என் மலர்
விளையாட்டு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 210 ரன்கள் அடித்து 18 ரன்னில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 228 ரன்கள் குவித்தது.
பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. ரஸல், தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில் குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க கொல்கத்தா தோல்வியை நோக்கி சென்றது. ஆனால் திரிபாதி - மோர்கன் ஜோடி அதிரடி காட்ட போட்டி பரபரப்பானது. ஆனால், மோர்கன் 18 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க கொல்கத்தா 18 ரன்னில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் அணியில் ஏராளமான மேட்ச் வின்னர் இருக்கும்போது டாப் ஆர்டரில் களம் இறங்க முடியாது எனறு மோர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘எங்களுடைய பேட்டிங் ஆர்டரை நீங்கள் பார்க்கும்போது நாங்கள் அதிகமான மேட்ச் வின்னரை வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த அந்த்ரே ரஸல் போன்ற வீரர்கள் இருக்கும்போது முன்வரிசையில் களம் இறங்குவது கடினம். அவர் நம்ப முடியாத வகையிலான ஸ்டிரைக்கர். அவர் முதல் வரிசையில் வரும்போது, எல்லேமே கொஞ்சம் மாறும்.
நாங்கள் 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் நல்ல நிலையில் இருந்தோம். அதன்பின் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது’’ என்றார்.
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் 17-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா- குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ஜா சிறிய மைதானம் என்பதால் ரோகித் சர்மாவின் அதிரடியைக் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.
முதல் ஓவரை சந்தீப் சர்மா வீசினார். 4-பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இதுவரை சரியாக விளையாடாமல் இருந்து குயின்டான் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்டினார்.
6-வது ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 32 பந்தில் அரைசதம் அடித்த டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 13.1 ஓவரில் 126 ரன்கள் அடித்திருந்தது.
அதன்பின் வந்த பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொல்லார்ட் 13 பந்தி் 25 ரன்கள் அடித்தார். குருணால் பாண்ட்யா கடைசி 4 பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் விளாசியுள்ளது,
சூதாட்ட தரகர் ஒருவர் தன்னை அணுகியதாக ஐ.பில்.எல. வீரர் புகார் அளித்துள்ளதால், பி.சி.சி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் சூதாட்ட புகாரில் சிக்கினார்கள். டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேப்போல கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்து இருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ.), ஐ.பி.எல். நிர்வாகமும், வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. சூதாட்ட தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளும் பயிற்சி வகுப்பும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியின் வீரரை ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கான செயல்களில் ஈடுபட சூதாட்ட தரகர் அனுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பதால், அவர்களை யாரும் நெருங்க முடியாது. ஆனால் ஆன்-லைன் மூலம் ஐ.பி.எல். வீரர் ஒருவரை சூதாட்ட தரகர் அனுகியுள்ளார்.
இதுகுறித்து அந்த வீரர் அனுப்பிய புகாரின் பேரில் பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்ட வீரர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு தலைவரும், ராஜஸ்தான் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி.யுமான அஜித்சிங் கூறியதாவது:-
சூதாட்ட தரகர் ஒரு வீரரை அனுகியுள்ளார் என்பது உண்மைதான். நாங்கள் அந்த வீரரை கண்காணித்து வருகிறோம். அவரும் சூதாட்ட தரகருடன் பேசியுள்ளார். அவரை பிடிக்க சிறிது காலமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்த ஐ.பி.எல். வீரர் உள்நாட்டை சேர்ந்தவரா? அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரா? எந்த அணியில் இருப்பவர் அல்லது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து கேட்டதற்கு எந்த தகவலும் அளிக்க அஜீத்சிங் மறுத்துவிட்டார்.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி:-
1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. பொல்லார்ட், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜேம்ஸ் பேட்டின்சன், 8. ராகுல் சாஹர், 9. டிரென்ட் போல்ட், 10, பும்ரா, 11. குருணால் பாண்ட்யா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. பிரியம் கார்க், 6. அபிஷேக் ஷர்மா, 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா, 10, சித்தார்த் கவுல், 11. டி. நடராஜன்.
ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காததால் தினேஷ் கார்த்திக்கை கேப்டனில் இருந்து நீக்கிவிட்டு மோர்கனை கேப்டனாக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளது.
சார்ஜாவில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 38 பந்தில் 88 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பிரித்வி ஷா 41 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ரிஷப் பண்ட் 17 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஆந்த்ரே ரஸ்சல் 2 விக்கெட்டும், வருன சக்கரவர்த்தி , நாகர் கோட்டி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்தது. இதனால் டெல்லி அணி 18 ரன்னில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 35 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 18 பந்தில் 44 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), திரிபாதி 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஆன்ரிச் நோர்ட்ஜ் 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டும், ரபடா, ஸ்டாய்னிஸ், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி போராடி தோற்றது. அந்த அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. 4 இன்னிங்சில் 37 ரன்களே எடுத்துள்ளார்.
அவர் நேற்றைய ஆட்டத்தில் மோர்கனுக்கு முன்பு களம் இறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனான மோர்கன் 5 சிக்சர்களை விளாசினார். அவர் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று இருந்தால் கொல்கத்தா வெற்றி பெற்று இருக்கும்.
கொல்கத்தா அணியின் இந்த தோல்வியை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
உலக கோப்பை வெற்றி கேப்டனான மோர்கனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிப்பது தற்போதைய சூழ்நிலைக்கு உகந்தது என்று அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே கொல்கத்தா அணி தொடக்கத்தில் தோல்வியை அடையும்போது, தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று டெலிவிஷன் வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கவாஸ்கர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோர்கன் இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடி வருகிறார். 4 ஆட்டத்தில் 136 ரன்கள் எடுத்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங், டெல்லியில் இன்று பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும், அர்ஜூனா விருது பெற்றவருமான ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைய உள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது வருகை பாஜகவிற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் கிதாவூரில் 1991ம் ஆண்டு பிறந்தவர் ஷ்ரேயாசி சிங். மறைந்த முன்னாள் மத்திய மந்திரி திக்விஜய் சிங்கின் மகளான இவர், இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இணைந்து, பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
டபுள் டிராப் பிரிவில் விளையாடிய இவர், 2018ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2014ல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.
இதுதவிர டெல்லி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி, பிரிஸ்பேனில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். அவருக்கு 2018ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.
ஷார்ஜா:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், பிரித்வி ஷா களமிறங்கினர். சிறிய மைதானம் என்பதால் தொடக்கத்தில் இருந்து பஞ்சம் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டிருந்தது.
தவான் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
பிரித்வி ஷா 66 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அய்யர் 38 பந்தில் 88 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 3 ரன்னில் அவுட்டாகினார். ஷுப்மான் கில் 28 ரன்னிலும், ரசல் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஓரளவு பொறுப்புடன் ஆடிய ரானா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் வெளியேறினார். அப்போது கொல்கத்தா 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய மார்கன் அதிரடியாக ஆடினார். அவருக்கு திரிபாதி ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் கொல்கத்தா வெற்றியை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிறப்பாக ஆடிய மார்கன் 44 ரன்னில் அவுட்டானார். மார்கன் - திரிபாதி ஜோடி 31 பந்தில் 78 ரன்கள் குவித்து அசத்தியது. திரிபாதி 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது.
பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறிய மைதானம் என்பதால் தொடக்ததில் இருந்து பஞ்சம் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டிருந்தது. தவானை விட பிரித்வி ஷா துவம்சம் செய்தார்.
5.5 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தவான் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அடித்த பந்து தரையுடன் சென்றால் பவுண்டரி, மேலே சென்றால் சிக்ஸ் என்ற அடிப்படையில் ரன்கள் வந்தது. அரைசதம் அடித்த பிரித்வி ஷா 41 பந்தில் 61 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் குவித்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வாணவேடிக்கை நடத்தினர். ரிஷப் பண்ட் 17 பந்தில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அய்யர் 38 பந்தில் 88 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்துள்ளது. பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
தேவ்தத் படிக்கல் 63 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி.
ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலன ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.
பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது. ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரோன் பிஞ்ச் 3 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிக்கல் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தேவ்தத் படிக்கல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் மூன்று போட்டியில் சொதப்பியதால் விராட் கோலி கவனமாக விளையாடினார்.
ஓவர் செல்ல செல்ல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். படிக்கல் 37-வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்கு போடடிகளில் 3-வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் விராட் கோலி 41 பந்தில் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 15.5 ஓவரில் 124 ரன்னாக இருக்கும்போது படிக்கல் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். விராட் கோலி 18-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாச, 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி 53 பந்தில் 72 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 10 பந்தில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல் அணி விவரம்:-
1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின். 8. ரபடா, 9. நோர்ட்ஜ், 10. அமித் மிஸ்ரா, 11. ஹர்சல் பட்டேல்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
1. ஷுப்மான் கில், 2 ராகுல் திரிபாதி, 3. நிதிஷ் ராணா, 4. தினேஷ் கார்த்திக், 5. மோர்கன், 6. அந்த்ரே ரஸல், 7. பேட் கம்மின்ஸ், 8. சுனில் நரைன், 9. நாகர்கோட்டி, 10. ஷிவம் மவி, 11. வருண் சக்ரவர்த்தி.
இளம் வீரர் மஹிபால் லாம்ரோர் 47 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஸ்மித், படலர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்தே பட்லர் வாணவேடிக்கை நிகழ்ந்த தொடங்கினார்.
ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஸ்மித் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பட்லரும் வெளியேறினார். அவர் 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் திட்டம் தகர்ந்தது.
ராபின் உத்தப்பா 17 ரன்னில் வெளியேறினார். ஆனால் இளம் வீரரான லாம்ரோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 39 பந்தில் 47 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

டெவாட்டியா, ஜாஃப்ரா ஆர்சர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் 150 ரன்களை கடந்ததது.
கடைசி ஓவரில் டெவாட்டியா இரண்டு சிக்சர்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்களும், ஜாஃப்ரா ஆர்சர் 10 பந்தில் 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
ஆர்சிபி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், உடானா 2 விக்கெட்டும், சைனி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விரைவில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்து சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோது ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் முதல்பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவரைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.
அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷேன் வார்னே ‘‘எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது. பென் ஸ்டோன்ஸ் அணியில் இருந்தால் மிகவும் வலுவான அணியாக தோன்றும்’’ என்றார்.
இந்நிலையில் நியூசிலாந்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் புறப்பட்டுவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைவார். ஒரு வார கோரன்டைனுக்குப்பின் அணியில் இணைவார்.
பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது உறுதியாகிவிட்டதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.






