என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். ஜெய் ஷா செயலாளராக உள்ளார். கடந்த வாரம் திடீரென சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ சார்பில் ஜெய் ஷா கலந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறன. சவுரவ் கங்குலிதான் கலந்து கொண்டு வந்தார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெய் ஷா கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

    மேலும், உலக கோப்பை போட்டியின்போது வரி சலுகை அளிக்கும்படி மத்திய அரசிட் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருன் துமல் ஆகியோர் பேசுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
    குயின்ஸ்லாந்து கர்ராரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்.
    பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சிட்னி சிக்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கிறிஸ் லின் 44 பந்தில் 56 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்தத டேனியல் ஹியூக்ஸ் 35 பந்தில் 51 ரன்கள் அடித்தார். டேனியல் கிறிஸ்டியன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 19 ஓவர் முடிவில் சிட்னி சிக்ஸர்ஸ் 138 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ்டியன் முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார். அடுத்த இரண்டு பந்தில் ரன்கள் எடுக்கவில்லை. 4-வது மற்றும் 5-வது பந்தில் தலா இரண்டு ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், அதை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேனியல் கிறிஸ்டியன் 38 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    சிட்னி டெஸ்டில் நாளைய போட்டியின் முதல் செசன் மிக முக்கியமானது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா நம்பிக்கையுடன் விளையாடினார். ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில், புல் ஷாட் அடித்து பேட் கம்மின்ஸ் பந்தில் மாட்டிக்கொண்டார்.

    4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா, ரஹானே களத்தில் உள்ளனர். கடைசி நாளில் 309 ரன்கள் தேவை.

    இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் நாளைய முதல் செசன் மிகமிக முக்கியமானது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாளை முதல் செசனில் சிறப்பாக விளையாடுவது எங்களுக்கு முக்கியமானது. முதல் செசனில் விக்கெட் இழக்கக் கூடாது. களத்தில் இருக்கும் இருவரும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    மெல்போர்னில் ரஹானே செஞ்சூரி அடித்தார். புஜாரா முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
    ஒரு பயிற்சியாளராக இதை மிகவும் வெறுக்கிறேன். ஆஸ்திரேலியா மண்ணில் இப்படி நடப்பதை பார்க்க மிகவும் கவலையாக இருக்கிறது என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பவுண்டரி லைன் அருகில் பீல்டிங் செய்தபோது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ புகார் அளித்துள்ளது.

    இன்றைய போட்டியின்போது அதேபோன்று வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதனால் மைதானத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் அளித்தனர். உடனடியாக கேலரில் இருந்து சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘ஒரு வீரராக இந்த சம்பவத்தை நான் வெறுக்கிறேன். ஒரு பயிற்சியாளராகவும் வெறுக்கிறேன். உலகின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்களை நாம் பார்த்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடப்பது உண்மையிலேயே கவலை அளிப்பதாக இருக்கிறது’’ என்றார்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டி தொடங்குவதற்கு முன் பரோடா அணியில் இருந்து விலகிய தீபக் ஹூடா, அந்த அணியின் கேப்டன் குருணால் பாண்ட்யா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் விளயைாடுவதற்கான ரஞ்சி டிராபி அணிகள் தயாராகி வந்தன. இந்த நிலையில்தான் பரோடா அணியில் இடம் பிடித்திருந்த பேட்ஸ்மேன் தீபக் ஹூடா அணியில் இருந்து வெளியேறுவதாக பரோடோ கிரிக்கெட் சங்கத்திற்கு கடினம் எழுதியுள்ளார்.

    பரோடா அணியின் கேப்டன் குருணால் பாண்ட்யா, சக வீரர்கள் முன் அவமானப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    தீபக் ஹூடா அந்தக் கடிதத்தில் ‘‘தற்போயை நிலையில், நான் மிகச்சோர்வாகவும், நெருக்குடிக்கு உள்ளாகியும் இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில், என்னுடைய அணி கேப்டன் குருணால் பாண்ட்யா, சக அணி வீரர்கள் முன் வைத்து என்னை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். வதோதராவில் உள்ள ரிலையன் மைதானத்தில் மற்ற அணி வீரர்களும் இருக்கும் நிலையில் அதையே செய்தார்.

    எப்படி பரோடா அணிக்காக விளையாடுகிறாய்? என்று பார்ப்போம் என மிரட்டினார். இந்த தேதி வரை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்தது கிடையாது’’ என்றார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் போட்டியல் ஜார்க்கண்ட் அணியை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு.
    கொரோனா பொது ஊரடங்கிற்குப் பிறகு இந்தியாவில் முதன்முறையாக இன்று கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது, தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 92 ரன்கள் விளாசினார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜார்க்கண்ட் களம் இறங்கியது. ஜார்க்கண்ட் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள இழக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களே அடித்தது. இதனால் தமிழ்நாடு அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சோனு யாதவ் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த ஜடேஜா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ஜடேஜாவின் இடது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் ஜடேஜா 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை.

    காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிட்னி டெஸ்டில் தேவைப்பட்டால் வலி நிவாரண ஊசி போட்டுக்கொண்டு பேட்டிங் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா- ஷுப்மான் கில் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் 309 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது.

    இந்த போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா - ஷுப்மான் கில் ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்த தவறிவிட்டனர்.

    இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 27 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்றைய 2-வது இன்னிங்சிலும் 22.1 ஓவரில் 71 ரன்கள் எடுத்தன. இரண்டு இன்னிங்சில் தொடக்க ஜோடியா 50 ரன்களை கடந்தனர்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் 1968-ல் அபித் - பரூக் இன்ஜினீயர் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்திருந்தது. அதன்பின் தற்போது ரோகித் சர்மா - ஷுப்மான் கில் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

    முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 26 ரன்களும், ஷுப்மான் கில் 50 ரன்களும் அடித்தனர். 2-வது இன்னிங்சில் ஷுப்மான் கில் 31 ரன்களும், ரோகித் சர்மா 52 ரன்களளும் அடித்தனர்.
    ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் ஆட்டட்தில் சென்னை அணி ஒடிசாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது. 9-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்திடம் தோற்றது.

    சென்னையின் எப்.சி. 9 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    சென்னையின் எப்.சி. 10-வது ஆட்டத்தில் ஒடிசா அணியை இன்று மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிறது.

    சென்னை அணி ஒடிசாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் விளையாடிய பிறகு சென்னை அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் வெற்றி பாதைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஒடிசா அணி 9 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வியுடன், 5 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜாம்செட்பூர்- கேரளா பிளாஸ்டர் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 22 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 20 புள்ளியுடனும், ஐதராபாத், கோவா அணிகள் தலா 15 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.

    சிட்னி:

    இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன் எடுத்தனர். கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    94 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து இருந்தது. லபுஷேன் 47 ரன்னிலும், ஸ்டிவ் சுமித் 29 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 197 ரன்கள் முன்னிலை, கைவசம் 8 என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    3-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.லபுஷேன் 82 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 17-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 9-வது அரை சதமாகும்.

    இந்த ஜோடியை நவ்தீவ் சைனி பிரித்தார். லபுசேன் 73 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த மேத்யு வாடே (4 ரன்) விக்கெட்டையும் சைனி கைப்பற்றினார். 148 ரன்னில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்டீவ் சுமித் இந்த இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது 30-வது அரை சதத்தை பதிவு செய்தார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் சுமித் 81 ரன்னில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அப்போது ஸ்கோர் 208 ஆக இருந்தது.

    6-வது விக்கெட்டான கேமருன் கிரீன் - கேப்டன் டிம்பெய்ன் ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிரீன் தனது அரை சதத்தை எடுத்தார். 116 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை தொட்டார். அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.

    இருவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா ரன்களை தொடர்ந்து குவித்தது. 86-வது ஓவரில் அந்த அணி 300 ரன்னை குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேமரூன் கிரீன் 84 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதோடு ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை முடித்து கொண்டது. அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. டிம்பெய்ன் 39 ரன்னில் ஆட்டம் இழக்காமல் உள்ளார். அஸ்வின், சைனி தலா 2 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    407 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது.

    தொடக்க ஆட்டக்காரர்களான ஷூப்மன் கில் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கியது. சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியை ஹசில்வுட் பிரித்தார். ஷுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்த போது ஹசில்வுட் பந்தில் வெளியேறினார்.  மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார்.

    அந்த நம்பிக்கை ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. பந்துகளை தடுமாறாமல் விளையாடிய அவரை கம்மின்ஸ் ஷாட் பால் மூலம் வெளியேற்றினார். ரோகித் சர்மா 98 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    இதனையடுத்து புஜாரா ரகானே ஜோடி நிதானமான ஆட்டத்தை ஆடினர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்தது. ரகானே 4 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி இன்னும் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ளது.

    ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜடேஜா ஆடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ரி‌ஷப்பண்ட், ஜடேஜா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    கம்மின்ஸ் வீசிய பந்தில் ரி‌ஷப்பண்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவரால் நீண்ட நேரம் விளையாட முடியாமல் உடனடியாக ஆட்டம் இழந்தார்.

    மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றதால் ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் விருத்திமான் சகா விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.

    ஸ்டார்க் பந்தில் ஜடேஜாவின் இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜடேஜா ஆடமாட்டார் என்று தெரிகிறது. தேவைப்பட்டால் மட்டுமே அவர் சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் பேட்டிங்க் செய்ய களத்துக்கு வருவார்.

    ரி‌ஷப்பண்டுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை. இதனால் அவரால் பேட்டிங் செய்ய முடியும்.

    ஜடேஜா இல்லாமல் இந்திய அணி சிட்னி டெஸ்டில் விளையாடுவது பெரிய இழப்பாகும். அவர் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். 2-வது இன்னிங்சில் அவர் பந்து வீசாததால், ஆஸ்திரேலியா ரன்களை குவித்தது. வீரர்களின் காயம் சிட்னி டெஸ்டில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

    கடைசி டெஸ்டிலும் ஜடேஜா ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 407 ரன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்யா ரஹானே (5 ரன்), புஜாரா (9 ரன்) களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். 

    இதன்பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து மொத்தம் 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 47 ரன்களுடனும், சுமித் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. அதில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 87 ஒவர்களில் 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சைனி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கேப்டன் பெயின் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணிக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
    ×