என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சேலம் அணிக்கு எதிராக திருப்பூர் அணியின் கேப்டன் பிரான்சிஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பெராரியோ 40 ரன்கள் எடுத்தார். அபிஷேக் 38 ரன்களும் எடுத்தார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். கேப்டன் பிரான்சிஸ் அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதமடித்த பிரான்சிஸ்

    இறுதியில், திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சேலம் அணி சார்பில் பெரியசாமி, முருகன் அஷ்வின், பிரனேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    புஜி மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்ளிங் போட்டியில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு கரபஸ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று, புஜி மலைப்பகுதியில் சைக்ளிங் போட்டி நடைபெற்றது.

    இதில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு கரபஸ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரமான 234 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 5 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

    பெல்ஜியம் நாட்டு வீர‍ர் வான் ஏர்ட் வூட், ஸ்லோவேனியா நாட்டு வீர‍ர் போக‍கார் தாதேஜ் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக முன்னேறிய நிலையில், இந்திய வீராங்கனைகளின் கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை.
    டோக்கியோ:

    ஒலிம்பிக் தொடரில் இன்று பெண்களுக்கான ஹாக்கி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், உலகின் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி  5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

    ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீராங்கனை ராணி ராம்பால் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என சம நிலையில் இருந்தது.

    ஆனால் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக ஆடி 4 கோல்கள் அடித்தனர். இந்திய வீராங்கனைகளின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் 5-1 என நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 165 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய ஜெகதீசன் 95 ரன்கள் விளாசினார். சசிதேவ் 20 ரன்களும், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் 19 ரன்களும் எடுத்தனர்.

    இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக கேப்டன் பாபா அபராஜித், சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் அபராஜித், 55 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.

    விக்கெட் வீழத்திய உற்சாகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

    அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரஞ்சன் பால் அரை சதம் கடந்து அதிரடியை தொடர்ந்தார்.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் ரஞ்சன் பால் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 160. அதன்பின்னர் 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் பாபா இந்திரஜித் அபாரமாக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    அதிரடியாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

    ஆனால், மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

    மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், நங்கூரம் போல் நிலைத்து நின்ற ஜெகதீசன், நெல்லை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.

    விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் அதிசயராஜ் டேவிட்சன்

    20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
    20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நோவக் ஜோகோவிச், ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
    20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நோவக் ஜோகோவிச்,  ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.

    ஒலிம்பிக் போட்டியில் நம்பர் ஒன் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா 34), தனது முதல் சுற்றில் பொலிவியா வீரர் ஹூகோ டெலியனுடன் விளையாடினார். இதில், 6-2, 6-2 என்ற 2 செட்டில் பொலிவியா வீரரை ஜோகோவிச்  விழ்த்தினார்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்று இருக்கும் ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுடன் அடுத்துவரும் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
    ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி தோல்வியடைந்தார்.
    ஒலிம்பிக் ஜுடோ விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு தகுதிச்சுற்று இன்று காலை நடைபெற்றது.

    இதில், இந்தியாயை சேர்ந்த சுஷிலா தேவி, ஹங்கேரி வீராங்கனை இவாவிடம் மோதினார்.  இவாவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து சுஷிலா தேவி  வெளியேறினார்.
    தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த சவுரப் சவுத்ரி, இறுதிச்சுற்றில் 7-வது இடத்தை பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
    ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா பங்பேற்றனர்.  6 சுற்றுகளை கொண்ட தகுதிச்சுற்றில் சவுரப் சவுத்ரி சிறப்பாக செயல்பட்டு 586.28 (95, 98, 98, 100, 98 மற்றும் 97 ) புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி, இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய என்ற சிறப்பையும் பெற்றார்.  ஆனால் இறுதிச்சுற்றில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. அவரால் 7-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் பதக்க வாய்ப்பு நழுவியது.

    ஈரான் வீரர் முதல் இடத்தையும், செர்பிய வீரர் இரண்டாவது இடத்தையும், சீன வீரர்  மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பதக்கம் வென்றனர்.
    பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    ஒலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.  இதில், இந்தியாவை சேர்ந்த சாய் பிரணீத், இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனை எதிர்கொண்டார்.

    இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனிடம் 21-17, 21-15 என்ற நேர்செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார்.

    இந்திய வீரர் சாய் பிரணீத்  கடந்த 2010 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2016 தெற்காசிய போட்டிகளின் அணி பிரிவில் தங்கம், 2016 மற்றும் 2020 ஆசிய சாம்பியன்ஷிப்பின் அணி பிரிவில் வெண்கலம், 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் ஆகியவை சாய் பிரனீத் பெற்ற மிக முக்கிய வெற்றிகள் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், மீராபாய் சானுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் வெல்வதற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    சுவீடன் வீராங்கனைக்கு எதிராக கடுமையான போராட்டத்திற்குப்பின் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 4-3 என வெற்றி பெற்றார்.
    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி சுவீடனைச் சேர்ந்த  லிண்டா பெர்க்ஸ்ட்ராமை முதல் சுற்றில் எதிர்கொண்டார். சுதிர்தா முகர்ஜிக்கு சுவீடன் வீராங்கனை கடும் சவாலாக விளங்கினார்.

    முதல் கேம்-ஐ சுகிர்தா 5-11  என இழந்தார். 2-வது செட்டை 11-9 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 11-13 எனவும், 9-11 எனவும் இழந்து 1-3 என பின்தங்கினார்.

    அதன்பின் சுதாரித்துக்கொண்ட சுதிர்தா அடுத்த மூன்று கேம்ஸ்களையும் 11-3, 11-9, 11-5 என கைப்பற்றி மேட்சில் 4-3 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கவுசிக் காந்தி, ஜெகதீசன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினா.

    சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி: கவுசிக் காந்தி (கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சுஜய், உதிரசாமி சசிதேவ், ராஜகோபால் சதிஷ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், தேவ் ராகுல், அலெக்சாண்டர்.

    நெல்லை அணி: பாபா அபராஜித் (கேப்டன்), லக்ஸ்மேஷா சூர்யபிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித் (விக்கெட்கீப்பர்), மோகன் அபினவ், சஞ்சய் யாதவ், அர்ஜூன் மூர்த்தி, ஹரிஷ், ஷாருண் குமார், அஜித் குமார், அதிசயராஜ் டேவிட்சன்.
    ×