என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் டி20 லீக்கில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஓவருக்கு சராசரியாக குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்தவர்கள் பட்டியலை காணலாம்.
    ஐபிஎல் தொடரில் இதுவரை 18 போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஷார்ஜாவில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களை தாண்டிய வண்ணம் உள்ளன. துபாய், அபு தாபியில் சராசரியாக 160-க்கும் உள்ளது. டி20 என்றாலே பேட்ஸ்மேன்கள் ராஜ்ஜியம்தான். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களும் அவ்வப்போது அசத்தி வருகிறார்கள்.

    இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அக்சார் பட்டேல் 3 போட்டிகளில் 10 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஓவருக்கு சராசரியாக 4.6 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதுதான் ஒரு பந்து வீச்சாளர் ஓவருக்கு சராசரியாக கொடுக்க குறைந்த ரன்னாகும்.

    ஆர்சிபி அணியின் வாஷிங்டன் சுந்தர் 4 போட்டிகளில் 11 ஓவர்கள் வீசி 52 ரன்கள்  விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 4.72 ஆகும்.

    ஐதராபாத் அணியின் ரஷித் கான் 5 போட்டிகளில் 104 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 5.20 ஆகும்.

    ரஷி்த் கான்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஃப்ரா ஆர்சர் 4 போட்டிகளில் 14.1 ஓவர்கள் வீசி 99 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.  சராரி 6.75 ஆகும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் புவனேஷ்வர் குமார் 4 போட்டிகளில் 14.1 ஓவரில் 99 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். சராசரி 6.98.

    சாஹல் 4 போட்டிகளில் 16 ஓவரில் 115 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 7.18 ஆகும். பும்ரா  5 போட்டிகளில் 20 ஓவர்கள் வீசி 176 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். சராசரி 8.80 ஆகும்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விக்கெட் இழக்காமல் வாட்சன் - டு பிளிஸ்சிஸ் சேஸிங் இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் நேற்று அதிரடியாக இருந்தது. பஞ்சாபுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களான வாட்சனும், டு பிளிஸ்சிஸும் 179 இலக்கை விக்கெட் இழக்காமல் எட்டினர். இருவரும் இணைந்து 181 ரன் எடுத்தனர். இதனால் சி.எஸ்.கே. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரன் இலக்கில் 181 ரன் எடுத்ததன் மூலம் வாட்சன் -டு பிளிஸ்சிஸ் ஜோடி புதிய சாதனை படைத்தது. ரன் இலக்கில் தொடக்க ஜோடியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் 2-வது இடத்தை பிடித்தது. 2017-ம் ஆண்டு கொல்கத்தா தொடக்க வீரர்கள் காம்பீர் - கிறிஸ் லின் ஜோடி 184 ரன் எடுத்தது முதலிடமாகும்.

    மும்பை அணியின் தெண்டுல்கர் - வெயினி் ஸ்மித் 163 ரன்கள் எடுத்துள்ளது. கில்கிறிஸ்ட் - விவிஎஸ் லட்சுண்மன் 155 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடியின் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக முரளி விஜய்யும், மைக் ஹஸ்சியும், 151 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை வாட்சன் - டு பிளிஸ்சிஸ் ஜோடி முறியடித்தது.

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு இதே பஞ்சாபுக்கு எதிராக 10 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. இந்த ஐ.பி.எல். போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது முதல் நிகழ்வாகும். ஒட்டுமொத்தத்தில் 12-வது முறையாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.
    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 4-வது வெற்றிக்காக துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

    பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை 10 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் பஞ்சாபிடம் 97 ரன்னில் மோசமாக தோற்றது. 3-வது போட்டியில் மும்பையை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டில் வென்றது.

    அந்த அணியின் கேப்டன் விராட் கோலி நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். முதல் 3 ஆட்டத்தில் சொதப்பிய அவர் ராஜஸ்தானுக்கு எதிராக 72 ரன் எடுத்தார். டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், படிக்கல், ஷிவம் துபே, சாஹல் போன்ற சிறந்த வீரர்களும் பெங்களூர் அணியில் உள்ளனர்.

    டெல்லி அணி முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப் (சூப்பர் ஓவர்), சென்னையை ( 44 ரன்) வீழ்த்தியது. 3-வது போட்டியில் ஐதராபாத்திடம் 15 ரன்னில் தோற்றது. 4-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை (18 ரன்) தோற்கடித்தது.

    டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரி‌ஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், தவான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், ரபடா, ஆன்ரிச் நோர்ஜ், அமித் மிஸ்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

    பெங்களூர் அணியும், டெல்லி அணியும் 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளன. இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 14-ல், டெல்லி 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.
    இவரை அணியில் வைத்திருக்க வேண்டுமா? என பலர் விமர்சனம் செய்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக டர்னிங் பாயிண்ட் அமைத்து சூப்பர் டூப்பர் பார்முக்கு திரும்பியுள்ளார் வாட்சன்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற அரைகுறை மனதுடன் போட்டியை பார்த்தனர்.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துபாய் மைதானத்தில் 170-க்கு மேல் அடித்தால் போதுமான ஸ்கோர் என்பதால் சென்னை பஞ்சாப் அணியை கட்டுப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்தது.



    தீபக் சாஹர், சாம் கர்ரன் பவர் பிளேயில் நேர்த்தியாக பந்து வீசினாலும் விக்கெட்டை வீழ்த்த இயலவில்லை. இதனால் பஞ்சாப் அணி 6.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது, சரி இனிமேல் மயங்க் அகர்வால் கே.எல். ராகுல் ஆகியோர் இருக்கும்போது ரன்கள் குவித்து விடுவார்கள் என்று நினைத்து கவலையில் ஆழ்ந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

    ஆனால் 8 ஓவர் முடிவில் 61 ரன்கள் என்ற நிலையில், 9-வது ஓவரை வீச வந்த பியூஸ் சாவ்லா ஒரு சூப்பர் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தார். முதல் பந்திலேயே மயங்க் அகர்வால் அவுட் ஆக்கினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு சற்று அடங்கியது என்றே சொல்லலாம்

    அடுத்து வந்த மந்தீப் சிங் அதிரடியாக விளையாடினாலும், ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அவரை 27 ரன்னில் வெளியேற்றினார்.

    3-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் கேஎல் ராகுல் நிற்க அதிரடி பேட்ஸ்மேன் பூரன் களம் இங்கினார்.

    பூரன் வாணவேடிக்கை நடத்திருக்கொண்டிருக்கும்போது, டெத் ஓவரின் முதல் ஓவரான 17-வது ஓவரை வீச வந்தார் ஷர்துல் தாகூர். முதல் பந்தில் பூரன் ஆட்டமிழக்க இரண்டாவது பந்தில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். 17 பந்தில் 33 ரன்கள் எடுத்த பூரனும், 63 ரன்கள் அடித்திருந்த கேஎல் ராகுலும் வெளியேற, ரசிகர்களுடன், சிஎஸ்கே வீரர்களும் சற்று நிம்மதி அடைந்தனர்.

    அதன்பின் வந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. டெத் ஓவராக கடைசி 4 ஓவரில் 37 ரன்களே விட்டுக்கொடுத்தது சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது.

    178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் வாட்சன் டு பிளஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்

    முதல் ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்ட விரட்டினார். இரண்டு பந்துகளும் மிடில் பேட்டில் பட்டதை வாட்சன் எப்படி விளையாடுவார்? என்ற ரசிர்களுக்கு நம்பிக்கை வந்தது. இதே நம்பிக்கை வாட்சனுக்கும் இருந்தது.

    முதல் 5 ஓவர் முடிவில் 41 ரன்களை எடுத்திருந்தது. 6-வது ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து பார்மில் இருக்கும் டு பிளிஸ்சிஸ் வாட்சனுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் பவர் பிளேயில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்று 60 ரன்கள் குவித்தது. அதன்பின் இன்ஜின் சூடான பஸ் எப்படி சிட்டாக பறக்குமோ? அதேபோல் இருவரும் பஞ்சாப் அணியை பந்தாட தொடங்கினர்.

    டு பிளிஸ்சிஸ் - ஷேன் வாட்சன்

    8-வது ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி விரட்ட, டு பிளிஸ்சிஸ் ஒரு பவுண்டரி விரட்டினார். அடுத்த ஓவரில் வாட்சன் ஒரு சிக்ஸ், பவுண்டரி அடித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் பத்து ஓவரில் 100 ரன் குவித்தது

    11வது ஓவரை ஜோர்டான் வீசினார் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 31 பந்தில் அரைசதம் கடந்தார் வாட்சன். அதே ஓவரின் 5-வது பந்தில் சிங்கிள் அடித்து 33 பந்தில் அரைசதம் அடித்தார் டு பிளேசிஸ்.

    அரை சதம் அடித்த பின் ஈவுஇரக்கமின்றி பஞ்சாப் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இதனால் 17.4 ஓவர்களில்  விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து சென்னை  அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர். வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்களும் டு பிளிஸ்சிஸ் 53 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்

    வாட்சனை மாற்ற வேண்டும். எம்எஸ் டோனி இன்னும் வாட்சனை இன்னும் கட்டி இழுக்கிறார். சுனில் நரைனைப் போல் சாம் கர்ரனை தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு, இம்ரான் தாஹிரை சேர்க்க வேண்டியது தானே? என  ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையாக அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்துள்ளார்.

    நெடுந்தூரம் செல்லும் பேருந்து இன்ஜின் சூடாகும் வரை மெதுவாகத்தான் செல்லும். அதன்பின் இன்ஜின் சூடாகி விட்டால் ஹைவேயில் சிட்டாய் பறக்கும். அதேபோல் வாட்சன் என்ற இன்ஜின் சூடாக 4 போட்டிகள் தேவைப்பட்டுள்ளது தற்போது இன்ஜின் சூடாகி ஹைவேயில் சென்றுகொண்டிருக்கிறது இப்படியே சென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடுத்து நிறுத்துவது கடினம்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், செபாஸ்டியன் கோர்டாவை விரட்டியடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘களிமண் தரையின் ஹீரோ’வான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் தகுதிநிலை வீரர் செபாஸ்டியன் கோர்டாவை (அமெரிக்கா) விரட்டியடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

    நடப்பு சாம்பியனான நடால் பிரெஞ்ச் ஓபனில் பதிவு செய்த 97-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 3-6, 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் ஜானிக் சினெரிடம் (இத்தாலி) பணிந்தார். தரவரிசையில் 75-வது இடத்தில் இருக்கும் ஜானிக் சினெர் கால்இறுதியில் நடாலுடன் மோதுகிறார்.
    ஐ.பி.எல். போட்டி தொடரில் சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்துள்ளார்.

    பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த டோனி கைக்குச் சென்றது. இதனால் 99 கேட்சுகள் பிடித்திருந்த டோனி தனது 100-வது கேட்சை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

    இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார். இது தவிர டோனி 39 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரையும் சி.எஸ்.கே. கைப்பற்றும் என டுவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்துச் செய்தியில் ரெய்னா பதிவிட்டார்.

    இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
    வாட்சன், டு பிளஸ்சிஸ் அதிரடியால் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    துபாய்:

    சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
     
    பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல்  அரைசதம் கடந்தார். பூரன் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த பந்தில் கேஎல் ராகுல் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ் இருவரும் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதல் அடித்து ஆடினர். வாட்சன் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பவர்பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது.

    இவர்கள் ஆட்டத்தை பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வாட்சன் 32 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 33 பந்திலும் அரைசதம் அடித்தனர். நான்கு போட்டிகளுக்குப்பின் வாட்சன் ஃபார்முக்கு வந்துள்ளார். ஓவருக்கு 10 ரன்கள் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில், சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன்  83 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    பஞ்சாப் அணிக்கெதிராக வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர்.
    பஞ்சாப் அணிக்கெதிராக 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இவர்கள் ஆட்டத்தை பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. வாட்சன் 32 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 33 பந்திலும் அரைசதம் அடித்தனர். நான்கு போட்களுக்குப்பின் வாட்சன் ஃபார்முக்கு வந்துள்ளார்.
    கேஎல் ராகுல் அரைசதம் அடிக்க, நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இரண்டு பேரும் தீபக் சாஹர், சாம் கர்ரன் பந்தை கவனமாக எதிர்கொண்டனர். முதல் ஓவரில் சாஹர் 4 ரன்களும், 2-வது ஓவரில் சாம் கர்ரன் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்களும், 3-வது ஓவரில் சாஹர் ஒரு பவுண்டரியுடன்  7 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    4-வது ஓவரில் சாம் கர்ரன் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது ஓவரில் திபக் சாஹர் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தீபக் சாஹர் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றம் அடைந்தார். 

    பவர் பிளேயின் கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் 46 ரன்கள் எடுத்துள்ளது.

    7-வது ஓவரை பிராவோ வீசானர். இந்த ஓவரில் 9 ரன்களும், ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் 6 ரன்களும் விட்டுக்கொடுத்தது சென்னை.

    9-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 19 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 8.1 ஓவரில் 61 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். சாவ்லா வீசிய 11-வது ஓவரில் மந்தீப் சிங் இரண்டு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மந்தீப் சிங் 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பஞ்சாப் அணி 12.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 100 ரன்னைத் தொட்டது. 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

    14-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் பூரன் ஒரு சிக்ஸ், பவுண்டரி விளாச பஞ்சாப் 13 ரன்கள் சேர்த்தது.

    15-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவர் சென்னைக்கு பாதாகமாக அமைந்தது. கேஎல் ராகுல்  முதல் பந்தில் சிக்ஸ் அடித்து 45 பந்தில் அரைசதம் கடந்தார். மேலும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இதனால் 16 ரன்கள் சேர்த்தது பங்சாப்.

    சாம் கர்ரன் வீசிய 16-வது ஓவரில் பூரன் ஒரு இமாய சிக்ஸ் விளாசினார். என்றாலும், 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்திருந்தது.

    17-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பூரன் ஒரு இமாலய சிக்ஸ் விளாசினார். என்றாலும் 11 ரன்களே விட்டுக்கொடுத்தார். 17.5 ஓவரில் பஞ்சாப் 150 ரன்னைக் கடந்தது.

    18-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பூரன் லெக்சைடு தூக்கி அடித்தார். ஜடேஜா அபாரமாக பிடித்தார். பூரன் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்த பந்தில் கேஎல் ராகுல் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் போட்டி அப்படியே சென்னைக்கு சாதகமாக திரும்பியது. இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    19-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஒவரில் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடிக்க 11 ரன்கள் சேர்த்தது பஞ்சாப்.

    கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் சர்பராஸ் கான். அடுத்த பந்தை வைடாக வீசி பஞ்சாப் அணியின் ஸ்கோர் 175 ரன்னைத் தொட்டது. கடைசி மூன்று பந்தில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.

    பஞ்சாப் அணி கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் எடுத்தது.
    போதுமான அளவு ஹிட் ஷாட்ஸ் அடிக்க முடியாததால் மும்பை அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
    மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொல்லார்ட் 13 பந்தி் 25 ரன்கள் அடித்தார். குருணால் பாண்ட்யா கடைசி 4 பந்தில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

    பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. பேர்ஸ்டோவ் தொடக்கத்தில் இருந்து வாணவேடிக்கை நிகழ்த்த தொடங்கினார். அவரால் சராமரியாக வெடிக்க இயலவில்லை. இதனால் 25 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த மணிஷ் பாண்டே 30 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 3 ரன்னிலும், பிரியம் கார்க் 8 ரன்னிலும் வெளியேற நெருக்கடி ஏற்பட்டது.

    வார்னர் போராடி பார்த்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமாத் 9 பந்தில் 20 ரன்கள் அடித்தும் பலன் அளிக்காததால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    கிங்ஸ்  லெவன் பங்சாப் அணி:

    1. மயங்க் அகர்வால், 2. கேஎல் ராகுல், 3. மந்தீப் சிங், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. முகமது ஷமி, 7. பிஷ்னோய். 8. சர்பராஸ் கான், 9. ஜோர்டான், 10. ஹர்ப்ரீத் பிரார், 11. காட்ரெல்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. வாட்சன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு, 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாவ்லா, 8 தீபக் சாஹர், 9. ஷர்துல் தாகூர். 10. வெயின் பிராவோ, 11. சாம் கர்ரன்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 210 ரன்கள் அடித்து 18 ரன்னில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 228 ரன்கள் குவித்தது.

    பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. ரஸல், தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில் குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க கொல்கத்தா தோல்வியை நோக்கி சென்றது. ஆனால் திரிபாதி - மோர்கன் ஜோடி அதிரடி காட்ட போட்டி பரபரப்பானது. ஆனால், மோர்கன் 18 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க கொல்கத்தா 18 ரன்னில் தோல்வியடைந்தது.

    இந்நிலையில் அணியில் ஏராளமான மேட்ச் வின்னர் இருக்கும்போது டாப் ஆர்டரில் களம் இறங்க முடியாது எனறு மோர்கள் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘எங்களுடைய பேட்டிங் ஆர்டரை நீங்கள் பார்க்கும்போது நாங்கள் அதிகமான மேட்ச் வின்னரை வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த அந்த்ரே ரஸல் போன்ற வீரர்கள் இருக்கும்போது முன்வரிசையில் களம் இறங்குவது கடினம். அவர் நம்ப முடியாத வகையிலான ஸ்டிரைக்கர். அவர் முதல் வரிசையில் வரும்போது, எல்லேமே கொஞ்சம் மாறும்.

    நாங்கள் 8 பந்துகள் மீதமுள்ள நிலையில் நல்ல நிலையில் இருந்தோம். அதன்பின் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது’’ என்றார்.
    ×