வினேஷ் போகத் தகுதி நீக்கம்: வீடியோ வெளியிட்டு பி.டி. உஷா விளக்கம்

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வினேஷ் போகத்த்தை சந்தித்து பி.டி. உஷா பேசினார்.
Vinesh Phogat pt usha
Published on

இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் வில்லேஜ் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள போகத்த்தை சந்தித்து பேசினேன். இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய அரசாங்கமும் அவளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். நாங்கள் வினேஷ் போகத்திற்கு அனைத்து மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்குகிறோம்.

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முறையீடு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com