என் மலர்
கால்பந்து
- நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
- உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
பிரேசிலியா:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.
நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
- ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.
மும்பை:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.
மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர்.
- ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்து இருந்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
- 2026 உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை நடத்துகின்றன.
சாபாவ்லோ:
உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.
வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில், பொலிவியா அணிகள் மோதின. இதில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதில் நட்சத்திர வீரர் நெய்மர் 61 மற்றும் 93-வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் பீலேயின் சாதனையை நெய்மர் முறியடித்தார்.
மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளில் 77 கோல்கள் அடித்து இருந்தார். 1957 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் 92 போட்டிகளில் இந்த கோல்களை அடித்தார்.
அவரது சாதனையை நெய்மர் ஏற்கனவே சமன் செய்தார். தற்போது அடித்த 2 கோல்கள் மூலம் பீலேயின் சாதனையை அவர் முறியடித்தார்.
31 வயதான நெய்மர் 125 சர்வதேச போட்டியில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்துள்ள பிரேசில் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களில் நெய்மர் 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2010 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 123 கோல் அடித்து (200 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அமெரிக்கா) 103 கோல்களுடன் (175 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார்.
- வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார்.
- 26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான வயலட்டா மிதுல் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது வயலட்டா மிதுல் தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4-ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
26 வயதேயான வயலட்டா மிதுல் ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 முறை இந்த விருதை ரொனால்டோ பெற்றுள்ளார்.
- ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார்.
வருடம் வருடம் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ஓர் விருதை பிபா வழங்கி வருகிறது. 1956 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்குவதில் 2007-ம் ஆண்டு முதல் மெஸ்சி மற்றும் ரொனால்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் 60 (30 ஆண் மற்றும் பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல உதவுவதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர்.
இதில் போர்ச்சுகல் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். அதனை தொடர்ந்து 2013, 2014, 2016, 2017 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவர் பதவி விலகியதாக நேற்று செய்திகள் பரவின.
- மன்னிப்பு கேட்ட போதிலும் பதவி விலக மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார்.
மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது.
லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து அவர் பதவி விலகியதாக செய்திகள் வந்தன. இதனையடுத்து அந்த செய்தி பொய் எனவும் ராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி தெரிவித்துள்ளது.
- நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
- இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
மகளிர் உலக கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறும்போது, நான் கண்டிப்பாக தவறு செய்து விட்டேன். இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேலும் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் பரவின. இதற்கு அவர் நான் ராஜினாமா செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
- நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
- உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை.
சிட்னி:
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சிட்னியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்ததுடன் உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இது சர்ச்சையாக வெடித்தது. ருபியாலெசை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை மந்திரி ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கண்டித்தனர்.
இதையடுத்து சில மணி நேரத்திற்கு பிறகு ஹெர்மோசா சார்பில் ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டது. அதில், 'உலகக் கோப்பையை வென்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென இயல்பாக நடந்த விஷயம் அது. எனக்கும் சங்க தலைவர் ருபியாலெசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வீராங்கனைகளிடம் எப்போதும் அவர் கண்ணியமுடன் நடந்து கொள்வார்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முத்த விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் நேற்று மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்' என்றார்.
- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
- தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
- இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது.
சிட்னி:
32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதியது. 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியாமல் திணறினர். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லயனல் மெஸ்ஸி சமீபத்தில்தான் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்
- இறுதி ஆட்டம் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்காவில் நடைபெற்றது
அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.
இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.
உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.
எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.
பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.






