என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசவை எதிர்கொள்கிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
- நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.
பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர வீரர் அல்காரஸ்-ஐ எதிர்த்து மோதும், இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எட்டாவது முறையாக அல்காரஸ்-ஐ எதிர்கொள்கிறார். மறுபுறம் அல்காரஸ் இளம் வயதில் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை பெற போட்டியிடுகிறார்.
விம்பில்டென், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்களில் அல்காரஸ் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மட்டும் அல்காரஸ் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாமல் இருக்கிறார்.
- கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
- முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
இந்த போட்டியில் கவூப் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 11-வது வரிசையில் உள்ள படோசா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கவூப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.
27 வயதான பவுலா படோசா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு இவர் காலிறுதி வரை முன்னேறி இருக்கிறார். அரையிறுதி சுற்றில் படோசா சபலெங்கா அல்லது பாவ்லிசென்கோவாவுடன் மோதுவார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பொர்னில் நடந்து வருகின்றன. தற்போது 4வது சுற்று போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஸ்வரேவ் இரண்டாவது செட்டை 2-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஒல்காவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வென்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-1 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக் நாட்டின் ஜிரி லெஹெகா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டனின் ஜாக் டிராபர் உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 7-5, 6-1 என முன்னிலை பெற்றார். அப்போது டிராபர் போட்டியில் இருந்து விலகியதால் அல்காரஸ் வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, உக்ரைனின் டயானா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சக நாடடு வீராங்கனை காலின்சை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், அமெரிக்காவின் மார்கஸ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4, 6-2 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே 6-7 (5-7), 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் மியோமிரை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ஜோடி, நுனோ போர்ஜஸ்- பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.
- போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் பாலாஜி- மெக்சிகனின் மிகுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலா ஜோடி போர்த்துகீசிய ஜோடியான நுனோ போர்ஜஸ் மற்றும் பிரான்சிஸ்கோ கப்ரால் உடன் மோதின.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் போர்த்துகீசிய ஜோடி 7-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார்.
- நவர்ரோ 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
5 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) இன்று காலை நடத்த 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த எம்மா ரடுகானுவை எதிர்கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4- வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி 10 நிமிட நேரம் நடந்தது.
மற்றொரு ஆட்டத்தில் 8-வது வரிசையில் இருக்கும் எம்மா நவர்ரோ (அமெரிக்கா) முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான ஓனஸ் ஜபேர் (துனிசியா) மோதினார்கள். இதில் நவர்ரோ 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 3 நிமிட நேரம் தேவைப்பட்டது.
இன்னொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள டாரியா கசட்சினா-கஜகஸ்தானை சேர்ந்த யுலியா புதின்சேவா மோதினார்கள். இதில் கசட்சினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று வெற்றி பெற்றார். அவர் 4-வது சுற்றில் எம்மா நவர்ரோவை சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் மிச்சேல் சென் (அமெரிக்கா) 6-3, 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட் கணக்கில் 19-வது வரிசையில் உள்ள கச்சனோவ்வை (ரஷியா) அதிர்ச்சிகரமாக தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் ஜேக்கப் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் 7-6 (7-0), 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் ராபர்டோவை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.






