என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
    • சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2 ஆவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 4-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-4, 6-0 என இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.

    மேலும், 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்ற ரஷிய வீராங்கனை ஆண்ட்ரீவா காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஷ்விடெக் உடன் மோதுகிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிச் மற்றும் மேட்டியோ பெரெட்டினி மோதினர்.
    • இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார்.

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார். இதனால் முதல் சுற்றிலேயே செர்பியா வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.

    ஜோகோவிச் முதல் சுற்றில் 4-7, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரரான கரன் கச்சனோவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-5, 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 6-3, 6-4 என கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-2, 6-1 என பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், குரோசியாவின் மரின் கிளிக் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா 6-4, 6-4 என பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் டேனியல் மெரிடா-கத்தாரின் முபாரக் அல்-ஹராசி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் பிரான்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரான்சின் பெஞ்சமின் பொன்சி-ஹ்யூஜஸ் ஹெர்பர்ட் ஜோடி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி-போலந்தின் ஜேன் ஜிலன்ஸ்கி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் பிரான்ஸ் வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 7-6 (7-4), 6-4 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், செர்பிய வீரர் மெத்ஜெடோவிச் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதுகிறார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • கடந்த ஆண்டு காயத்தின்போது உதவியாளர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர்.
    • WADA- வின் 3 மாத தடையை ஏற்றுக்கொள்ள சின்னர் ஒப்புக் கொண்டதால் தடை அமலுக்கு வந்துள்ளது.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இத்தாலியின் ஜெனிக் சின்னர் இருந்து வருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார்.

    இவருக்கு கடந்த மாதம் கைவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் உடனடியாக குணமடைய அவருக்கு உதவியாளர்கள் க்ளொஸ்டெபோல் (Clostebol) என்ற ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர். சின்னருக்கு இது தடைசெய்யப்பட்டது என்பது தெரியாமல் உட்கொண்டுள்ளார்.

    உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) கடந்த வருடம் மார்ச் மாதம் பரிசோதனை மேற்கொண்டபோது க்ளொஸ்டெபோல் பயன்படுத்தியது தெரியவந்தது. இரண்டு முறை சோதனை மேற்கொண்டபோது பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.

    இதனால் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சின்னருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு அமைப்பில் (International Tennis Integrity Agency) மேல்முறையீடு செய்தார். அப்போது தற்செயலாக சின்னருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தது.

    இதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் WADA மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் WADA-வின் தண்டனையை ஏற்றுக்கொள்ள சின்னர் முடிவு செய்தார். இதனால் டென்னிஸ் போட்டியில் கடந்த 9-ந்தேதியில் இருந்து மே 4-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் சின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.

    சின்னர் தடையை ஏற்றுக்கொண்டதால் WADA விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ வாங்க இருக்கிறது.

    இந்த தடைக்காலம் சின்னரின் பிரெஞ்ச் ஓபனை பாதிக்கிறது. இவரது தடைக்காமல் மே 4-ந்தேதி முடிவடையும் நிலையில், பிரெஞ்ச் ஓபன் மே 25-ந்தேதி தொடங்குகிறது.

    ×