என் மலர்
டென்னிஸ்
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த முதல் அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே ஹோல்ஜர் ரூனே அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டை ரூனே 6-4 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
- அரையிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை (6-0, 6-1) என்ற செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.
- 24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸை சபலென்கா (6-0, 6-1) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான இகா ஸ்வியாடெக் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் 17 வயது மிரா ஆன்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வியாடெக் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றார்.
இதனால் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.
24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக மிர்ரா ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.
- கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- விம்பிள்டனில் 7 முறை, அமெரிக்க ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றார்.
பெல்கிரேட்:
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2003-ம் ஆண்டு 15 வயதில் தொழில்முறை வீரராக மாறியதிலிருந்து டென்னிசில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், விம்பிள்டன் தொடரில் 7 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
ஜோகோவிச் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதன்பின் கடந்த ஆண்டு முதல் தான் பங்கேற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளால் தடுமாறு வருகிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாண்டோ-கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதியில் தோல்வி
இத்தாலி ஓபன் தொடரின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி
ஜெனீவா ஓபன் தொடரின் அரையிறுதியில் தோல்வி
பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் காயம் காரணமாக பாதியில் விலகல்
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி
அமெரிக்க ஓபனில் 3வது சுற்றில் போராடி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வி
பிரிஸ்பேன் ஓபன் தொடரின் காலிறுதியில் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் காயம் காரணமாக பாதியில் இருந்து விலகல்.
கத்தார் ஓபனில் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
சமீபத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இப்படி, கடந்த ஆண்டில் நடைபெற்ற முன்னணி தொடர்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஜோகோவிச் விரைவில் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- முதல் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.
- 2-வது அரையிறுதியில் சபலென்கா மற்றும் கீஸ் மோதுகின்றனர்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து இன்று 3 காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. இதன் ஒரு போட்டியில் இதில் அரீனா சபலென்கா (பெலருசியா) சோனய் கர்தல் (பிரிட்டிஷ்) மோதினர். இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீராங்கனையான பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு கீஸ் தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) மற்றும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)ஆகியோர் மோதினர். இதில் உக்ரைன் வீராங்கனை எலினா 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முதல் அரையிறுதியில் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் இகா ஸ்வியாடெக்கும் 2-வது அரையிறுதியில் சபலென்கா மற்றும் கீஸ் மோதுகின்றனர்.
- 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெடினா) மோதினர். முதல் செட்டை அல்காரஸ் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் அல்காரஸ் 7-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜாக் அலெக்சாண்டர் டிராப்பர் (பிரிட்டிஷ்) பெஞ்சமின் டாட் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இதில் டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் மெத்வதேவ் 6-4 என வென்றார். 2வது செட்டை ஆர்தர் பில்ஸ் 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 7-6 (9-7) வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூரை 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ஹோல்ஜர் ரூனே, மெத்வதேவைச் சந்திக்கிறார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சீனாவின் குய்ன்வென் ஜெங் உடன் மோதினார்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் மிர்ரா அலெக்சாண்ட்ரோ, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரோ 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டி இன்று நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக்-பிரேசில் பெர்னாண்டோ ராம்போலி ஜோடி உடன் மோதியது.
இதில் ஜான் பாட்ரிக்-ராம்போலி ஜோடி முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை யூகி பாம்ப்ரி 6-3 என வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 8-10 என இழந்து காலிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது.
- சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அரீனா சபலென்கா (பெலருசியா) சோனய் கர்தல் (பிரிட்டிஷ்) ஆகியோர் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் மற்றும் குரோஷிய வீராங்கனை டோனா வெக்கிச் உடன் மோதினர்.
பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை டோனா வெற்றி பெற்றார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் கீஸ் 9-7 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 6-3 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இதனால் 6-4, 9-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா டிமிட்ரிவ்னா சாம்சோனோவா இத்தாலி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
- அல்காரஸ் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-3 என கோகோ காப் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிண்டா 6-3, 6-4 என அடுத்த இரு செட்களை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.






