என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்ச்சை எழுந்த காரணத்தால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியுள்ளது.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 லீக்கை நடத்தி வருகிறது. 2022 வரை சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. இதனால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைக்கும்.

    லடாக் மோதலுக்குப் பிறகு சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ரசிகர்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய  அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
    இங்கிலாந்து அணி கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் தொடரில் இதை மாற்ற விரும்புகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடந்த மாதம் 8-ந்தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கின. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்து சுமார் ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் வலுவானது. அங்குள்ள சீதோஷ்ணநிலை பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் அந்த அணியை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்ல. இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வென்றால் மிகச்சிறப்பானதாக பார்க்கப்படும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டை இழந்ததாலும் கடைசி இரண்டு டெஸ்ட போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

    இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ளனர். ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜோ டென்லி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தால் அந்த அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். இதனால் பந்து வீச்சு குறித்து அந்த அணி கவலைப்படாது.

    ஆனால் கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை இங்கிலாந்து தோற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் இது நிகழ்ந்தது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்.

    பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ளது. அந்த நம்பிக்கையில் களம் இறங்கும். பந்து வீச்சில் முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர். 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும்.
    மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும்  டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு முறை பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றிருந்தபோது இரண்டு முறையும் தொடரையும் டிரா செய்திருந்தது.

    இந்நிலையில் இந்தத் தொடரையும் டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டி என்று வரும்போது இங்கிலாந்து சூழ்நிலை மிகவும் கடினமானது. பாகிஸ்தான் அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய என்று நான் நினைக்கிறேன். டிரா வெற்றிக்கு சமமானது. தற்போதுள்ள அணி நிர்வாகம் அணிக்கு மிகப்பெரிய பலம். செசனுக்கு செசன் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என்ற உறுதி எனக்குள்ளது’’ என்றார்.

    மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் யூனிஸ் கான் (பேட்டிங் பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (பந்து வீச்சு பயிற்சியாளர்), முஷ்டாக் அகமது ஆகியோர் அணியுடன் உள்ளனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ தனது மகளின் 16-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் வெயின் பிராவோ. வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் ஐபிஎல் லீ்க்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல பாடல்களை உருவாக்கியுள்ளார். சாம்பியன்ஸ் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. சமீபத்தில் டோனியின் பிறந்த நாளையொட்டி ஒரு பாடலை உருவாக்கியிருந்தார்.

    இந்நிலையில் அவரது மகள் வெய்னிஸின் 16-வது பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழாவில் வெய்னிஸ் தோழிகள் கலந்து கொண்டனர். பிறந்த கொண்டாட்டத்தின்போது பிராவோ சாம்பியன்ஸ் பாடலைப்பாடி அசத்தினார். அதற்கு அங்கிருந்த அனைவரும் உற்சாகமக ஆட்டம் போட்டனர்.

    இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், அதில் வெய்னிஸ் 16 வயது தாண்டுகிறார். ஒரு சாம்பியன் தருணத்திற்கு அழைப்பு விடுக்கிறது. வெய்னிஸ் எதிர்நோக்கும் இனிமையாக விசயங்களுக்கு’’ என பதிவிட்டுள்ளது.
    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், பயிற்சியாளர் அருண் லால் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக மற்ற நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள், மாத்திரிகைள் எடுத்துக் கொண்டு வருபவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அருண் லால் உள்ளார். 65 வயதாகும் இவர் புற்றுநோயை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர். தற்போது பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைப்படி அவரால் பயிற்சியாளராக செயல்பட முடியாது.

    இதுகுறித்து அருண் லால் கூறுகையில் ‘‘பிரதமருக்கு 69 வயதாகிறது. தற்போதைய நேரத்தில் அவர் நாட்டை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை பதவி விலக சொல்கிறீர்களா? ஒரு நபராக நான் பெங்கால் அணியின் பயிற்சியாளராக இருப்பேனா அல்லது இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனல், என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்வேன்.

    எனக்கு வயது 65. அதனால் இன்னும் 30 வருடத்திற்கு அறைக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்று நடக்கக் கூடாது.

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நான் மேற்கொள்வேன். தேவையில்லாமல் முட்டாள்தனமாக எந்த செயல்களும் நடக்காது. நான் 60 வயதை தாண்டியதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளமாட்டேன். வைரசுக்கு 59 வயதா? 60 வயதா? என்று தெரியாது.

    நான் மிகவும் கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் இருக்கிறேன். உண்மையிலேயே இதுபோன்று கட்டுக்கோப்பாக நான் இருந்தது இல்லை. நான் இது குறித்து கவலைப்படவில்லை’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அக்டோபர் மாதம் நடைபெற இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா சர்வதேச எல்லையை மூடியுள்ளது. இதனால் அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருந்த உலக கோப்பை தொடரை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இதனால் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை தொடருக்கு வார்ம்-அப் மேட்ச் ஆக வெஸ்ட் இண்டீஸ் உடன் டி20 கிரிக்கெட் தொடரை விளையாட இருந்தது. ஆஸ்திரேலிய அரசைப் பொறுத்த வரைக்கும் டிசம்பர் மாதம் வரை எந்தவித விளையாட்டையும் நடத்த விரும்பவில்லை.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை ஒத்தி வைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் முடிவை வெஸ்ட் இண்டீஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியா அக்டோபர் மாதம் ஆஸ்திரேயாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருந்தது. ஐபிஎல் போட்டி நடைபெற இருப்பதால் இந்த தொடரும் ரத்து செய்யப்பட இருக்கிறது.

    ஆஸ்திரேலியா செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதுதான் கொரானாவிற்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் சர்வதேச தொடராகும்.
    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
    மும்பை:

    உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் உள்பட எந்தவொரு விளையாட்டு போட்டியும் நடைபெறவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் தீவிரமாகி வருவதால் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை வெளிப்புற மைதானங்களில் தொடங்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான (2020-21) கிரிக்கெட் சீசன் வழக்கமாக இந்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கும். தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உள்ளூர் வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகளை தொடங்குவது காலதாமதமாகி வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது எப்போது? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்காக வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ளது. 100 பக்கங்கள் கொண்ட அந்த வழிகாட்டுதல் நடைமுறையில் வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும், எதனை செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டு இருக்கும் இந்த வழிகாட்டுதல் நடைமுறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ‘ஆன்-லைன்’ மூலம் ஒப்புதல் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். அதாவது பயிற்சியின் போது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டால் அதனால் ஏற்படும் இன்னல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை ஏற்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களின் உடல் நலம், பாதுகாப்புக்கு அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும்.

    பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், மைதான ஊழியர் உள்ளிட்ட எந்தவொரு பணியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நடைமுறை அனுமதிக்கும் வரை அவர்களை பயிற்சிக்கு பயன்படுத்தக்கூடாது. அதுபோல் உடல் நலப்பிரச்சினை உடைய யாரையும் பயிற்சி முகாமில் பங்கேற்க இடம் கொடுக்கக்கூடாது. வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வருகையில் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அத்துடன் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் வர வேண்டியது அவசியமானதாகும்.

    உள்ளூர் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று டாக்டர்கள் குழு வசதியுடன் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களிடம் கடந்த 2 வார காலத்தில் மேற்கொண்ட பயணங்கள், மருத்துவ நிலை குறித்த விவரங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும். யாருக்காவது கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் இரண்டு முறை (ஒருநாள் விட்டு ஒருநாள்) கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அந்த இரண்டு சோதனையிலும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தால் மட்டுமே பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அனைவரும் ‘ஆரோக்ய சேது’ செயலியை (ஆப்) பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

    பயிற்சி முகாம் தொடங்கும் முன்பு டாக்டர்கள் குழு சார்பில் ஆன்-லைன் மூலம் வீரர்களுக்கு மருத்துவ கருத்தரங்கு நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும். பயிற்சி நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கணும். பயிற்சியின் போது வீரர்கள் முகக்கவசம் (வால்வு இல்லாத எண் 95 மாஸ்க்) கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் பொது இடங்களிலும், பயிற்சிக்கு வருகையிலும் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்து இருப்பதால், பயிற்சியின் போது பந்தை எச்சிலை கொண்டு பளபளப்பாக்க அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று பரவிய பின்னர், ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    ஒரு வீரரிடம் இருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மைதானங்களில் அடிக்கடி துப்பக்கூடாது. வீரர்கள் சந்தோசத்தில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிக்கக் கூடாது, முடிந்த அளவு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஒரு வீரர் மற்றொரு வீரர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும், நடுவர் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினாலும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பலாம். அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து தண்டிக்கலாம் என நடுவருக்கு அதிகாரம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் வழிகாட்டு நெறிமுறையை திருத்தம் செய்துள்ளது.

    ஆனால், அடிக்கடி இருமல் மற்றும் மைதானத்தில் துப்புதல் தண்டனைக்குள்ளாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

    இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டோர், 23 வயதிற்கு உட்பட்டோர், சீனியர் அணி என பல பிரிவுகளில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணி உள்ளது. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளன. இதில் சில வீரர்கள் வயதை குறைத்துக் காட்டி அணியில் முறைகேடாக இடம் பிடித்து விளையாடுகிறார்கள்.

    பின்னர் அவர்களின் முறைகேடு கண்டுபிடிக்கும்போது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும், அவருக்குப் பதிலாக இடம்பிடிக்க வேண்டிய மற்ற வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் வீணாகிவிடுகிறது.

    இளையோர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், வயது முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உச்சநீதிமன்றமும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் வயது முறைகேட்டில் ஈடுபட்ட வீரர்கள் தானாக முன்வந்து செப்டம்பர் 15-ந்தேதிக்குள் குற்றத்தை ஒப்புக்கொண்டு சான்றிதழ்களை திருத்தம் செய்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லையெனில் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படும். அதன்பின் மாநில மற்றும் தேசிய அணிக்கும் இடம் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

    ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டில் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது.
    விவோ டைட்டில் ஸ்பான்சரை தக்கவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் டுவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    பிசிசிஐ-யால் ஐபிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ உள்ளது. இது சீன நிறுவனம். வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

    ஜூன் மாதம் லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன  வீரர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    மத்திய அரசு சீன செயலிகளை தடைசெய்தது. சில மாநில அரசுகள், மத்திய மந்திரிகள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டனர். மக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்தனர்.

    அப்போதில் இருந்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் விவோ உடனான தொடர்பை பிசிசிஐ விலக்கிக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவில் விவோ-தான் டைட்டில் ஸ்பான்சர் என்று அறிவித்தது. இது ரசிகர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் கோபம் அடைந்த டுவிட்டர்வாசிகள் ‘boycottIPL’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியதுடன் இதை டிரெண்ட் ஆக்கி ஐபிஎல், பிசிசிஐ இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ‘‘மக்களை புறக்கணிக்க சொல்கிறார்கள். ஆனால் ஐபிஎல் ஸ்பான்சராக விவோவை தக்கவைத்துள்ளனர்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் இந்த முறை நடத்தப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது.

    இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று உறுதிப்படுத்தினார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்திய வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 3 அணிகள் இடையிலான இந்த போட்டி நவம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    போட்டி அட்டவணை மற்றும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நேற்று ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பரஸ் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள், இதர விவரங்கள் வருமாறு:-

    * ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒளிபரப்பு நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. எப்போதுமே இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை தான் அரங்கேறும். முதல்முறையாக இப்போது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10-ந்தேதி) நடக்க உள்ளது.

    * கொரோனா தொற்றினால் எந்த வீரராவது பாதிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    * ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    * சீன செல்போன் நிறுவனமான விவோ உள்ளிட்ட எல்லா ஸ்பான்சர்ஷிப்பும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * வழக்கமாக இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும். மொத்தம் 10 நாட்கள் இரட்டை ஆட்டங்கள் இடம் பெறுகிறது.

    ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி விட்டது. மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதிக்குள் அது வெளியாகும் என்று தெரிகிறது.
    ×