என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிரேட் பிரிட்டன் வீராங்கனைக்கு ஒரு கேம்-ஐ கூட விட்டுக்கொடுக்காமல் 4-0 என முதல் சுற்றில் வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா.
    டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார்.  கலப்பு இரட்டையர் பிரிவில் கோட்டைவிட்ட மணிகா பத்ரா, ஒற்றையர் பிரிவில் அசத்தினார்.

    முதல் நான்கு கேம்ஸ்களையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி கிரேட் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இந்தப் பிரிவில் அவருக்கும் சீனாவின் ஹாவு ஷிஹூயுக்கும் தங்கப் பதக்கம் வெல்வதில் போட்டி இருந்தது.
    இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார் மீராபாய் சானு.

    மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இந்தப் பிரிவில் அவருக்கும் சீனாவின் ஹாவு ஷிஹூயுக்கும் தங்கப் பதக்கம் வெல்வதில் போட்டி இருந்தது.

    117 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்துக்குப் போட்டியிட்ட மீராபாய் சானுவால், அதில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவேயாகும்.

    49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

    இந்த வெற்றி குறித்து ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரான அபினவ் பிந்த்ரா, 'டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய இந்த சம்பவம் இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் ஆகும். இதற்கு முன்னர் கர்ணம் மல்லேஷ்வரி, இந்தியாவுக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு, 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது தான் முதன் முறையாக இந்தியா சார்பில் ஒரு வீராங்கனை பளுதூக்குதலில் வெள்ளி வெல்கிறார்.
    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், அபூர்வி சண்டிலா ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர். இருவராலும் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது பரிதாபமே.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

    6 சுற்றுகளை கொண்ட தகுதிச்சுற்றில் சவுரப் சவுத்ரி சிறப்பாக செயல்பட்டு 586.28 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் 4-வது வாய்ப்பில் 100 புள்ளிகளை எடுத்து முத்திரை பதித்தார்.

    மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மாவால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அவர் 575.19 புள்ளிகள் பெற்று 17-வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    சீனாவை சேர்ந்த 2 வீரர்களும், ஜெர்மனி, உக்ரைன், ஈரான், கொரியா, செர்பியாவை சேர்ந்தவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.


    ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் கடைசி வீரராக சென்ற சுமித் நகல், முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நகல் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த டெனிஸ் இஸ்டாமினை எதிர்கொண்டார். சுமித் நகல் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.

    2-வது செட்டிலும் சுமித் நகலே ஆதிக்கம் செலுத்தினார். 4-2 என முன்னிலையில் இருந்த நிலையில் 5-வது கேம்ஸை வெல்ல கடுமையாக போராட வேண்டியிருந்தது. இறுதியில் 5-வது கேம்ஸை கைப்பற்றி 5-2 என முன்னிலை பெற்றார்.  உஸ்பெகிஸ்தான் வீரரின் சர்வீஸை முறியடித்து கேம்ஸை கைப்பற்றினால் போட்டியில் வெற்றி (2-0) பெறலாம் என்ற நிலையில், சுமித் நகலால் கேம்ஸை கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஸ்கோர் 5-3 என ஆனது.

    அடுத்து சுமித் நகல் சர்வீஸ் செய்தார். சுமித் நகல் சர்வீஸை உஸ்பெகிஸ்தான் வீரர் முறியடித்தார். இதனால் 5-4 என சுமித் நகலின் முன்னணி இடைவேளை குறைந்தது. உஸ்பெகிஸ்தான் வீரரின் அடுத்த சர்வீஸையும் சுமித் நகலால் முறியடிக்க முடியவில்லை. இதனால் செட் 5-5 சமன்பெற்றது.

    அதன்பின் இருவரும் அவரவர்களுடைய சர்வீஸ் கேம்ஸ்களை கைப்பற்ற ஸ்கோர் 6-6 என சமநிலை பெற்றது. இதனால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் 8-6 எனக்கைப்பற்றினார். ஆகவே 2-0 என வெற்றிபெறும் வாய்ப்பை சுமித் நகல் இழந்தார். இந்த சுற்றை கைப்பற்ற சுமித் நகல் 71 நிமிடங்கள் போராடினார்.

    3-வது சுற்றில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர்.  இறுதியில் சுமித் நகல் 6-4 என கைப்பற்றி உஸ்பெகிஸ்தான்  வீரரை வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற சுமித் நகலுக்கு 2 மணி நேரம் 34 நிமிடங்கள் தேவைப்பட்டன.
    ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடிய சரத் கமல் - மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது.
    ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில்  உலக ரேங்கில் மூன்றாவது இடத்தில் உள்ள சீன தைபே ஜோடி இந்தியாவின் சரத் கமல் - மணிகா பத்ரா எதிர்த்து விளையாடியது.

    போட்டியில் இந்திய ஜோடியான சரத் கமல் - மணிகா பத்ரா  சீன தைபே ஜோடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.

    ஏழு கேம்ஸ் கொண்ட போட்டியில்  8-11, 6-11, 5-11, 4-11 என தொடர்ந்து நான்கு கேம்ஸ்களையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.  இந்த ஆட்டம் மொத்தம் 27 நிமிடங்களே நீடித்தது.

    இன்று மதியம் 12 மணியளவில்  பெண்கள் ஒற்றையர் போட்டியில் மணிகா பத்ரா, இங்கிலாந்து வீராங்கனையுடன் முதல் சுற்றுப்போட்டியில் மோத உள்ளார்.
    பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த நார்வே வீராங்கனை இறுதிச்சுற்றில் ஏமாற்றம் அளித்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல்  போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நார்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உள்பட 8 பேர் தகுதி பெற்றனர்.

    இறுதி போட்டியில்  சீனாவைச் சேர்ந்த யாங் கிங் 251.8 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் சீனா டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 

    இரண்டாவதாக, ரஷியாவைச் சேர்ந்த கைலாஷினா அனஸ்டாசிட்ட 251.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். அடுத்து , சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரிஸ்டென் நினா 230.6  புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.

    தகுதிச்சுற்றில் சீன வீராங்கனை 6-வது இடத்தையும், ரஷிய வீராங்கனை 7-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை 8-வது இடத்தையும் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    3-வது காலிறுதி ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    ஆனால், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்மன்ப்ரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

    3-வது காலிறுதி ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால் நியூசிலாந்து அடுத்த நிமிடத்தில் (27-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.

    4-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது.
    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று(சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    இதில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஒரு ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது. கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. இதையடுத்து வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதே சமயம் தனது தொடக்க லீக்கில் திருச்சி வாரியர்சிடம் 74 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    3-வது செட்டில் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் அபாரமாக அம்பு எய்ததன் மூலம், சீன தைபே ஜோடியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.
    வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டில் இந்திய அணி 35 புள்ளிகளும், சீன தைபே 36 புள்ளிகளும் பெற்றன. இதனால் சீன தைபே அணி 2 புள்ளிகள் பெற்றது. 2-வது செட்டில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் இந்திய அணி 1-3 என பின்தங்கியது.

    3-வது செட்டில் தோல்வி அல்லது டிரா ஆனால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் இந்திய அணி, இந்த செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அம்புகளை எய்தனர். நான்கு முறை எய்த அம்புகளுக்கும் தலா 10 புள்ளிகள் கிடைத்தது. சீன தைபே அணியால் 35 புள்ளிகள் பெற இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. இதனால் செட் பாயிண்ட் 3-3 என சமநிலை பெற்றது.

    இதனால் 4-வது செட் நடைபெற்றது. இதில் முதல் அம்பில் இரு அணிகளும் 9 மற்றும் 8 என புள்ளிகள் பெற்றன. ஆனால் கடைசி இரண்டு அம்புகளிலும் இந்திய அணி தலா 10 புள்ளிகள் பெற்றது. ஆனால் சீன தைபே அணியால் 8 மற்றும் 9 புள்ளிகள் மட்டும் பெற முடிந்தது. இதனால் இந்திய அணி 37 புள்ளிகள் பெற்று 2 செட் பாயிண்ட்-ஐ பெற்றது. சீன தைபே அணி 36 புள்ளிகள் பெற்றது.

    இதனால் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நார்வே மற்றும் கொரிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
    டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நடைபெற்றது.

    இந்தியா சார்பில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சந்தேலா ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 சீரிஸ், ஒரு சீரிஸ்க்கு 10 சுடுதல் என மொத்தம் 60 முறை சுடுதல் வேண்டும். ஒரு முறை இலக்கை துல்லியமாக சுட்டால் 11 புள்ளிகள் வழங்கப்படும்.

    வாலறிவன் ஒன்று முதல் ஆறு சீரிஸில் முறையே 104.3, 104.0, 106.0, 104.2, 103.5, 104.5 புள்ளிகள் பெற்றார். இவர் பெற்ற மொத்த புள்ளிகள் 626.5  அவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவவில்லை. வாலறிவன் 16-ம் இடத்தையே பிடித்தார். முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

    மற்றொரு வீராங்கனை அபூர்வி சந்தேலா ஆறு சீரிஸிலும் சேர்த்து 104.5, 102.5, 104.9, 104.2, 102.2, 103.6 (மொத்தம் 621.9) புள்ளிகள் பெற்று 36-ம் இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

    நார்வே வீராங்கனை ஜீனேட் ஹெக் டியூஸ்டாட் 632.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். கொரிய வீராங்கனை 631.7 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.
    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்புள்ள துப்பாக்கி சுடுதலில் இந்திய நட்சத்திரங்கள் இளவேனில், சவுரப் சவுத்ரி இன்று களம் காணுகிறார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. முதல் நாளில் பதக்கபோட்டிகள் எதுவும் கிடையாது. 2-வது நாளான இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்குரிய போட்டிகள் நடக்கின்றன. இந்த ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கம் துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிளில் வழங்கப்படுகிறது.

    துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 15 பேர் கொண்ட வலுவான அணியை அனுப்பியுள்ளது. அவர்கள் குரோஷியாவில் பயிற்சிகளுடன் போட்டிகளில் பங்கேற்று விட்டு டோக்கியோவுக்கு வந்துள்ளனர்.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.

    10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டிலா, இளவேனில் வளறிவான் ஆகியோர் அடியெடுத்து வைக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளவேனில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 முறை தங்கம் வென்றவர். ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வரும் அவர் பதக்க மேடையில் ஏறுவதற்குரிய வாய்ப்பு அதிகம். ராஜஸ்தானைச் சேர்ந்த 28 வயதான அபூர்வி தரவரிசையில் 11-வது இடம் வகித்தாலும் உலக போட்டியில் மகுடம் சூடிய அனுபவம் உண்டு. தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் அவரும் அசத்தலாம்.

    தகுதி சுற்றில் மொத்தம் 49 பேர் பங்கேற்கிறார்கள். இதில் இருந்து டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதி சுற்று இந்திய நேரப்படி காலை 7.15 மணிக்கு நடக்கிறது.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி குறி வைக்கிறார்கள். இவர்கள் தங்களது பிரிவில் உலக தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் எதிர்பார்ப்புக்கு குறைவில்லை.

    வழக்கறிஞர் படிப்பு படித்து விட்டு 2017-ம் ஆண்டில் துப்பாக்கியை கையில் எடுத்து இன்று ‘நம்பர் ஒன்’ நிலையை எட்டியிருக்கும் அபிஷேக் வர்மா 2019-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் கைப்பற்றியவர். 19 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சவுரப் சவுத்ரி இளையோர் விளையாட்டிலும், ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டவர். டெல்லியில் 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் அதிக புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்தவர்.

    இவர்கள் மட்டும் 8 பேர் கொண்ட இறுதி சுற்றுக்குள் கால்பதித்து விட்டால் அதன் பிறகு பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும். காலை 10.15 மணிக்கு தகுதி சுற்றும், பகல் 12 மணிக்கு இறுதி சுற்றும் நடக்கிறது.
    ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்காளதேசம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
    ஹராரே:

    வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. 

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மாதேவிர் 73 ரன்கள் எடுத்தார். ரியான் பர்ல் அதிரடியாக ஆடி 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால் ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், வங்காளதேசம் 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 24 ரன்கள் எடுத்தார்.
    இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
     
    ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜோங்வே, மசாகட்சா தலா 3 விக்கெட்டும், சதாரா, முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது வெஸ்லி மாதேவிருக்கு அளிக்கப்பட்டது.
    ×