என் மலர்
இந்தியா

Persona non grata: பாகிஸ்தான் தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு!
- இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டார்.
- இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. 3 நாள் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை சமாதான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இதனிடைய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக அவரை அடுத்து 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அவர் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டதற்காக, அவரை இந்திய அரசாங்கம் சட்டவிரோதமானவராக அறிவித்துள்ளது. அவர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிராக persona non grata உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த நேரத்திலும் தூதரக ஊழியர் ஒருவரை தங்க அனுமதியற்றவராக ஹோஸ்ட் நாடு அறிவிக்கும் செயல்முறை ஆகும். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பின் பல பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்பட்டனர்.






