என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மறுபுறம், லெபனான் மற்றும் சிரியாவில் இருந்து ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. இந்த மோதல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

    லெபனான் மற்றும் சிரியாவை சேர்ந்த போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

    லெபனான் போராளிக் குழுவான ஹெஸ் பொல்லா இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியது.

    இந்தத் தாக்குதல்களில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஹெஸ் பொல்லா அறிவித்தார். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மோதலில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்ற நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர்.
    • தரைவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (வியாழக்கிழமை) 7-வது நாளாக நீடித்தது.

    ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே லெபனான் மற்றும் சிரியாவில் இருந்தும் தாக்குதல் தொடங்கி உள்ளது. மும்முனை தாக்குதல் நடந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு இஸ்ரேல் நாடு காசாவில் குண்டு வீச்சுக்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி சிதைந்து உள்ளது.

    இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரத்தை கடந்து உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காசா எல்லையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தங்கள் எல்லையில் ஹமாஸ் படையினர் ஊடுருவிய பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அங்கு தற்போது பீரங்கிகளையும் ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் குவித்து வருகிறது.

    விரைவில் அங்கிருந்து தரை வழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தரை வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இரு தரப்பிலும் சேதம் அதிகமாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    போர் விரிவடைந்துக் கொண்டே செல்வதால் ஹமாஸ் படையினர் ஆயுத தாக்குதலை கைவிடாமல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன.

    • பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலாக நடந்து வரும் போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான ராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை மீட்டுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமானநிலையத்தில் இறங்கியுள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்தது. இந்த ஆயுதங்கள் ஒருகுறிப்பிடத்தகுந்த தாக்குதல் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியானது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

    • காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்துவிட்டது.
    • இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

    இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கிறது. காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடி தேடி வேட்டையாடி வருகின்றனர்.

    காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.

    இந்நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள வீடியோவில்," பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாப்படுத்த முடியாது.

    மக்களை காக்க, தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள தாக்குதலுக்கு பதிலடி தர இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும்.

    தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உதவுவோம்" என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    • உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என அனைத்தையும் காசாவிற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் தடை.
    • மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

    காசாவில் 5வது நாளாக ஹமாஸ் படைகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதைதொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு- எதிர்க்கட்சி தலைவர் பென்னி காண்ட்ஸ் சுமார் 3 மணி நேரமாக ஆலோசனை. போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒற்றுமை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. இதன் எதிரொலியால், காசா இருளில் மூழ்கியது.

    உணவு, தண்ணீர், எரிபொருள், மின்சாரம் என அனைத்தையும் காசாவிற்கு கொண்டு செல்ல இஸ்ரேல் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

    மின்சாரம் இல்லாததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

    • எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார்.
    • நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். 5-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழியே தாக்குதல் நடத்த கூடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

    எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதலை தொடர்ந்து வருகிறோம் என தலைப்பிட்டு உள்ளார். இந்நிலையில், துருக்கியின் தேசிய கல்வி துறையின் துணை மந்திரி நஜிப் இல்மாஸ், நெதன்யாகுவின் டுவிட் பதிவை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில், ஒரு நாள், உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். நீங்களும் மரணம் அடைவீர்கள் என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    • இஸ்ரேலிய பாதுகாப்பு படை துல்லியமாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது
    • 2002 முதல் மொஹம்மத் டெய்ஃப் ஹமாஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வருகிறார்

    இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.

    போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.

    இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (Israeli Defence Force) தாக்குதல்கள் துல்லியமாக திட்டமிடப்பட்டு காசா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த இடங்கள், அவர்களின் ஆயுத கிடங்குகள், பயங்கரவாதிகளின் செயலாக்கங்களுக்கு திட்டம் தீட்டப்படும் இடங்கள், பீரங்கி தாக்குதல் கட்டுப்பாட்டு தளங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் ஃபர்கான் (Al-Furqan) பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் மொஹம்மத் டெய்ஃப் எனும் பயங்கரவாதியின் தந்தையின் இல்லமும் அடங்கும்.

    இத்தாக்குதலில் அவரது சகோதரர், தந்தை, குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆரோக்கிய குறைபாடு காரணமாக சக்கர நாற்காலியில் வலம் வரும் நபரான டெய்ஃப், 2002 முதல் ஹமாஸ் அமைப்பிற்கு பயங்கரவாத திட்டங்களை வகுத்து தருவதில் முன்னிலை தலைவராக உள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினரால் தேடப்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளில் முக்கிய நபரான டெய்ஃப் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

    • போரை தொடங்கியது நாங்கள் அல்ல, ஆனால் முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
    • நான்கு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

    நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.

    இந்த போர் நேரத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா எல்லையில் அமைந்துள்ளதால் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாக்கப்பட்டது
    • பொதுமக்கள் வீடுகளிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

    காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.

    கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.

    இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

    இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் ரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது
    • காசா பகுதியில் 900 பேர் உயிரிழந்துள்ளனர்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 4-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    • காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    • 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது.
    • 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 லட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

    இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது.

    இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என ராணுவம் அனுமதித்து உள்ளது.

    இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ×