக் கொண்ட டாய் சூ யீங் 3வது சுற்றை 21-12 என கைப்பற்றினார்.

    சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.

    28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
    • இதன்மூலம் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அடுத்து சுதாரித்துக் கொண்ட

    சூ யிங் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து பி.வி.சிந்து வெளியேறினார்.

    • மலேசியாவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    கோலாலம்பூர்:

    மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • மலேசியாவில் 1,300-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
    • மலேசியாவில் 11 வகையான குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    கோலாலம்பூர்:

    கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றங்களில் தற்போது பயன்படுத்தப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக மலேசியா தெரிவித்துள்ளது.

    மரண தண்டனைக்குப் பதிலாக மற்ற தண்டனைகள் விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என பிரதமர் அலுவலக மந்திரி வான் ஜுனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது.

    இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், மரண தண்டனைக்கு பதில் வேறு கடுமையான தண்டனைகளை வழங்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிகிறது.

    ×