என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan Embassy"
- இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டார்.
- இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. 3 நாள் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை சமாதான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இதனிடைய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை அடுத்து 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அவர் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதற்காக, அவரை இந்திய அரசாங்கம் சட்டவிரோதமானவராக அறிவித்துள்ளது. அவர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிராக persona non grata உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பின் பல பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்பட்டனர்.
- பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.
- மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட 7 எம்.பி.க்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

சமீபத்தில் பதவி விலகிய வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழம் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எம்.பி.க்கள் கபில் சிபல், சசிதரூர், சமாஜ்வாடியை சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி, ஜியா உர் ரஹ்மான் பார்க், ராம்பூர் இக்ரா ஹசன், காஜிபூர் அப்சல் அன்சாரி ஆகிய 7 பேருக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.

இதுகுறித்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாகிஸ்தானுடன் 'நபக்' (தூய்மையற்ற) தொடர்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் மாம்பழங்கள் தனக்கு பிடிக்காது என்று சில காலத்திற்கு முன்பு ராகுல் காந்தி கூறினார்.
பாகிஸ்தான் தூதரகம் தற்போது ராகுல்காந்திக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளது. அவர் விரும்பும் மற்ற விஷயங்களை அவர் சொல்ல வேண்டும் என்றார்.

இதேபோல் பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் கூறியுள்ள குற்றச்சாட்டில், இதயம் இருக்கும் இடத்தில் இருந்து மாம்பழங்களை பெறுகிறார்கள். அவருக்கு (ராகுல்காந்தி) உத்தர பிரதேசத்தின் மாம்பழங்கள் பிடிக்காது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் மாம்பழங்களால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது என்றார்.
7 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தூதரகம் ஏன் மாம்பழம் அனுப்புகிறது என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்மால்வியா கேள்வி கேட்டுள்ளார்.
பா.ஜ.க. மந்திரி, எம்.பி.க்கள் குற்றச்சாட்டால் மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.

இதன் விளைவாக தங்கள் நாட்டின் விவகாரங்களில் அண்டைநாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாகாண கவர்னர் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜலாலாபாத் நகரில் உள்ள துணை தூதகரத்தை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜலாலாபாத் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்த தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanconsulate #Jalalabadconsulate






