என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pakistan embassy officials"

    • இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டார்.
    • இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும்.

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. 3 நாள் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை சமாதான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

    இதனிடைய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை அடுத்து 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அவர் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

    வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதற்காக, அவரை இந்திய அரசாங்கம் சட்டவிரோதமானவராக அறிவித்துள்ளது. அவர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    அவருக்கு எதிராக persona non grata உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பின் பல பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்பட்டனர்.

    தூதரக அதிகாரிகளை துன்புறுத்தியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Indiacondemned #embassyofficials
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாரா ஆகியவற்றுக்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 21, 22-ந் தேதிகளில் செல்வது வழக்கம். 

    இந்த முறை சீக்கிய பக்தர்கள் சென்றபோது அவர்களை சந்திக்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சகம் முன்அனுமதி வழங்கிய பின்னரும் அவர்கள் தடுக்கப்பட்டனர்.

    இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகவும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய நேர்மையையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மதவிரோதத்தை தூண்டிவிடுதல், வெறுப்பு, மற்றும் பிரிவினைவாதிகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.  #Indiacondemned  #embassyofficials
    ×