என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதிர்தா முகர்ஜி
    X
    சுதிர்தா முகர்ஜி

    டேபிள் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் சுதிர்தா முகர்ஜி முதல் சுற்றில் வெற்றி

    சுவீடன் வீராங்கனைக்கு எதிராக கடுமையான போராட்டத்திற்குப்பின் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 4-3 என வெற்றி பெற்றார்.
    டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி சுவீடனைச் சேர்ந்த  லிண்டா பெர்க்ஸ்ட்ராமை முதல் சுற்றில் எதிர்கொண்டார். சுதிர்தா முகர்ஜிக்கு சுவீடன் வீராங்கனை கடும் சவாலாக விளங்கினார்.

    முதல் கேம்-ஐ சுகிர்தா 5-11  என இழந்தார். 2-வது செட்டை 11-9 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 11-13 எனவும், 9-11 எனவும் இழந்து 1-3 என பின்தங்கினார்.

    அதன்பின் சுதாரித்துக்கொண்ட சுதிர்தா அடுத்த மூன்று கேம்ஸ்களையும் 11-3, 11-9, 11-5 என கைப்பற்றி மேட்சில் 4-3 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×