என் மலர்
கால்பந்து
- லயனல் மெஸ்ஸி சமீபத்தில்தான் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்
- இறுதி ஆட்டம் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்காவில் நடைபெற்றது
அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.
இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.
உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.
எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.
பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
- உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என எதிர்பார்க்கப்படுகிறது.
- இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
சிட்னி:
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. இங்கிலாந்து லீக் சுற்றில் ஹைதி (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். 2015-ல் அரை இறுதியில் தோற்று 3-வது இடத்தைப் பிடித்தது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
6-வது வரிசையில் இருக்கும் ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்று இருந்தது. லீக் ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கணக்கிலும், ஜாம்பியாவை 5-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 5-1 என்ற கணக்கிலும், கால்இறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் சுவீடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கால் இறுதி வரையே நுழைந்து இருந்தது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
- 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது. 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.
கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
- தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
சிட்னி:
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை (20-ந் தேதி) நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது ஸ்பெயினா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
இங்கிலாந்து லீக் சுற்றில் ஹைதி (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். 2015-ல் அரை இறுதியில் தோற்று 3-வது இடத்தை பிடித்தது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
6-வது வரிசையில் இருக்கும் ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்று இருந்தது. லீக் ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கணக்கிலும், ஜாம்பியாவை 5-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது.
2-வது சுற்றில் சுவிட்சர் லாந்தை 5-1 என்ற கணக்கிலும், கால்இறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் சுவீடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கால் இறுதி வரையே நுழைந்து இருந்தது. தற்போது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
- சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் நெய்மாரை 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- அல்-நசர் என்ற சவுதி கிளப் அணியில் போர்ச்சுகலின் ரொனால்டோ விளையாடி வருகிறார்.
ரியாத்:
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.
இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது. அவரை விற்க பி.எஸ்.ஜி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் அணியில் இணைய நெய்மார் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ.908 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.
ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலிறுதியில் பிரான்சை 7-6 என பெனால்டி ஷூட்அவுட்டில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது
- கொலம்பியாவை 2-1 என இங்கிலாந்து வீழ்த்தியது
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் போட்டி நேரத்தில் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது.
இன்றும் நாளையும் ஓய்வு நாள். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15-ந்தேதி) முதல் அரையிறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் ஸ்பெயின்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 16-ந்தேதி புதன்கிழைமை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டி சனிக்கிழமையும் (19-ந்தேதி), இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (20-ந்தேதி) நடைபெற இருக்கிறது.
- ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார்.
- 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
30 வயதான ஹரி கேன் கடந்த 19 ஆண்டுகளாக வடக்கு லண்டன் அணிக்காக விளையாடி வந்தார். 100 மில்லியன் பவுண்டுகளுக்கு குறைவான எந்த ஒப்பந்தமும் ஏற்க முடியாது என டோட்டன்ஹாம் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 103 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்காக களமிறங்க இருப்பதால், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொள்ள ஹரி கேன் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
- பெனால்டில் வாய்ப்பு மூலம் சுவீடனுக்கு ஒரு கோல் கிடைத்தது
- 87-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், வெற்றிக்கான வழி கிடைக்கவில்லை
உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து தொடரில் 2-வது காலிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி இன்று மதியம் நடைபெற்றது. இதில் சுவீடன்- ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை அமண்டானா இலெஸ்டெட் கோல்அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் சுவீடன் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சுவீடனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி பிலிப்பா ஏஞ்சல்டால் கோல் அடித்தார்.
பின்னர் ஜப்பான் வீராங்கனை ஹோனோகா ஹயாஷி 87-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியாததால் சுவீடன் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜப்பான் அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், சுவீடன் அணிக்கு 3 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. சுவீடன் 6 முறையும், ஜப்பான் 3 முறையும் இலக்கை நோக்கி அடித்தனர்.
- ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா 1-1 என கோல் அடித்திருந்தது
- கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்து வெற்றி
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு அணி வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்பெயின் வீராங்கனைகள் இலக்கை நோக்கி பந்து கடத்தி சென்றனர். இருந்தாலும் முதல் பாதி நேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் மரியானோ கால்டென்டே கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
பிறகு 90 நிமிடம் வரை நெதர்லாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்படும். அந்த நேரத்தில் (91-வது நிமிடம்) நெதர்லாந்து வீராங்கனை ஸ்டெபானி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. தலா 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை சல்மா செலிஸ்டெ பராலுயெலோ அயுங்கோனா கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை நெதர்லாந்து வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை.
எனவே, ஸ்பெயின் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு 8 முறையும், நெதர்லாந்து அணிக்கு 2 முறையும கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
நெதர்லாந்து வீராங்கனைகள் இரண்டு முறை ஆஃப்சைடு, ஸ்பெயின் வீராங்கனைகள் ஆஃப்சைடு செய்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இலக்கை நோக்கி ஸ்பெயின் 8 முறையும், நெதர்லாந்து 4 முறையில் பந்தை அடித்தன. பந்து 62 சதவீதம் ஸ்பெயின் வசமே இருந்தது.
- 11-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன.
- 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
வெலிங்டன்:
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டகள் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய அணி கள் வெளியேற்றப்பட்டன.
2-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவில் ஸ்பெயின், ஜப்பான், நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால் இறுதி ஆட்டங்கள் 11-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் போட்டிகளில் ஸ்பெயின்-நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் அணிகள் மோதுகின்றன. 12-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
அரை இறுதி போட்டிகள் 15 மற்றும் 16-ந்தேதிகளிலும், இறுதிப் போட்டி 20-ந்தேதி யும் நடக்கிறது.
- 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை
- 12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன.
தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று கடைசி இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் கொலம்பியா- ஜமைக்கா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 1-0 என ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ்- மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 4-0 என மொரோக்கோவை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறின.
காலிறுதி ஆட்டங்கள் வருகிற 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றன. 11-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நெதர்லாந்து, ஜப்பான்- சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
12-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து- கொலம்பியா, ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது.
- கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை விழுங்கியது.
கடுமையான வெப்பம் காரணமாக ஆற்றில் நீராட சென்ற கால்பந்து வீரரை முதலை ஒன்று விழுங்கிவிட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவை சேர்ந்தவர் 29 வயதான இயேசு ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் என்ற கால்பந்து வீரர். தமது ரசிகர்களால் சுச்சோ என அறியப்படும் இவர், துரதிர்ஷ்டவசமாக முதலைக்கு இரையாகியுள்ளார்.
அந்த முதலையை துரத்திச் சென்று உள்ளூர் மக்களே துப்பாக்கியால் சுட்டு, கால்பந்து வீரரின் சடலத்தை மீட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அதிகாரிகளே துணிச்சலுடன் நடவடிக்கை முன்னெடுத்து, சடலத்தை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இறுதிச்சடங்குகளை முன்னெடுக்க, பொதுமக்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






