என் மலர்
கனடா
- துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடா:
கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது.
இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் டொரண்டோவை சேர்ந்த சையத் மொஹமது அலி(வயது 26), அப்திஷாகுர் அப்தி தாஹிர்(36) ஆகிய 2 பேர் பலியானார்கள்.
6 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? இனப்பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர பிறர் வெளியேற வேண்டும்
- 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற உத்தரவு
கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியா. இது பெரும்பாலும் பெரிய, நீளமான நதிகள் மற்றும் அதிகளவில் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் பரந்த மலைத்தொடரை உள்ளடக்கிய பகுதி ஆகும்.
இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி, மளமளவென பரவ தொடங்கியது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திடீர் தீ விபத்து காரணமாக இந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 36 ஆயிரம் பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2 ஆயிரத்து 400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. இதே போல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார் மற்றும் விமானம் என அவசர அவசரமாக ஊரை காலி செய்து புறப்பட்டு சென்றனர்.
அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். எஞ்சியுள்ளவர்களில் உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியேற சொல்லி சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை 20 ஆயிரம் வீடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் மட்டுமே ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கணிக்க முடியாத வகையில் மாறி வரும் பருவநிலை, அதிக வெப்பம், இதைத் தொடர்ந்து காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
வான்வழி தீயணைப்பு படை தவிர பிற விமானங்களுக்கு, கெலோனா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி உள்ள வான்பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
- இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் தரவரிசையில் 3-ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார்.
இதில் சாம்சனோவா 1-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சாம்சனோவா, ஜெசிக்கா பெகுலாவுடன் மோதவுள்ளார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது.
- இதில் சின்னர், டி மினார் ஆகியோர் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயின் வீரர் போகினாவுடன் மோதினார். இதில் டி மினார் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தது.
- இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார்.
இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தது.
- முன்னணி வீராங்கனைகளான ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியாவின் டேரியா கசட்கினாவுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 5-7, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் டி மினார் 7-6 (9-7), 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுடன் மோதினார். இதில் டாமி பால் 6-3, 4-6, 6-3 என்ற கணக்கில் கார்லோசை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.
இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டி நடைபெற்றது.
- இதில் முன்னணி வீரர்களான மெத்வதேவ், அல்காரஸ் ஆகியோர் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் முசேட்டியுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுயுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 3-6, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
- இதில் முன்னணி வீரர்களான சிட்சிபாஸ், ஸ்வெரேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
மாண்ட்ரியல்:
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி முடிவடைய உள்ளது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 13-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயின் வீரர் புகினோ உடன் மோதினார். இதில் புகினோ 6-1, 6-2 என்ற கணக்கில் வென்று 3வத் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், டென்னிஸ் தரவ்ரிசையில் 4வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மான்பில்ஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ.
- இவரது மனைவி சோபி கிரிகோரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
டொரன்டோ:
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள், சோபியும் பிரதம மந்திரியும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டிரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






