என் மலர்
மலேசியா
- அன்வார் இப்ராகிம் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
- முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார்.
ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார்.
அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார். இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியான நிலையில், அன்வர் இப்ராஹீம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு குறைவாக 82 இடங்களைப் பெற்றது.
முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால், மற்ற சிறிய கட்சிகள் ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்றுமாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.
- இன்று நடந்த சர்வதேச ஜூனியர் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்ததால் ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
ஜோஹார்:
6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்தது.
லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா அணி 13 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், இந்தியா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிச்சுற்றை எட்டின.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்தியாவின் சுதீப் 14வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் ஹாலண்ட் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இறுதிவரை எந்த அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து ஷூட் அவுட் முறைக்கு சென்றது.
இதில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
போட்டியை நடத்திய மலேசியா புள்ளிப்பட்டியலில் (1 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-பிரிட்டன் அணிகளுக்கு இடையோன ஆட்டம் டிராவில் முடிந்தது.
- புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
மலேஷியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் அணி நேற்று பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா தரப்பில் பூவண்ணா சிபி (7வது நிமிடம்), அமந்தீப் (50வது நிமிடம்), அரைஜீத் சிங் ஹண்டல் (53வது), ஷர்தா நந்த் திவாரி (56வது, 58வது) ஆகியோர் கோல் அடித்தனர்.
பிரிட்டன் தரப்பில் மேக்ஸ் ஆண்டர்சன் (1வது, 40வது நிமிடம்), ஹாரிசன் ஸ்டோன் (42வதுநிமிடம் ) ஜாமி கோல்டன் (54வது, 56வது நிமிடம் )கோல் அடித்தனர். இதையடுத்து இந்த போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் மோதுகின்றன.
- இந்திய ஜூனியர் ஆக்கி வீரர்கள் 5 கோல்களை அடித்தனர்.
- இந்திய அணி நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஆக்கி போட்டி தொடர், மலேஷியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கேப்டன் உத்தம் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆக்கி அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கேப்டன் உத்தம்சிங், ரோகித்,ஜான்சன்,பூர்டி, பாபி சிங் தாமி,அமந்தீப் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
பதிலுக்கு ஜப்பான் தரப்பில் இக்குமி சாகி ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஜூனியர் ஆக்கி அணி தனது நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.
- அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
- எங்கள் கூட்டணி கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.
மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து மொகிதீன் யாசினி பிரதமராக பதவி ஏற்றார். அவர் மீது ஊழல் புகார் எழுந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி விலகினார்.
அதன்பிறகு புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாசோப் பதவி ஏற்றார்.
இதற்கிடையே ஆளும் கூட்டணியின் பெரிய கட்சியான அம்னோ கட்சி அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதற்கு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒப்புதல் அளித்தார். அடுத்த 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக 97 வயதாகும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.
தான் லங்காவி தீவு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார். மேலும் எங்கள் கூட்டணி கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றார்.
- மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என அந்நாட்டு பிரதமர் கூறினார்.
- அங்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர்:
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் இன்று பிற்பகலில் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, அவர் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை சந்தித்துப் பேசினார்.
நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மலேசியாவில் அப்போது பருவ மழைக்காலம் என்பதால் தேர்தலை நடத்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான டத்தோ சாமிவேலு காலமானார்.
- இவர் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தார்.
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86), கோலாலம்பூரில் நேற்று காலமானார். டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், மறக்க முடியாத அத்தியாயமாக இருந்து வரும் டத்தோ எஸ்.சாமிவேலுவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் டத்தோ சாமிவேலு. கடந்த 1979ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துவந்தார்.
1963ல் இருந்து மலேசிய வானொலி மற்றும் மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார். மேலும், மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றிய அவர், ஒரு தமிழ்மொழி ஆர்வலராக விளங்கினார்.
- 97 வயதான அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
கோலாலம்பூர் :
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 97 வயதான அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது, 2018-ம் ஆண்டு தனது 92 வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கிற பெருமையை பெற்றார். எனினும் கூட்டணி குழப்பங்களால் 2020-ல் அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
- மலேசியாவில் இன்று இரவு 8 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மலேசியாவில் இன்று இரவு 8 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோலாலம்பூர்:
மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகள் மேற் கொள்ளப்பட்டன.
- சுகோய் போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம்.
குவான்டன்:
இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின.

இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளில் இரு விமானப்படைகளும் பங்கேற்பு.
- இருநாட்டு பாதுகாப்பை ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.
இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.
இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன.
உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.






