என் மலர்
கால்பந்து
- ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை.
- கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.
சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார்.
இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத் தாண்டியது.

களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ பணம் சம்பாதித்து வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்ரான் ஜேம்ஸ்
- விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் தேசிய அணியில் விளையாடினார்.
- தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ் 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தார்.
உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார்.
செவ்வாயன்று நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் 15 வயதுக்குட்பட்ட பிரிவு தேசிய அணியில் இடம்பெற்ற சாண்டோஸ் அறிமுகமானார். இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் அணிக்காக தனது மகன் அறிமுகமானதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " போர்ச்சுகல் அணிக்காக நீ அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!" என்று ரொனால்டோ பதிவிட்டார்.
இந்த கால்பந்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் சாண்டோஸ் உடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அவரது தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
- ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.
2024-25 லா லிகா லீக்ககில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டை 4-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் அணியில் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். ஆனால் அது அந்த அணி வெற்றி பெற போதுமானதாக இல்லை.
பார்சிலோனா அணிக்காக, ரஃபின்ஹா இரண்டு கோல்களையும், லாமின் ய்மல் மற்றும் எரிக் கார்சியா தலா ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த வெற்றியின் மூலம், லீக்கில் இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பார்சிலோனா அணி, புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை விட ஏழு புள்ளிகள் முன்னேறியுள்ளது.
- 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
- அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.
பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.
- ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்தியா டி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவுடன் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இடம் பிடித்துள்ளன.
20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வரும் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். அதன்அடிப்படையில் தகுதிச் சுற்று அடிப்படையில் 11 அணிகள் தகுதி பெறும்.
இந்த நிலையில் தகுதிச் சுற்றுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா டி பிரிவியில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகள் இடம் பிடித்துள்ளன.
டி பிரிவு தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மியான்மரில் நடைபெறுகிறது. டி பிரிவில் உள்ள ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
மொத்தம் 33 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் மட்டும் ஐந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. மற்ற பிரிவுகளில் 7 அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிகளும், அதன்பின் சிறந்த 3 அணிகளும் என 11 அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் தாய்லாந்து என 12 அணிகள் பெண்கள் ஆசிய கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெறும்.
பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாட அனுமதி பெறும்.
- 2 லெக்கிலும் சேர்த்து ஆர்சனல் ரியல் மாட்ரிட்டை 5-1 என பந்தாடியது.
- பார்சிலோனா 5-3 என டார்ட்மன்-ஐ வீழ்த்தியது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் 2ஆவது லெக் ஆட்டங்கள் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடைபெற்றன.
ஒரு காலிறுதியின் 2ஆவது லெக்கில் ரியல் மாட்ரிட்- ஆர்சனல் அணிகள் மோதின. முதல் லெக்கில் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் அணி 4 கோல் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரியல் மாட்ரிட் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சனல் அபாரமாக விளையாடி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் இரண்டு லெக்கிலும் சேர்த்து 5-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி 2ஆவது லெக்கில் இன்டர் மிலான்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என சமநிலை பெற்றது. முதல் லெக்கில் இன்டர் மிலான் 2-1 என வெற்றி பெற்றதால் மொத்தமாக 4-3 என வெற்றி பெற்றது.
4ஆவது காலிறுதியில் ஆஸ்டன் வில்லா- பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா 3-2 என வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் முதல் லெக்கில் பிஎஸ்ஜி 3-1 என வெற்றி பெற்றிருந்ததால் மொத்தமாக 5-4 என பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.

4ஆவது காலிறுதியில் பார்சிலோனா- டார்ட்மன்ட் அணிகள் மோதின. இதில் டார்ட்மன்ட் 3-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றிருந்ததால் பார்சிலோனா 5-3 என வெற்றி பெற்றது.
மே 1ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் முதல் லெக்கில் பிஎஸ்ஜி- ஆர்சனல், பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. 2ஆவது லெக் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தான் கன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
- இந்த சீசனில் கோகுலம் கேரளா அணியிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்திய பெண்கள் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஒடிசா எஃப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாம்பியன் படத்தை உறுதி செய்துள்ளது.
67ஆவது நிமிடத்தில் சவுமியா குகுலோத் கோல் அடித்தார். இந்த கோல் வெற்றி கோலாகவும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்வதற்குமான கோலாகவும் அமைந்தது.
ஆண்களுக்கான கால்பந்து தொடர் இந்தியன் லீக்காக (I-League) நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக தேசிய கால்பந்து லீக்காக நடைபெற்றது. அப்போது 2003-04-ல் ஈஸ்ட் பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2003-ல் ஏசியன் கிளப் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அதற்குப் பிறகு தற்போதுதான் 21 வருடத்திற்குப் பிறகு ஈஸ்ட் பெங்கால் அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணி கோகுலம் கேரளா அணியைத் தவிர மற்ற அனைத்தும் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் மட்டும் விளையாட வேண்டியுள்ளது. இதில் தோற்றாலும், டிரா செய்தாலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றும்.
- 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
- 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.
எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.
முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.
முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.
சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.
இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.
முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.
- ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
- மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.
- 2015ஆம் ஆண்டு 71 மில்லியன் டாலருக்கு மான்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது.
- 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் பெல்ஜியத்தை சேர்ந்த கெவின் டி ப்ரூயின் (வயது 33), அந்த அணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
குட் பை சொல்வதற்கான நேரம், சாம்பியன் அணியுடன் இறுதி மாதங்களில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இதை சொல்வது எளிதல்ல. ஆனால் கால்பந்து வீரர்களான எங்களுக்கு, இறுதியாக ஒரு நாள் வரும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த நாள் இங்கே எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நகரம். இந்த கிளப். இந்த மக்கள்... எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை! என்னவென்று யூகிக்கவும் - நாங்கள் எல்லாவற்றையும் வென்றோம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், விடைபெற வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரூயின் 2015ஆம் ஆண்டு வோல்ஸ்பர்க் அணியில் இருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு 71 மில்லியன் டாலருக்கு டிரான்ஸ்பர் ஆனார். 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
பிரீமியர் லீக்கில் 280 போட்டிகளில் விளையாடி 118 கோல்கள் அடிப்பதற்கு துணை புரிந்துள்ளார். மொத்தமாக சிட்டி அணிக்காக 413 போட்டிகளில் விளையாடியுள்ளார். 106 கோல் அடித்துள்ளார். இரண்டு முறை இங்கிலாந்தின் PFA வீரர் விருதை வென்றுள்ளார்.
வேறு அணிக்கு செல்வது குறித்து ப்ரூயின் இன்னும் முடிவு செய்யவில்லை.
- இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
- பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.
சென்னை:
பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






