என் மலர்
விளையாட்டு
இளம் வீரர் மஹிபால் லாம்ரோர் 47 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஸ்மித், படலர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே பட்லர் வாணவேடிக்கை நிகழ்ந்த தொடங்கினார்.
ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஸ்மித் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறினார். அவர் 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் திட்டம் தகர்ந்தது.
ராபின் உத்தப்பா 17 ரன்னில் வெளியேறினார். ஆனால் இளம் வீரரான லாம்ரோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 39 பந்தில் 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்களை கடந்ததது.
கடைசி ஓவரில் டெவாட்டியா இரண்டு சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்களும், ஜாஃப்ரா ஆர்சர் 10 பந்தில் 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
ஆர்சிபி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், உடானா 2 விக்கெட்டும், சைனி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விரைவில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல்பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்தால் மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.
இந்நிலையில் நியூசிலாந்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் புறப்பட்டுவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைவார். ஒரு வார கோரன்டைனுக்குப்பின் அணியில் இணைவார்.
பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது உறுதியாகிவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஐபிஎல் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
1. பட்லர், 2. ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ரியான் பராக், 6. ராகுல் டெவாட்டியர், 7. மஹிபால் லாம்ரோர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜாஃப்ரா ஆர்சர், 11. ஜெய்தேவ் உனத்கட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. குர்கீரத் சிங் மன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. இசுரு உடானா, 9. நவ்தீப் சைனி, 10. ஆடம் ஜம்பா, 11. சாஹல்.
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கவலை அடைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதின. சென்னை அணி 165 ரன்கள் அடித்தால் வென்று என்ற இலக்குடன் களம் இறங்கியது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார்.
19-வது ஓவரை அவர் வீசினார். முதல் பந்தை வீசும்போது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது. அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அத்துடன் வெளியேறினார்.
கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 15 ரன்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். அதுபோல் நேற்றும் 3.1 ஓவரில் வாட்சன் விக்கெட்டை வீழ்த்தி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அவரது காயம் ஐதாபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விக்குப்பின் தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் புவனேஷ்வர் குமார் காயம் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. ஒருவேளை சில போட்டிகளில் விளையாடவில்லை எனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே, மிட்செல் மார்ஷ் இதே காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் பஞ்சாபை நாளை எதிர்கொள்கிறது சிஎஸ்கே.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெறுவதால் பழைய ஹிஸ்டரி தேவையில்லை. இந்த சீசனில் எப்படி விளையாடுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.
முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து, ஒரு வாரம் ஓய்வுக்குப்பின் சென்னை அணி நேற்று களம் இறங்கியது. ஓய்வை நன்றாக பயன்டுத்தியுள்ளோம். சரியான கலவை அணியை களம் இறக்குவோம். அம்பதி ராயுடு, பிராவோ களம் இறங்குகிறார்கள் என்றெல்தாம் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் மார்தட்டினார்.
நேற்றைய ஆட்டத்தில் மூன்று மாற்றங்கள், அம்பதி ராயுடு, பிராவோ வரவு, ஒரு வாரம் திட்டமிடுதல் என எதற்கும் பயனில்லாமல் போனது. மீண்டும் பேட்டிங் சொதப்பல். இதனால் ஹாட்ரிக் தோல்வி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 4-ல் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இரண்டு அணிகளும் ஒரே நிலையில்தான் உள்ளது. இதனால் இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்புக்கு வேட்டு வைத்துவிடும்.
துபாய் ஆடுகளங்கள் ஒரு ட்ரிக்கானது. இதில் சரியான திட்டமிடுதல் உடன் சென்றால்தான் சாதிக்க முடியும். பொதுவாக இந்தியாவில் 8 மணிக்கு போட்டி தொடங்கும்போது முதல் பாதி நேரம் ஆட்டம் முடிய 9.30 மணி ஆகும். அதன்பின் 9.45 முதல் 10 மணிக்குள் 2-வது இன்னிங்ஸ் தொடங்கும். 9.30 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் முதல் பந்தில் இருந்தே பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் சேஸிங் செய்வது எளிது.
இந்தக் கணக்கில்தான் டாஸ் வென்ற அணிகளில் எல்லாம் பந்து வீச்சை தேர்வு செய்து மண்ணைக் கவ்வின.
தற்போது துபாயில் அங்குள்ள நேரப்படி 6 மணிக்கு தொடங்கும். இதனால் 2-வது இன்னிங்ஸ் 15-வது ஓவருக்குப் பின்தான் பனி அதிகமாக இருக்கும். அப்போதுதான் பந்து வீச்சளர்கள் திணறுவார்கள். அந்த நேரத்தை பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுப்பந்து ஸ்விங்கிற்கு அதிகமாக சப்போர்ட் செய்வதால் அதற்கு முன் பவர்பிளேயில் 40 முதல் 10 ரன்கள் அடித்தாலும், விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
மைதானம் மிகப்பெரியது என்பதல் மிடில் ஓவர்களில் அடிக்கடி ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஒன்றிரண்டு ரன்கள், அவ்வப்போது பவுண்டரிகள் விரட்டி ரன்கள் சேர்க்க வேண்டும். 14-வது ஓவருக்கப்பின் வாணவேடிக்கை நிகழ்த்த வேண்டும். இதுதான் துபாய் மைதானத்தில் சூத்திரம். இதை மனதில் வைத்து விளையாடினால்தான் வெற்றி பெற முடியும்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் விஜய் நீக்கப்பட்டார். வாட்சனுடன் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக களம் இறங்கினார். வாட்சன் வழக்கம்போம் போல் சொதப்ப பிரயோஜனம் இல்லாமல் போனது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த ராயுடுவும் ஏமாற்றம். நடராஜன் பந்தில் 8 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார். டு பிளிஸ்சிஸ் அணியை வழி நடத்திச் செல்ல முயன்றபோது, கேதர் ஜாதவ் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட டு பிளிஸ்சிஸ் ரன்அவுட். பவர் பிளேயில் வெறும் 36 ரன்களுக்குள் 3 முக்கியமான விக்கெட்டை இழந்தது. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் ஏறக்குறைய முடிந்து விட்டது.
இதுவரை அணியில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கும் கேஜர் ஜாதவ் விளையாடுவார் என்று பார்த்தால் அவரும் 3 ரன்னில் நடையை கட்டினா்.
இதனால் முழு பொறுப்பும் டோனி மீது விழுந்தது. பழைய டோனியாக இருந்தால் துவம்சம் செய்திருப்பார். அவராலும் பந்தை அடிக்கடி மைதானத்திற்கு வெளியே அனுப்ப முடியாத நிலைய ஏற்பட்டது. கடைசி வரை களத்தில் நின்றும் ரன்கள் அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை. சுழற்பந்து வீச்சு. டோனி வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதல் பந்தில் வைடு உடன் நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் 6 பந்தில் 23 ரன்களே தேவைப்பட்டது. 4 பந்தில் 3 சிக்சர்கள் அடித்தெல்லாம் அணியை வெற்றி பெற வைத்த டோனியால் இது முடியாதா? என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஐந்து பந்தில் நான்கு பந்தை சந்தித்த டோனி ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
இதில் இருந்து டோனி இன்னும் சரியான ஃபார்முக்கு வரவில்லையா? அல்லது அவரால் முடியவில்லையா? என்ற கேள்வி எழத் தொடங்கிவிட்டது.
ஒரே ஓவரில் 25 ரன்கள் அடிக்கக்கூடிய ஹிட்டர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பலவீனம். இதுவரை டோனி இந்த பணியைச் செய்தார். வரும் போட்டிகளிலும் அவரால் முடியவில்லை என்றால் சென்னை அவ்வளவுதான். ஜடேஜா அரைசதம் அடித்தது மட்டுமே ஆறுதல்.
இதேபோல் பேட்டிங் சொதப்பதல் மீண்டும் நடைபெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றை எதிர்பார்க்க முடியாது, பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ஒருவேளை கேதர் ஜாதவ் வேண்டுமென்றால் மாற்றப்படலாம். வாட்சன் நல்ல தொடக்கம் கொடுக்க வில்லை என்றால், இப்படி சொதப்பல் நடக்கத்தான் செய்யும்.
பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் வேகப்பந்து வீச்சில் வெயின் பிராவோ இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம். இதுவரை ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடிய சென்னைக்கு 6 பந்து வீச்சாளர் என்ற ஆப்சன் கிடைத்துள்ளது. இது அணிக்கு சற்று கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.
தீபக் சாஹர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். பவர் பிளேயில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு வந்தது சற்று ஆறுதல். டெத் ஓவரில் கூடுதல் கவனம் செலுத்தினால் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சாம் கர்னனுக்கும் இதே நிலைதான். 17-வது ஓவரில் அவர் விட்டுக்கொடுத்த 17 ரன்கள்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் அவரது பணியை சரியாக செய்தார். மூன்று பேரும் புதுப்பந்தை ஸ்விங் செய்யக் கூடியவர்கள். டெத் ஓவரில் அசத்தினால் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.
சென்னை அணியின் முதுகெலும்பாக விளங்கும் சுழற்பந்து வீச்சு மிஸ்சிங். சாவ்லா ஒரு பக்கம் தாக்குப்பிடித்து வீசினாலும், மறுபக்கத்தில் ஜடேஜா மிஸ்சிங். சென்னை அணியை பொறுத்த வரைக்கும் முதல் ஓவரை சுழற்பந்து வீச்சுடன் ஆரம்பித்து அதிர்ச்சி கொடுக்கும். தற்போது அந்த நிலை இல்லாமல் உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டு வர முடியாமால் உள்ளது. சாம் கர்ரனா? இம்ரான் தாஹிரா? என்ற குழப்பத்தில் சென்னை அணி உள்ளது.
ஒட்டு மொத்தத்தில் பேட்டிங்கில் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணியில் பஞ்சாபும் ஒன்று. அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர், கேஎல் ராகுல் கேப்டன் காம்பினேசனுடன் உத்வேகத்தில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த அணி முதல் ஆட்டத்தில் 158 இலக்கை சேஸிங் செய்யும்போது, கடைசி 3 பந்தில் ஒரு ரன் எடுக்க முடியாமல் போட்டியை ‘டை’ ஆக்கி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. அந்த அணிக்கு இது மிகப்பெரிய தடங்களாக ஏற்பட்டதே என்றே சொல்லாம்.
அந்த அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்ப்பதே தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல்தான். துபாயில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கெதிராக கேஎல் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மயங்க் அகர்வாலும் சதம் அடித்தனர்.
இருவரும் ஆட்டமிழந்தால் என்ன ஆகும் என்பது மும்பை அணிக்கெதிராக தெளிவாக தெரிந்தது. 192 ரன்கள் இலக்கை நோக்கி செல்லும்போது கேஎல் ராகுல் 17 ரன்னிலும், மயங்க் அகர்வால் 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் அணி 143 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. மிடில் ஆர்டர் வரிசையில் கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் இதுவரை பலன் இல்லை. மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரன் சூப்பர் டூப்பர் ஹிட்டர்கள். கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலைத் தவிர்த்து பேட்டிங் பொறுப்பை இவர்கள் எடுத்துக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரச்சனை இருக்காது.
அந்த அணிக்கு மிகப்பெரிய தலைவலியே டெத் ஓவரில் பந்து வீசுவதுதான். முகமது ஷமி (8 விக்கெட் உடன் பர்பிள் கேப்), காட்ரெல் தொடக்கத்தில் நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் டெத் ஓவரில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காட்ரெல் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் விட்டுக்கொடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மும்பைக்கு எதிராக கடைசி 4 ஓவரில் மட்டும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தது. அத்துடன் கடைசி 6 ஓவரில் 104 ரன்கள் வாரி வழங்கியது.
சுழற்பந்து வீச்சில் இளம் வீரர் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசுகிறார். இன்னொரு தரமான சுழற்பந்து வீச்சாளர் தேவை. முருகன் அஸ்வின் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். ஆர்சிபி-க்கு எதிராக 3 ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 1.3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் முருகன் அஸ்வினை சரியான பயன்படுத்தாதது குறித்து சச்சின் விமர்சனம் செய்திருந்தார்.
அப்படி இருந்தும் அவர் மும்பைக்கு எதிராக அவர்கள் எடுக்காதது தவறு. கிருஷ்ணப்பா கவுதமை களம் இறக்கியது. இவர் மும்பைக்கு எதிராக 45 ரன்களும், டெல்லிக்கு எதிராக 39 ரன்களும் விட்டுக்கொடுத்தார்.
முஜீப் உர் ரஹ்மானை இன்னும் களம் இறக்காமல் உள்ளனர். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவது அந்த அணிக்கு சற்று பலவீனமாக இருக்கிறது.
டெத் ஓவர் தவறை சரி செய்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீறு கொண்டு எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் இரு அணிகளுக்கும் இந்த போட்டியன் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை தெரிவித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திடம் வீழ்ந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
துபாயில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.
19 வயது வீரரான பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் சர்மா 24 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 7 ரன்னில் தோற்றது.
ஜடேஜா 35 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 36 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்)எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அப்துல் சமத் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் டெல்லியிடம் 44 ரன்னிலும் தோற்றது.
ஐதராபாத்திடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
என்னால் நிறைய பந்துகளை சரியாக ஆட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.
நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. கேட்ச்களை தவறு விடுவது, நோ-பால் வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.
நாங்கள் அதே தவறை மீண்டும் செய்கிறோம். 16-வது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இன்னும் மேம்பட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்து கொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 2-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, இந்த ஆடுகளத்தில் 150 ரன்னுக்கு மேல் நல்ல ஸ்கோராகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம் என்றார்.
சென்னை அணி 5-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை (4-ந் தேதி) துபாயில் சந்திக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் அதே தினத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திடம் வீழ்ந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.
துபாயில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.
19 வயது வீரரான பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் சர்மா 24 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 7 ரன்னில் தோற்றது.
ஜடேஜா 35 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 36 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்)எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அப்துல் சமத் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி இருந்தது. 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் டெல்லியிடம் 44 ரன்னிலும் தோற்றது.
ஐதராபாத்திடம் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-
என்னால் நிறைய பந்துகளை சரியாக ஆட முடியவில்லை. பந்தை அடித்து ஆட வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம். ஆடுகளம் மந்தமாக இருக்கும்போது பந்தை நேரம் எடுத்துக் கொண்டு ஆடுவதுதான் சிறந்தது.
நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. கேட்ச்களை தவறு விடுவது, நோ-பால் வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.
நாங்கள் அதே தவறை மீண்டும் செய்கிறோம். 16-வது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இன்னும் மேம்பட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. இவை அறிகுறியாக இருக்கும்போது, நாம் நேரம் எடுத்து கொண்டு ஆடுவது நல்லதுதான். மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐதராபாத் அணி 2-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, இந்த ஆடுகளத்தில் 150 ரன்னுக்கு மேல் நல்ல ஸ்கோராகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இது ஒரு மோசமான ஆடுகளம் என்றார்.
சென்னை அணி 5-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை (4-ந் தேதி) துபாயில் சந்திக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் அதே தினத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
பிரியம் கார்க் அரைசதம் அடித்ததும், சாம் கர்ரன் ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்ததும் சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக போட்டியில் சிஎஸ்கே 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் எங்கெல்லாம் சிஎஸ்கே அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.
வார்னர் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது டோனி கூறும்போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம் என்றார். அப்போதே 150 ரன்களுக்கு மேல் கொடுத்து விட்டால் சேஸிங் செய்வது கடினம் என்பதை டோனி தெளிவாக புரிந்து கொண்டார்.
முதல் 11 ஓவரை வரை போட்டி சென்னை கைக்குள்தான் இருந்தது. சாவ்லா வீசிய அந்த ஓவரில் வார்னேர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். அப்போது ஐதராபாத் 11 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு பிரியம் கார்க் உடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார். பிரியம் கார்க்கிற்கு 19 வயதே ஆகிறது. 20 வயதே ஆகிறது. அனுபவம் வாய்ந்த சென்னை வீரர்களை இந்த இளம் ஜோடி எப்படி எதிர்கொள்ளப் போகிறது. ஐதராபாத் 125 ரன்னைத் தாண்டுவது கடினம் என்ற நிலை இருந்தது.
பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா ஜோடி 14-வது ஓவரில் இருந்து சார்ஜ் எடுத்தது ஜடேஜா வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்ததால் இளம் ஜோடிக்கு நம்பிக்கை கிடைத்தது. அடுத்த ஓவரில் 9 ரன்கள் அடித்தனர்.
17-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒர சிக்ஸ் விளாசினார் பிரியம் கார்க். ஒரே ஓவரில் 22 ரனகள் விட்டுக்கொடுக்க சென்னை அணியிடம் இருந்து போட்டி மெதுவாக சன்ரைசர்ஸ் கைக்குச் சென்றது.
தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஜடேஜா அதை தவறவிட்டதும், பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தில் ஷர்துல் தாகூர் கேட்ச் விட்டார். 2 பந்தில் 2 கேட்ச் தவற ஐந்து ரன்கள் சென்றது. கேட்ச் மிஸ்சிங் காரணமாக தீபக் சாஹர் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 48 பந்தில் 77 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
சாம் கர்ரனின் ஒரு ஓவர், இரண்டு கேட்சி மிஸ்சிங், பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்கள் விளாசியது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 164 ரன்கள் அடிக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
பேட்டிங் செய்யும்போது 3-வது ஓவரில் வாட்சன் 1 ரன்னில் அவுட்டாகி சரிவை தொடங்கி வைத்தார். 6-வது ஓவரை டி நடராஜன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ரன் அவுட் ஆக ஒட்டுமொத்த போட்டியும் 6 ஓவருக்குகள் முடிந்த நிலை ஏற்பட்டது.
16 ஓவர் வரை ஜடேஜா 25 பந்தில் 23 ரன்களும், டோனி 27 பந்தில் 24 ரன்கள் என மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருவரும் 52 பந்தில் 47 ரன்களே அடித்தனர்.
17-வது ஓவரில் இருந்து ஜடேஜா சார்ஜ் எடுத்தார். அந்த ஓவரில் 3 பவுண்டரி, 18-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 34 பந்தில் அரைசதம் அடித்தார். 35-வது பந்தில் ஆட்டமிழந்தார். 11 பந்தில் 25 ரன்கள் அடித்தார்.
17.5 ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை டோனி 9 பந்தில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். இதுவும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சாம் கர்ரன் ஐந்து பந்தில் 15 ரன்கள் எடுத்துக் கூட பயனில்லாமல் போனது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார்
துபாய்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். ‘ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி தூரம் அதிகமாக இருக்க வேண்டும்.
சிறிய மைதானமாக இருந்தால் ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருக்க வேண்டும். இன்னிங்சில் ஒரு பவுலர் அதிகபட்சமாக 4 ஓவர் வீசலாம் என்பதை 5 ஓவர்களாக மாற்ற வேண்டும். ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆடுகளம் (பிட்ச்) போல் இருக்க வேண்டும். சிக்சர்கள் மட்டும் தேவை என்று இல்லாமல் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே சரிசம போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இந்த சீசனில் ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன.
அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ளன.

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் சூப்பர் பார்மில் உள்ளனர். கோலியும் (முதல் 3 ஆட்டத்தில் 14, 1, 3 ரன்) ரன்வேட்டைக்கு திரும்பினால் இன்னும் வலிமையாகி விடுவார்கள். இதே போல் ராஜஸ்தான் அணியில் ஸ்டீவன் சுமித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், திவேதியா நிலைத்து நின்று விட்டால் எதிரணி பாடு திண்டாட்டம்தான். இவர்களில் யார் கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் ராஜஸ்தானும், 8-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.
சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் 3-வது வெற்றியை அறுவடை செய்ய பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
சிறிய மைதானமான சார்ஜாவில் இதுவரை நடந்துள்ள 2 ஆட்டங்களில் மொத்தம் 62 சிக்சர்கள் நொறுக்கப்பட்டுள்ளன. விளையாடிய 3 அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன. ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், சுப்மான் கில் (மூன்று பேரும் கொல்கத்தா), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிகர் தவான், ஹெட்மயர் (டெல்லி) என்று இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் வரிந்து கட்டுவதால் நிச்சயம் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 23 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. இதில் 13-ல் கொல்கத்தாவும், 9-ல் டெல்லியும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் 3-வது வெற்றியை அறுவடை செய்ய பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
சிறிய மைதானமான சார்ஜாவில் இதுவரை நடந்துள்ள 2 ஆட்டங்களில் மொத்தம் 62 சிக்சர்கள் நொறுக்கப்பட்டுள்ளன. விளையாடிய 3 அணிகளும் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன. ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், சுப்மான் கில் (மூன்று பேரும் கொல்கத்தா), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிகர் தவான், ஹெட்மயர் (டெல்லி) என்று இரு அணிகளிலும் அதிரடி சூரர்கள் வரிந்து கட்டுவதால் நிச்சயம் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 23 ஆட்டங்களில் சந்தித்துள்ளன. இதில் 13-ல் கொல்கத்தாவும், 9-ல் டெல்லியும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பாரீஸ்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து தொடர்ந்து 5-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் ஸ்டீபனோ டிராவாக்லியாவை விரட்டினார். அதே சமயம் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா போராடி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை 54 நிமிடத்தில் பந்தாடி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கால்இறுதியில் அனிசிமோவாவிடம் அடைந்த தோல்விக்கு ஹாலெப் பழிதீர்த்துக் கொண்டார். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் அலெக்சான்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் 19 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சார்ட்டுக்கு அதிர்ச்சி அளித்தார். பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து தொடர்ந்து 5-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் ஸ்டீபனோ டிராவாக்லியாவை விரட்டினார். அதே சமயம் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா போராடி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை 54 நிமிடத்தில் பந்தாடி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கால்இறுதியில் அனிசிமோவாவிடம் அடைந்த தோல்விக்கு ஹாலெப் பழிதீர்த்துக் கொண்டார். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் அலெக்சான்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் 19 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சார்ட்டுக்கு அதிர்ச்சி அளித்தார். பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.
துபாய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கனர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் சாஹர் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்துவந்த மணிஷ் பாண்டே, வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மணிஷ் பாண்டே 29 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலு அடுத்தடுத்து வெளியேறினர்.
அடுத்துவந்த வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இளம் வீரர்களான அபிஷேக் சர்மா - பிரியம் கார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
24 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்தார். அதேபோல் மற்றொரு வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 51 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதனால், 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பத்திலேயே தடுமாறிய வாட்சன் 6 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த அம்பதி ராயுடுவும் 8 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரரான டூ பிளசிஸ் 19 பந்தில் 22 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜாதவ் 3 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும், வெற்றி பெற 8 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் கேப்டன் டோனி (30 பந்துகளில் 32 ரன்கள்) களத்தில் இருந்தார். பின்னர் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், சென்னை அணியால் கடைசி ஓவரில் 20 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் டோனி 47 ரன்களுடனும், சாம் கரன் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஐதராபாத் அணியின் நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 35 பந்தில் 50 ரன்கள் அடித்த ஜடேஜா, முதன்முறையாக அரைசதத்தை பதிவு செய்ததுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 8.2 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்ததால் ரவீந்திர ஜடேஜா முன்னதாகவே களம் இறங்கிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரன்கள் அடித்தார்.
அவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், முதல் அரைசதம் ஆகும்.
இதற்கு முன் 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்களும், 2011-ல் கேரளா அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 47 ரன்களும், 2012-ல் சென்னை அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 44 ரன்களும் அடித்துள்ளார்.






