என் மலர்
விளையாட்டு
- உடல் எடை கூடி இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
- தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்தது.
இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். "அம்மா, மல்யுத்தம் எனக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கனவு எனது நம்பிக்கை அனைத்தும் உடைந்துவிட்டது. இனியும் என்னிடம் வலிமை இல்லை. குட்பை ரெஸ்ட்லிங் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மன்னித்து விடுங்கள்," என்று வினேஷ் போகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
- இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர்.
அப்போது, "இது விளையாட்டின் ஒரு பகுதி" என்று இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய பயிற்சியாளர்கள் கூறியதாவது:-
தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தனர். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவள் தைரியமாக இருந்தாள்.
அவர் எங்களிடம்," நாங்கள் பதக்கத்தைத் தவறவிட்டது கடினமான துரதிர்ஷ்டம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி" என்று கூறினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு போதும் உங்களால் மனநிறைவு கொள்ள முடியாது.
- சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
கொழும்பு:
இந்திய அணியை விடவும் இலங்கை அணி சிறந்த கிரிக்கெட் விளையாடியதாக கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியால் கவலைப்பட தேவையில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, ஸ்பின்னர்களை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கான திட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்த தொடரில் ஸ்பின்னர்களுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிரமத்தை சந்தித்தார்கள் என்று தோன்றவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் தங்களது ஆட்டத்திட்டங்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இந்தியாவுக்காக விளையாடும்போது எப்போதுமே மன நிறைவு அடையாது. அதிலும் கேப்டனாக அதற்கு வாய்ப்பே இல்லை.
சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும். எங்களை விட இந்த தொடரில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் சூழலுக்கு ஏற்றவாறு காம்பினேஷனை பயன்படுத்தினோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும், வாய்ப்பு மறுக்கப்படும் இருந்தது. இருந்தாலும் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.
இந்த தொடரின் மூலம் சில விசயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விடாது. இதுபோன்ற தோல்விகள் அவ்வப்போது வரும் ஆனால் அதிலிருந்து நாம் எப்படி கம்பேக் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- ஒரு கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து கோகைன் போதைப்பொருள் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு) கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில வைத்திருந்தார். புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த விற்பனையாளர் (வயது 17) கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட டாம் கிரேக், புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.
- இந்தியாவுக்கு எதிராக இலங்கை தொடரை கைப்பற்றியது.
- இந்த போட்டியில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோரது அரைசதங்கள் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 35 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்சரை பறக்கவிட்டதன் மூலம் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயில் சாதனையை தற்போது ரோகித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார்.
இதுவரை 265 ஒருநாள் போட்டிகளில் 257 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 331 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 301 போட்டிகளில், 294 இன்னிங்ஸ்களில் 331 சிக்சர்களை விளாசியுள்ளார். மேலும் இப்பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் விரர் ஷாஹித் அஃப்ரிடி 351 சிக்சர்களுடன் முதல் இடத்த்ல் நீடித்து வருகிறார்.
- இந்திய அணி 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கதில் இருந்தே அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஷ்ரேயாஸ் அய்யர் 8, அக்ஷர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக விராட் கோலி அவுட் என தெரிந்தும் தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்தார். இவரை போன்று ஷ்ரேயாஸ் அய்யர் அவுட் என தெரிந்தும் ரிவ்யூ எடுத்து வெளியேறினர்.
இவர்களையெல்லாம் தவிர ரியான் பராக் அவுட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டெம்புக்கு வருகிற பந்தை பேட்டை தூக்கி வைத்து கொண்டு பந்தை விட்டுவிட்டார். இதனால் பந்து ஸ்டெம்பை தாக்கியது. பேட்டை வைத்து தட்டாமல் ஸ்டெம்புக்கு போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தது என்னடா பேட்டிங் பன்ற என்பது போல இருந்தது.
இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக விளையாடிய சுந்தர் 25 பந்தில் 30 ரன்களுடன் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களில் அடங்கியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணிக்கு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
- பெண்கள், கலைஞர்கள் என நம் அனைவருக்கும் இது ஒரு பாடம்.
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது.
இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக இருக்கும் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து பாஜக எம்பி ஹேம மாலினி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது விசித்திரமாக இருக்கிறது. எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். பெண்கள், கலைஞர்கள் என நம் அனைவருக்கும் இது ஒரு பாடம்.
100 கிராம் எடை கூட பெரிய விஷயமாக இருக்கும். அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் 100 கிராம் விரைவில் குறைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என ஹேம மாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
- புள்ளிகள் ஏதும் எடுக்காமல் டெக்னிக்கல் முறையில் தோல்வியை தழுவினார்.
- வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இன்று மல்யுத்தத்தில் இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் துருக்கி வீராங்கனை ஜெய்னெப் யெட்கில்-ஐ எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அன்திம் 0-10 என டெக்னிக்கல் சுப்ரியாரிட்டி அடிப்படையில் தோல்வியை தழுவினார்.
இதன்மூலம் இன்றைய மல்யுத்த போட்டி இந்தியாவுக்கு ஏமாற்றம் அடைவதாக இருந்தது. மற்றொரு வீராங்கனையான வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இன்று இரவு இறுதிப் போட்டியில் மோத இருந்தார். ஆனால் 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் மல்யுத்தம் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது.
- இலங்கை அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் குவித்தார்.
- இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - பெர்னாண்டோ களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 10, சதீரா 0, ஜனித் லியனகே 8, துனித் வெல்லலகே 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் பொறுப்புடன் விளையாடிய குசல் மெண்டீஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- எடை பரிசோதனையில் வினேஷ் போகத் 100 கிராம் அளவு எடை அதிகமாக இருந்துள்ளார்.
- எடையை குறைப்பதற்கு தலை முடி வெட்டப்பட்டதாகவும், ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
அவர் இன்று இறுதி போட்டியில் மோதயிருந்த நிலையில் 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டத்தற்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். மல்யுத்த போட்டியின் முதல் நாள் காலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் எடை பரிசோதனை நடத்தப்படும்.
2-வது நாள் காலையில் எடை பரிசோதனை நடத்தப்படும். எடை பரிசோதனையின் போது singlet வகை இறுக்கமான ஆடையை தான் அணிந்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் போட்டியில் பங்கேற்க முடியாது. நகம் உள்ளிட்டவை நீளமாக வைத்திருக்க கூடாது.
அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. எடையைக் குறைக்க உறங்காமல் இரவு முழுவதும் வினேஷ் போகத் ஸ்கிப்பிங் உள்ளிட்ட work out மேற்கொண்டு உள்ளார். உணவையும் தவிர்த்துள்ளார். ஆனால் எடை பரிசோதனையில் வினேஷ் போகத் 100 கிராம் அளவு அதிக எடை இருந்து இருக்கிறார்.
இந்திய ஒலிம்பிக் கமிட்டி வினேஸின் எடையைக் குறைக்க அவகாசம் கேட்டதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. எடையை குறைப்பதற்கு வினேஷ் போகத் தலை முடி வெட்டப்பட்டதாகவும், உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வினேஷ் போகத் எடையை 50 கிலோவாக குறைக்க முடியாமல் போயுள்ளது.
- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
- வினேஷ் போகத்த்தை சந்தித்து பி.டி. உஷா பேசினார்.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் வில்லேஜ் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள போகத்த்தை சந்தித்து பேசினேன். இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய அரசாங்கமும் அவளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். நாங்கள் வினேஷ் போகத்திற்கு அனைத்து மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்குகிறோம்.
வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முறையீடு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
- முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
- 2-வது மேட்சில் மணிகா பத்ரா 1-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.
முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார்.
3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார்.
4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.
தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.






