search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india condemned"

    • கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
    • குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.

    கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 17 வயது சீக்கிய மாணவர் தாக்கப்பட்டுள்ளார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அவர், ரட்லேண்ட சாலை தெற்கு-ராப்பூர் சாலை கிழக்கு சந்திப்பில், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது இரண்டு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு முன்பு பஸ்சில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் பஸ்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய துணை தூதரகம் கூறும்போது, "சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்து உள்ளது.

    தூதரக அதிகாரிகளை துன்புறுத்தியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Indiacondemned #embassyofficials
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாரா ஆகியவற்றுக்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 21, 22-ந் தேதிகளில் செல்வது வழக்கம். 

    இந்த முறை சீக்கிய பக்தர்கள் சென்றபோது அவர்களை சந்திக்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சகம் முன்அனுமதி வழங்கிய பின்னரும் அவர்கள் தடுக்கப்பட்டனர்.

    இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகவும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய நேர்மையையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மதவிரோதத்தை தூண்டிவிடுதல், வெறுப்பு, மற்றும் பிரிவினைவாதிகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.  #Indiacondemned  #embassyofficials
    ×